ஆண்டுகளும் விழாக்களும்
விழைந்து அல்லது விரும்பி நடத்தப்படுவது விழா எனப்படுகிறது. அந்தவகையில் காகித விழா, திருமண விழா, காதணி விழா, வெள்ளி விழா, வைர விழா என்று பல விழாக்கள் சமூகத்தில் நடந்து வருவதை நாம் அவதானிக்கின்றோம்.
ஒவ்வொரு ஆண்டும் நிறைவிலும் கொண்டாடப்படும் விழாவிற்கு தமிழ் மொழியில் சிறப்பு பெயரிடப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது அதன் அடிப்படையில் 1 தொடக்கம் 100 வரையிலான ஆண்டுகளின் நிறைவில் கொண்டாடப்படும் விழாக்கள் பற்றிய சிறு தொகுப்பினை இங்கு பார்க்கலாம்.
- 01ம் ஆண்டு நிறைவு - காகித விழா
- 02ம் ஆண்டு நிறைவு - பருத்தி விழா
- 03ம் ஆண்டு நிறைவு - தோல் விழா
- 04ம் ஆண்டு நிறைவு - மலர் மற்றும் பழ விழா
- 05ம் ஆண்டு நிறைவு - மர விழா
- 06ம் ஆண்டு நிறைவு - சர்க்கரை கற்கண்டு/ இனிப்பு விழா
- 07ம் ஆண்டு நிறைவு - செம்பு விழா
- 08ம் ஆண்டு நிறைவு - வெண்கல விழா
- 09ம் ஆண்டு நிறைவு - மண்கலச விழா
- 10ம் ஆண்டு நிறைவு - தகர விழா
- 11ம் ஆண்டு நிறைவு - எஃகு விழா
- 12 ம் ஆண்டு நிறைவு - லினன் விழா
- 13 ம் ஆண்டு நிறைவு - பின்னல் விழா
- 14 ம் ஆண்டு நிறைவு - தந்த விழா
- 15ம் ஆண்டு நிறைவு - படிக விழா
- 20ம் ஆண்டு நிறைவு - பீங்கான் விழா
- 25ம் ஆண்டு நிறைவு - வெள்ளி விழா
- 30ம் ஆண்டு நிறைவு - முத்து விழா
- 40ம் ஆண்டு நிறைவு - மாணிக்க விழா
- 45ம் ஆண்டு நிறைவு - இரத்தின விழா
- 50ம் ஆண்டு நிறைவு - பொன் விழா
- 55ம் ஆண்டு நிறைவு - மரகத விழா
- 60ம் ஆண்டு நிறைவு - வைர விழா / மணி விழா
- 75ம் ஆண்டு நிறைவு - பவள விழா
- 80ம் ஆண்டு நிறைவு - அமுத விழா
- 100ம் ஆண்டு நிறைவு - நூற்றாண்டு விழா
இவை தவிர பின்வரும் விழாக்களும் சமூகத்தில் கொண்டாடப்படுவதை காணலாம்
- யாதாயினும் ஒன்றைத் தொடங்குவதற்காக எடுக்கப்படும் விழா - கால்கோள் விழா
- பிறந்தநாளில் எடுக்கப்படும் விழா - ஜெயந்தி விழா
- புதிய ஒரு நூலை வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் எடுக்கப்படும் விழா - அறிமுக விழா
- காது குத்தும் போது எடுக்கப்படும் விழா - காதணி விழா (விசேடமாக குழந்தைகளுக்கு கொண்டாடப்படுகிறது)
- 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது கும்பாபிஷேகம்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியில் கொண்டாடப்படும் விழாக்களை மனதில் பதியும் வண்ணம் கவிதையாக கீழ்க்காணும் இணையதள பக்கத்தில் வார்க்கப்பட்டுள்ளது. http://www.mathisutha.com/2010/10/2.html
எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>
ஜெயந்தி என்பது சமஸ்கிருதம். அது எப்படி தமிழ் சொல்லுக்குள் வரும்?
பதிலளிநீக்கு