ஒத்தகருத்துச் சொற்கள் - பகுதி 03
ஒத்தகருத்துச் சொற்கள் பகுதி 3
ஒத்தகருத்துச் சொற்கள் என்றால் என்ன என்பதையும் மற்றும் அகர வரிசையில் அமைந்த ஒத்தகருத்துச் சொற்கள் சிலவற்றையும் பகுதி ஒன்றில் பார்த்தோம். அதேபோன்று "ஆ","இ"வரிசையில் அமைந்த ஒத்தகருத்துச் சொற்கள் சிலவற்றை பகுதி இரண்டின் ஊடாக அறிந்துகொண்டோம். அதே போன்று"ஈ" , "உ", "ஊ", "எ", "ஏ", "ஐ", "ஒ", "ஓ", "ஔ" வரிசையில் அமைந்த ஒத்தகருத்துச் சொற்கள் சிலவற்றை இப்பகுதியினூடாக அறிந்து கொள்வோம்.
ஈ
- ஈகை - கொடை
- ஈசன் -கடவுள்
- ஈடுபாடு -விருப்பம்
- ஈடேறுதல்- உய்வடைதல்
- ஈதல்- கொடுத்தல்
- ஈழம் -இலங்கை
- ஈறு- முடிவு
உ
- உடம்பு -தேகம், காயம்
- உண்ணுதல் -அருந்துதல்
- உன்னுதல் -நினைத்தல்
- உலவு -உலவுதல்
- உழவு -பயிர்த்தொழில்
- உரி -தோல்
- உறி- பொருள் வைக்கும் உறி
- உறக்கம் -நித்திரை
- உவகை -ஆனந்தம்
- உளி - ஒரு கருவி
- உளை -வருத்து
- உரப்பு -அதட்டு
- உரவு - வலிமை
- உறவு - சுற்றம்
- உரஞ்சுதல் -தேய்த்தல்
- உறிஞ்சு- உள்ளே உள்ளே ஈவு
- உறுக்கல்- அதட்டல்
- உடு -நட்சத்திரம்
- உடுக்கை -ஆடை
- உடைமை -செல்வம்
- உட்கிடக்கை -மனக்கருத்து
- உண்டி -உணவு
- உதரம் -வயிறு
- உதிரம் -இரத்தம்
- உதாசீனம் -அலட்சியம்
- உதாரணம் - மேற்கோள்
- உத்தரவு -கட்டளை
- உபகாரம்- உதவி
- உபதேசம் -போதித்தல்
- உபவாசம் -நோன்பு
- உபாயம் -தந்திரம்
- உமிழ்தல் -துப்புதல்
- உம்பர் -தேவர்
- உயில் -மரண சாசனம்
- உய்தி -ஈடேற்றம்
- உருளி- சில்லு
- உரோமம் -மயிர்
- உலா -பவனி
- உவரி -கடல்
- உழுபடை -கலப்பை
- உள்ளம் -மனம்
- உற்சவம் -திருவிழா
- உதயம் -புலரி ,வைகறை
- உண்மை -சத்தியம்
ஊ
- ஊறு- இடையூறு
- ஊக்கம் -முயற்சி
- ஊண்- உணவு
- ஊதியம் -சம்பளம்
- ஊர் -கிராமம்
- ஊர்தி -வாகனம்
- ஊழி- உலக முடிவு
- ஊழியம் - தொண்டு
- ஊழ்- விதி
எ
- எருது -இடபம்
- எண்- இலக்கம்
- என் -என்னுடைய
- எரி -நெருப்பு
- எறி -வீசு
- எச்சரிக்கை -முன்னறிவிப்பு
- எச்சில் -உமிழ்நீர்
- எண்ணம் -நினைப்பு
- எயிறு -பல்
- எழில் -அழகு
- எழுச்சி- கிளர்ச்சி
- எள்ளல் - இகழ்ச்சி
- எயில் - வேலி, அரண்
ஏ
- ஏகம் -ஒன்று
- ஏகாந்தம் -தனிமை
- ஏதிலார் -பகைவர்
- ஏது -காரணம்
- ஏந்திழை- பெண்
- ஏமம் -பாதுகாப்பு
- ஏரி- நீ்ர்நிலை
- ஏளனம் -இகழ்ச்சி
- ஏறு- எருது
- ஏற்றம் -உயர்வு
- ஏற்பாடு -ஒழுங்கு
ஐ
- ஐக்கியம் -ஒற்றுமை
- ஐங்கரன் -விநாயகர்
- ஐஸ்வரியம்- செல்வம்
- ஐயப்பாடு -சந்தேகம்
ஒ
- ஒறு- தண்டி
- ஒத்தாசை - உதவி
- ஒப்பந்தம் - உடன்படிக்கை
- ஒலி- சத்தம் ,ஓசை
- ஒழி -முடித்துவிடு
- ஒளி -பிரகாசம்
- ஒப்பனை - அலங்கரித்தல்
- ஒப்பம் -கையொப்பம்
- ஒப்புரவு -உலக ஒழுக்கம்
- ஒய்யாரம் -ஆடம்பரம்
- ஒழுக்கம் -நடத்தை
- ஒற்றர்- தூதர்
ஓ
- ஓம்படை -பாதுகாப்பு
- ஓலக்கம் - சபா மண்டபம்
ஔ
- ஔடதம்- மருந்து
- ஔவியம்- பொறாமை
எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்>>>>
பகைவர்
பதிலளிநீக்குமாலை
நெருப்பு
பகைவர்
நீக்குமாலை
நெருப்பு
பிரமாண்டம்
நீக்குசுவாரசியம்
பதிலளிநீக்குஆவல்
நீக்குசோலை என்பதன் ஒத்த கருத்து
பதிலளிநீக்குபொழில்
நீக்குஅர்த்தம் என்பதன் ஒத்த சொல்
பதிலளிநீக்கு