அடுக்கிடுக்கு தொடர்
அடுக்கிடுக்கு தொடர்
அடுக்குத் தொடர்களுள்ளே சில முன்மொழி விகாரம் அடைந்து கூறவந்த பொருளை அழுத்திக் கூறவும் சிறப்பித்துக்காட்டவும் உதவுகின்றன. இவ்வாறு அமையும் சொற்களை அடுக்கிடுக்குத் தொடர் என்பர்.
- பென்னம்பெரிய : மிகப் பெரிய
(உ+ம்) கொழும்பு நகரத்தின் மத்தியில் பென்னம் பெரிய சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
- சின்னஞ்சிறிய : மிகச் சிறிய
(உ+ம்) அத் தீவில் உள்ள மனிதர்கள் அனைவரும் சின்னஞ் சிறியவர்களாக காணப்பட்டனர்.
- கன்னங்கரிய : மிகவும் கரிய
(உ+ம்) பாதையில் சென்று கொண்டிருக்கும் போது கன்னங்கரிய யானை ஒன்று வழியை மறித்தது.
- தன்னந் தனியே
(உ+ம்) இருண்ட அந்தக் கொடிய காட்டில் அவள் மட்டும் தன்னந் தனியே உலாவித் திரிந்தாள்.
- வெள்ளைவெளேர்
(உ+ம்) அன்று அவள் வெள்ளை வெளேரென்று தாவணியில் காட்சியளித்தாள்
- செக்கச் சிவந்த
(உ+ம்) இன்று அடிவானம் செக்கச் செவேலென்று காணப்பட்டது.
- மும்மூன்று
(உ+ம்) எனது அம்மா எங்கள் ஒவ்வொருவரிற்கும் உரொட்டிகளை மும்மூன்றாக பிரித்து தந்தாள்.
- பச்சைப்பசேல்
(உ+ம்) அந்த மைதானத்தின் தரை சிறு புற்கள் படர்ந்து பச்சைப்பசேலென்றிருந்தது.
- நடுநடுங்கி
(உ+ம்) புலியால் துரத்தப்பட்ட முயல் புதர் மறைவில் நடுநடுங்கி கொண்டிருந்தது.
- நட்டநடு
(உ+ம்) அந்தச் சாமியார் நட்டநடு இராத்திரியில் சுடுகாட்டிற்கு செல்வார்.
- கூனிக்குறுகி
(உ+ம்) தன் தவறை உணர்ந்த கண்ணன் தந்தை மு கூனிக் குறுகி நின்றான்.
12. பிய்த்துப்பிடுங்கி
- வெட்ட வெளி
(உ+ம்) பழைய ஊரைப் பார்க்க சென்ற ஆயத்தனா அங்கு இருந்த வீடுகள் மரங்கள் ஏதுமின்றி அவ் இடம் வெட்ட வெளியாக காட்சி அளித்ததை கண்டு அதிர்ந்து போனாள்.
- கன்னங்கரேல்
(உ+ம்) சுந்தரியின் கூந்தல் கன்னங்கரேலென இருந்தது.
- கொதி கொதித்து
(உ+ம்) அவனது செயலினால் மாலா கோபத்தில் கொதிகொதித்தாள்.
- தெள்ளத் தெளிந்து
(உ+ம்) கிணற்றிலிருந்த தண்ணீர் தெள்ளத் தெளிந்து காணப்பட்டது.
அடுக்கிடுக்குத் தொடர் தொடர்பான சில பயிற்சிகள்
பின்வரும் வாக்கியங்களில் பொருத்தமான அடுக்கு தொடர்களை இட்டு நிரப்புக.
- ........................ வண்ணப் பறவைகளை கண்ட சிறுவர்கள் குதூகலித்தார்கள்.
- நள்ளிரவில் .................... செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
- கோவலன் இறந்த செய்தியை கேட்ட கண்ணகி....................... போனாள்
- வயல்வெளி................. காட்சி அளித்தது
- ................ வாகனங்கள் நகர வீதிகளில் வலம் வருகின்றன.
தமிழ் களஞ்சியம் 360 தளத்தினை அப்ளிகேசன் வடிவில் பயன்படுத்தி பயன்பெற விரும்பினால் கீழுள்ள link ஐ click செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்
அடுக்கிடுக்குத் தொடர் இன்னும் தேவை அத்தோடு அதற்கான பொருளையும் அனுப்புங்கள்
பதிலளிநீக்குநிச்சயமாக. புதிய புதிய சொற்கள் இனங்காணப்படுமிடத்து உடனடியாக தரவேற்றம் செய்யப்படும்.
நீக்குகண்ணுக்குக்கண்
நீக்குநித்தநித்தம்
முத்துக்கு முத்தாய்