header

அண்மையவை

ஒரு பொருள் பன்மொழி - தமிழ் களஞ்சியம்

ஒரு பொருள் பன்மொழி / ஒரு பொருள் தரும் பல சொற்கள்

ஒரு பொருள் பன்மொழி



இயற்சொல் போல இயல்பாகப் பொருள் உணர்த்தாது அரிதாகப் பொருள் உணர்த்துவதாக வரும் சொல் திரிசொல் எனப்படும். திரிசொல்லானது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகியும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகியும் வரும். இங்கு அதன் ஒரு பகுதியான ஒரு பொருள் குறித்த பல சொற்களின் உதாரணங்கள் சிலவற்றை நோக்கலாம்.


  1. அன்பு :- நேசம், பரிவு, இரக்கம், பிரியம்
  2. அழகு :- வனப்பு, எழில், சுந்தரம், வடிவு, கோலம், சிங்காரம், வண்ணம், நிறம்
  3. அரசன் :- மன்னன், வேந்தன், கோன், புரவலன், நிருபன், கோ
  4. அகிம்சை :- துன்புறுத்தாமை, இன்னல் செய்யாமை
  5. அறிவுரை :- புத்திமதி, நல்லுரை, உபதேசம்
  6. அறிவு :- உணர்வு, ஞானம், மதி விவேகம், புத்தி
  7. அடி - பாதம், தாள், கால்
  8. இரவு :- இராத்திரி, கங்குல், நிசி, இருட்டு
  9. உணவு :- ஊண், ஆகாரம், அடிசில்,  உண்டி
  10. உண்மை :- மெய், சத்தியம், வாய்மை
  11. உதிரம் :- செந்நீர், குருதி, இரத்தம்
  12. ஊழியம் :- தொண்டு, பணி, சேவை, வேலை
  13. ஊதியம் :- சம்பளம், கூலி, இலாபம், ஆதாயம்
  14. ஒளி :- வெளிச்சம், சுடர், கதிர், பிரகாசம்
  15. குழந்தை :- மகவு, குழவி, சேய், சிசு, பிள்ளை, மழலை
  16. கணவன் :- கொழுநன், தலைவன், பதி, நாயகன்
  17. காற்று :- வளி, மாருதம், தென்றல், ஊதை, பவனம்
  18. கேடு :- நாசம், அழிவு, சேதம், சிதைவு
  19. தரித்தல் - அணிதல், சூடுதல், புனைதல், அலங்கரித்தல்
  20. ஆதி :- முதல்,ஆரம்பம்,தொடக்கம்
  21. குடித்தல்- அருந்துதல், பருகுதல், சுவைத்தல்
  22. ஞானம்- அறிவு, ஆற்றல், விவேகம், புத்தி, வித்தை
  23. ஒலி- ஓசை, அரவம், தொனி, சத்தம்
  24. உடல் - சரீரம், உடம்பு, மெய், மேனி
  25. அபாயம்- ஆபத்து, இடர், இடையூறு
  26. காடு - அடவி, கானகம், வனம், ஆரணியம்
  27. இனம்- உறவு, சுற்றம், கிளை,ஒக்கல்,பரிசனம்
  28. சோலை- உபவனம், கா, தண்டலை, நந்தவனம், பூங்கா, பொழில்
  29. கல்வி- கலை, வித்தை, படிப்பு
  30. ஆசிரியர்- ஆசான், உபாத்தியாயன், குரவர், தேசிகர்
  31. நீதி- தர்மம், நடு, நியாயம், நெறி
  32. நூல்- ஏடு, பனுவல், புத்தகம், பொத்தகம்
  33. குற்றம்- தவறு, பிழை, களங்கம், தப்பு, மாசு, காடு
  34. தடாகம்- ஏரி, குளம், பொய்கை, வாவி, கயம்
  35. அத்திப் பொழுது- சாய்பொழுது, சாயங்காலம், மாலை, செக்கல்
  36. உதயம்- வைகறை, காலைப்பொழுது, புலர், விடியல், தோற்றம்
  37. குதிரை- அசுவம், பரி, புரவி, அயம்
  38. தாமரை - கமலம், முளரி, அம்புயம்
  39. நித்திரை- உறக்கம், துயில், அனந்தல், சயனம்
  40. வயல்- பழனம், செய்,கழனி,புலனம்
  41. மேகம்- கொண்டல்,கார்,முகில்
  42. வண்டு- அறி, கரும்பு, மதுரகம்
  43. வாசனை- சுகந்தம், நாற்றம், விரை, மணம்
  44. தொழில்- ஊழியம், பணி, வேலை
  45. சத்தியம்- ஆணை, சபதம், சூழ், பிரமாணம், உண்மை
  46. சிங்கம்- அரி, ஆழி, கேசரி, கோளரி, சீயம்
  47. சொல்- கிழவி, கூற்று, மொழி, வாக்கு
  48. தேன்- மது, நறவு, தேறல், கள்
  49. குழந்தை- சிசு, சேய், பிள்ளை, குழவி
  50. வண்ணம்- சாயல், நிறம், வர்ணம்

எதிர்வரும் காலங்களில் இவை தொடர்பான பயிற்சிகளும் இவற்றுடன் இணைக்கப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்து கொள்வதுடன் எமது தமிழ் களஞ்சியம் 360 தளத்தினை அப்ளிகேசன் வடிவில் பதவிறக்கம் செய்து பயன்படுத்த நீங்கள் விரும்பினால் கீழே தரப்படும் லிங்கை அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ் களஞ்சியம் 360 App

1 கருத்து: