மரபுத்தொடர்கள் 50 ( Tamil idioms and phrases ) - தமிழ் களஞ்சியம்360
மரபுத் தொடர்கள்
ஒரு சொல் அல்லது சொற்றொடர் அதன் நேர்பொருளை உணர்த்தாமல் வழி வழியாக (மரபு வழியாக) வழங்கிவரும் பொருளை உணர்த்துவது மரபுத்தொடர் எனப்படும்.
பொதுவாக வழங்கும் மரபுத் தொடர்கள் , சமூகத்திற்கு சமூகம் வழங்கப்படும் மரபுத்தொடர்கள் எனும் அடிப்படையில் பல மரபுத்தொடர்கள் தமிழில் காணப்படுகிறன.
இதன் ஆங்கிலப் பதம் idioms and phrases என்பதாகும்.
மரபுத் தொடர்களுக்கான உதாரணங்கள்
- அள்ளிக் குவித்தல் - நிறையச் சம்பாதித்தல்
- அறைகூவுதல்- போருக்கு அழைத்தல்
- அரை மனிதன் - மதிப்பில்லாதவன்
- அண்டப்புழுகன்- பொய்காரன்
- அலைக்கழித்தல்- அலட்சியம் செய்தல்
- அறுதியிடுதல் - முடிவுகட்டுதல்
- அகடவிகடம்- தந்திரம்
- அரைப்படிப்பு - நிரம்பாத கல்வி
- அடியொற்றுதல்- பின்பற்றுதல்
- அள்ளியிறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்
- அடுக்கு பண்ணுதல் - ஆயத்தம் செய்தல்
- அடியிடுதல் - தொடங்குதல்
- அடிநகர்தல்- இடம்பெயர்தல்
- அடிபிழைத்தல் - நெறி தவறி நடத்தல்
- அடி திரும்புதல்- பொழுது சாய்தல்
- அடிப்பிடித்தல்- தொடருததல்
- அடி பிறக்கிடுதல் - பின்வாங்குதல்
- அரக்கப் பறக்க - விரைவாக
- அடியுறைதல் - வழிப்படுத்தல்
- அவசரக்குடுக்கை - பதற்றக்காரன்
- அகலக் கண் வைத்தல் - அளவு கடந்து போதல்
- அழுங்குப்பிடி - விடாப்பிடி
- அறுதியிடல் - முடிவு கட்டுதல்
- அமளி செய்தல் - குழப்பம் செய்தல்
- அடி பணிதல் - கீழ்ப்பணிதல்
- அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச் செய்தல்
- அகலக் கால் வைத்தல் - அளவுகடந்து போதல்
- ஆகாயக் கோட்டை - மிதமிஞ்சிய கற்பனை
- ஆறப்போடல் - பிற்போடல்
- ஆசை வார்த்தை - ஏமாற்றுப் பேச்சு
- ஆட்கொள்ளல் - அடிமை கொள்ளல்
- ஆழம் பார்த்தல் - ஒருவரின் தகுதி பற்றி ஆராய்தல்
- ஆயிரம்காலத்து பயிர் - நெடுங்காலம் நிலைத்திருத்தல்
- ஆடாபூதி - ஏமாற்றுக்காரன்
- இரண்டும் கெட்டான் - நன்மை தீமை அறியாதவன்
- இலை மறை காய் - வெளிப்படாது மறைந்திருத்தல்
- இளிச்சவாயன் - எளிதில் ஏமாறுபவன்
- இட்டுக்கட்டுதல் - இல்லாததை சொல்லுதல்
- இலவு காத்த கிளி - காத்திருந்து ஏமாறுதல்
- இரண்டு தோணியில் கால் வைத்தல் - ஒரே நேரங்களில் இரு செயல்களில் ஈடுபடல்
- ஈரல் கருகுதல் - வேதனை மிகுதல்
- ஈவிரக்கம் - கருணை
- ஈயோட்டுதல் - தொழிலெதுவுமின்றி இருத்தல்
- ஈடேறுதல் - உயர்வடைதல்
- உள்ளங்கையில் நெல்லிக்கனி - வெளிப்படையாக தெரிதல்
- உதவாக்கரை - பயனற்றவன்
- உப்பில்லாப் பேச்சு - பயனற்ற பேச்சு
- உச்சி குளிர்தல் - மிக்க மகிழ்ச்சி அடைதல்
- உருக்குலைதல் - தன்னிலையிலிருந்து மாறுபடல்
- உலை வைத்தல் - பிறருக்கு அழிவு வருவித்தல்
தொகுப்பு : தே.கஸ்தூரி
உடல் உறுப்புகள் பற்றிய மரபுத்தொடர்கள் பகுதிக்கு செல்ல»»»»
வறுமையுறல் எனும் பொருள் தரும் மரபுத்தொடர்
பதிலளிநீக்குஈவிரக்கம் சூழல்
பதிலளிநீக்குஈவிரக்கம்
நீக்குநீர்க்குமி
பதிலளிநீக்குவழிவழியாக
பதிலளிநீக்குஆணி அடித்தாற் போல
பதிலளிநீக்குகைவருதல்
பதிலளிநீக்குபணம் வருதல்
நீக்குநன்று
பதிலளிநீக்குகண்மூடித்தனமா
பதிலளிநீக்குஒளிவுமறைவு
பதிலளிநீக்குகங்கணம் கட்டுதல்
பதிலளிநீக்குகசக்கி பிழிதல்
பதிலளிநீக்கு