header

அண்மையவை

உவமைத்தொடர்கள் - தமிழ் களஞ்சியம்

உவமைத்தொடர்களும் அதன் பொருள்களும்

உவமைத் தொடர்கள்


  • அடி வயிற்றில் இடி விழுந்தது போல - கொடுந்துன்பம்
  • அத்தி பூத்தாற் போல - மிக அரிது
  • அம்பு பட்ட மான் போல - உயிர்த்துடிப்பு
  • அகழ்வாரை தாங்கும் நிலம்போல - துன்பம் செய்வோரை பொறுத்தல்
  •  ஆண்டிகள் கூடி மடங்கட்டினது போல - உருவாகா திட்டம்
  • ஆற்றில் கரைத்த புளி போல - வீண்விரயம்
  •  ஆலையில் அகப்பட்ட கரும்பு போல - மீள முடியாத துன்பம்
  • இடியோசை கேட்ட நாகம் போல - கலக்கமடைதல்
  • இருதலை கொள்ளியுள் எறும்பு போல - கரையேற முடியா துயர்
  • இரும்பும் காந்தமும் போல - கவர்ச்சி
  • இலைமறை காய் போல - மறைவான நிலை
  • இனம்பிரிந்த மான் போல - பிரிவுத்துயர்
  • உயிரும் உடலும் போல - பிரியா நட்பு
  • உருவும் நிழலும் போல - பிரியா நட்பு
  • உலக்கை தேய்ந்து உளி்ப்பிடி ஆனது போல - வரவரக் குறைதல்
  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - தெட்டத்தெளிவு
  • ஊசியும் நூலும்போல - பிரியா நட்பு
  • ஊமை கண்ட கனவு போல - கூற முடியாத நிலை
  • எட்டி பழுத்தாற் போல - பயனற்றது
  • எடுப்பார் கைப்பிள்ளை போல - சுயநிலை அற்றோர்
  •  எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல - தூண்டிவிடல்
  • ஏறவிட்டு ஏணி எடுத்தாற் போல - விட்டுக் கெடுத்தல்
  • ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை போல - உருவ ஒற்றுமை

9 கருத்துகள்:

  1. ஆகாயத்தில் கேட்டை கட்டுவது போல

    பதிலளிநீக்கு
  2. பயனற்ற முயற்சியில் தொடர்ந்து ஈடுபடல்

    பதிலளிநீக்கு
  3. பிள்ளையார் பிடிக்க போய் குரங்காய் முடிந்த கதை போல

    பதிலளிநீக்கு