header

அண்மையவை

தொடர் மொழிக்கு ஒரு மொழி - தமிழ் களஞ்சியம்

தொடர் மொழிக்கு ஒரு மொழி

தொடர்மொழிக்கு ஒருமொழி



  • சுதந்திரமற்று வாழ்பவர்     - அடிமை
  • அரண்மனையில் பெண்கள் வசிக்குமிடம்     - அந்தப்புரம்
  • ஒரு நூலுக்கு நூலாசிரியர் தவிர்ந்த இன்னொருவரால் வழங்கப்படும் உரை     -   அணிந்துரை
  • அகரவரிசையில் சொற்களுக்குப் பொருள் கூறுவது     - அகராதி
  • தாய் தந்தையை இழந்தவன்     - அநாதை
  • முனிவர்கள் வாழும் இடம்     - ஆச்சிரமம்
  • ஆடு மேய்ப்பவன்     - இடையன்
  • தானும் உண்ணாமல் பிறருக்கும் கொடுக்காதவன்     -  உலோபி
  • வீண் செலவு செய்பவன்     - ஊதாரி
  • அரசன், ஆசிரியர், தந்தை, தாய், தமையன்     - ஐங்குரவர்
  • மட்பாண்ட வேலை செய்பவன்     - குயவன்
  • கட்டட வேலை செய்பவன்     - கொத்தன்,மேசன்
  • சிறை தண்டனை பெற்றவன்     - கைதி
  • குற்றம் புரிந்தவரை தங்கவைக்கும் இடம்     -  சிறைச்சாலை
  • ஒருவர்/ ஒரு பொருள் தானே தன் கதையை கூறுதல்     - சுயசரிதை
  • மற்றவர்களை பற்றிய அக்கறை இல்லாதவன்     - சுயநலவாதி
  • மனைவியை இழந்தவன்     - தபுதாரன்
  • மரவேலை செய்பவன்     -  தச்சன்
  • நடக்க இருப்பவற்றை முன்கூட்டியே கூறுபவர்      - தீர்க்கதரிசி
  • விசாரணை முடிவில் நீதிபதியால் வழங்கப்படுவது     - தீர்ப்பு
  • பேரூந்து பயணச்சீட்டு வழங்குபவர்     - நடத்துனர்
  • கடவுள் இல்லை என்று வாதிடுபவன்     - நாத்திகன்
  • ஒன்றுபோல் இருக்கும் வேறொன்று     -  போலி
  • நூலாசிரியர் தாம் இயற்றிய நூலை பற்றிக் கூறும் உரை     -  முன்னுரை
  • கணவனை இழந்தவள்     - விதவை/ கைம்பெண்
  • தேர்தல் ஒன்றில் போட்டியிடுபவன்     - வேட்பாளர்
  • விலங்குகளை வேட்டையாடுபவன்     -  வேடன்
  • ஒன்றுபோல் இருக்கும் வேறொன்று     -  போலி



21 கருத்துகள்:

  1. ஒருவர் தன் உருவத்தை மாற்றிக் கொள்வது

    பதிலளிநீக்கு
  2. ஒன்றைப் போல பிரதியெடுத்தல்

    பதிலளிநீக்கு
  3. கடலும் வானமும் ஒன்றை ஒன்று தொடுவது போன்ற காட்சி

    பதிலளிநீக்கு
  4. நிம் மற்றும் சொத்துக்களைஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பெற்று பயனடைவர் செலுத்தும் நிதி

    பதிலளிநீக்கு
  5. அரசர்களுக்கு எல்லாம் அரசன்?

    பதிலளிநீக்கு
  6. குடும்பத்தின் கடைசி பிள்ளை

    பதிலளிநீக்கு
  7. ஒரு நூலை வெளியிடுவோர் அந்நூலைப் பற்றி கூறும் உரை

    பதிலளிநீக்கு
  8. இலை தலை கொண்டு வேயப்பட்ட கடிசை

    பதிலளிநீக்கு