header

அண்மையவை

பால் காட்டாத பெயர்ச்சொற்கள் / இருபாற் பொதுப்பெயர் - தமிழ் களஞ்சியம்

பால் காட்டாத சொற்கள்

பொதுப்பாற் பெயர்ச் சொற்கள்


பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும். அதில் உயர்திணைக்குரியதாக ஆண் பால், பெண் பால், பலர் பால் என்பனவும் அஃறிணைக்குரியதாக ஒன்றன் பால் பலவின்பால் என்பனவும் அமைந்துள்ளது.


இப் பால் பாகுபாட்டினுள் அடங்காமல் பொதுவாக வழங்கும் சொற்களே பால் காட்டாத சொற்கள் ஆகும். இவை பொதுப் பாற் சொற்கள் என்றும் அழைக்கப்படும். இங்கு உயர்திணைக்குரியதான பொதுப்பாற் சொற்கள் வழங்கப் பட்டுள்ளன.

  • அநாதை
  • அறிவாளி
  • அகதி
  • ஜனாதிபதி
  • ஏழை
  • விவேகி
  • புத்திசாலி
  • காரியதரிசி
  •  பிள்ளை
  • துரோகி
  • நோயாளி
  • சோம்பேறி
  • எதிராளி
  • வைத்தியர்
  • விருந்தாளி
  • தொழிலாளி
  • ஊமை
  • உலோபி
  • குழந்தை
  • ஞானி
  • கொலையாளி
  • வழக்காளி
  • பாவி
  • மந்திரி
  • மேதை
  • பேதை
  • ஆள்
  • விஞ்ஞானி
  • பிரயாணி
  • அதிபர்
  • தீர்க்கதரிசி
  • வள்ளல்

1 கருத்து: