header

அண்மையவை

இணை மொழிகள்

இணைமொழி

ஓசைநயம் பற்றியும் பொருட் செறிவு உடையனவாகவும் அமைந்து இருசொற்கள் இணைந்து வருமாயின் அது இணைமொழி எனப்படும். பல சொற்களில் விளக்க வேண்டிய ஒரு பொருளை ஓரிரு சொற்களில் இலகுவாக விளக்க உதவும்.

இதை மூன்று வகையாக பிரிக்கலாம்

  • ஒத்தகருத்துள்ள இணைமொழிகள்
          உ+ம் = சீரும் சிறப்பும்
                        ஏழை எளியவர்
  • எதிர்க்கருத்துள்ள இணைமொழிகள்
          உ+ம்= ஏற்ற இறக்கம்
                        இன்ப துன்பம்
  • ஓசைநயம் மிக்க இணைமொழிகள்
          உ+ம்= திட்டவட்டமாக
                        சின்னா பின்னம்

இணை மொழிகளும் பொருள்களும்

      1.  அருமை பெருமை - மிகச் சிறப்பு
      2. அங்கும் இங்கும் - எல்லா இடத்திலும், அலைச்சல்
      3. அல்லும் பகலும் - இரவும் பகலும்
      4. அக்கம் பக்கம் - அருகருகே
      5. அமளி துமளி - பேராரவாரம்
      6. அரை குறை - பூரணமற்றது
      7. அகடவிகடம் - தந்திரம்
      8. அகமும் முகமும் - உள்ளும் புறமும்
      9. அடக்க ஒடுக்கம் - பணிவு
      10. அடிபிடி - சண்டை
      11. அடிமுடி - மேலும் கீழும்
      12. அடிப்பும் அணைப்பும் - கோபமும் பாசமும்
      13. அடுப்பும் துடுப்புமாய் - எப்போதும் ஏதோ செய்துகொண்டிருத்தல்
      14. அடுகிடை படுகிடை- எந்நேரமும் ,ஓரிடத்தில் தங்குதல்
      15. அண்ட பிண்டம் - எல்லாப் பொருள்களும்
      16. அண்டை அயல் - அயலவர்
      17. அந்தியும் சந்தியும் -காலையும் மாலையும்
      18. அமளிதுமளி -பிரச்சினை /சண்டை
      19. அருஉரு - காண்பதற்கரிய
      20. அரைகுறை - முழுமை பெறாமல்
      21. அல்லும் பகலும் - இரவும் பகலும்
      22. இரவும் பகலும் - நாள் முழுவதும்
      23. அல்லை தொல்லை -பிரச்சினை
      24. அல்லோலகல்லோலம் - சிதறுண்டு/ அலங்கோலம்
      25. அலைந்து குலைந்து -கஷ்டப்படுத்தி/ சீரழிந்து
      26. அழித்தொழித்து - முற்றாக அழித்து
      27. அழுங்கி புழுங்கி -பொறாமை
      28. அழுத்தம் திருத்தமாய் -உறுதியாக
      29. அழுது தொழுது -இரத்தல்
      30. அள்ளாடித்தள்ளாடி - உறுதியின்மை
      31. அற்றார்க்கும் அயலார்க்கும் - எல்லோருக்கும்
      32. அற்பசொற்பம் -மிகக் கொஞ்சம்
      33. அறமும் மறமும் -தர்மமும் அதர்மமும்
      34. அரக்கப்பரக்க -அவசரம்
      35. அன்பும் அருளும் -மிகுந்த கருணை
      36. அன்னமும் சொன்னமும் -கொடுத்து உதவுதல்
      37. ஆக்கி அளித்து  -உருவாக்குதலும் அழித்தலும்
      38. ஆடாமல் அசையாமல் -நிலையாக
      39. ஆட்டிப்படைத்து -கஷ்டப்படுத்தி
      40. ஆடை அணி -ஆடை ஆபரணங்கள்
      41. ஆண்டான் அடிமை - உயர்ந்தவர் தாழ்ந்தவர்
      42. ஆற்றி தேற்றி -ஆறுதல் படுத்தி
      43. ஆடிப்பாடி - சந்தோசமாக
      44. ஆதி அந்தம் - தொடக்கம் முடிவு
      45. ஆற அமர - ஆறுதலாக
      46. ஆடி அசைந்து - மெதுவாக
      47. ஆய்ந்து ஓய்ந்து - அவதானமாக
      48. ஆக்கமுங் கேடும் - நல்லதும் கெட்டதும்
      49. இகபரம் -இம்மை மறுமை
      50. இசகு பிசகாய் - நன்மை தீமை
      51. இடக்கு முடக்கு -எதிர்பாராதது /சங்கடம்
      52. இங்கும் அங்கும் -அலைச்சல்
      53. இல்லாததும் பொல்லாததும் -கோள் மூட்டுதல்
      54. இழுப்பும் பறிப்பும் -கஷ்டப்பட்டு
      55. உழைத்து களைத்து -மிகுந்த களைப்பு
      56. இன்னார் இனியார் -பகைவரும் நண்பரும்
      57. இனசனம் -உறவினர்
      58. இன்ப துன்பம் - சுக துக்கம்
      59. ஈடும் எடுப்பும் -ஒப்பும் உயர்வும்
      60. ஈயெறும்பு -எவருமற்ற நிலை
      61. ஈவிரக்கம் -மனக்கசிவு
      62. ஈவொழிச்சல்- ஓய்வில்லாமல்
      63. உருண்டு திரண்டு -பருத்த உருவம்
      64. உருவும் திருவும் -அழகும் செல்வமும்
      65. உற்றாரும் மற்றோரும் -உறவினரும் ஏனையவரும்
      66. உண்டு உடுத்து - அனுபவித்தல்
      67. உற்றார் உறவினர் - உறவினர்கள்
      68. உயர்வு தாழ்வு - நிலையற்றது
      69. ஊடியும் கூடியும் -களவும் கூடுவதும்
      70. ஊண்உறக்கம்- உண்பது உறங்குவது
      71. ஊரும் பேரும் -எல்லோருமாக
      72. ஊருக்கு பேருக்கு -மற்றவருக்காக
      73. எக்கச்சக்கமாய் -அதிகமாய்
      74. எலும்பும் தோலும் - மிக மெலிந்த
      75. ஏற்ற இறக்கம் -  முன்னேற்றமும் தாழ்வும்
      76. ஏழை எளியவர் - மிக வறியவர்
      77. ஒட்டி உலர்ந்த - வாட்டம்
      78. கண்ணும் கருத்தும் - மிக அவதானமாக
      79. கள்ளங்கபடம் - வஞ்சகம் / கபடம்
      80. கண்டந்துண்டம் - துண்டு துண்டாய்
      81. கங்குகரை - எல்லை
      82. கனவு நனவு - பொய்யும் உண்மையும்
      83. காரசாரமாய் - கடுமையாக
      84. காய்ந்து கறுத்து - மிகக் கறுத்து
      85. குணம் குற்றம் - நல்லது கெட்டது
      86. கையும் மெய்யும் - மிகத் தெளிவாய்
      87. சீரும் சிறப்பும் - உயர்வான நிலை
      88. சுற்றும் முற்றும் - எல்லாப் பக்கமும்
      89. சொத்து சுகம் - வசதியான வாழ்க்கை
      90. தாறு மாறு - ஒழுங்கின்மை
      91. துணிமணி - ஆடைகள்
      92. திட்டவட்டமாக - உறுதியாக
      93. தப்பித்தவறி - தற்செயலாக
      94. நகமும் சதையும் - மிக ஒற்றுமை
      95. பட்டம் பதவி - உயர் நிலை
      96. பேரும் புகழும் - கீர்த்தி
      97. மலையும் மடுவும் - மேடு பள்ளம்
      98. மூச்சுப் பேச்சு - பேச்சற்ற நிலை
      99. மேடு பள்ளம் - ஏற்றத் தாழ்வு
      100. மேல் கீழ் - உயர்ந்தும் தாழ்ந்தும்
      101. வற்றி வரண்டு - மிக வரட்சி
      102. வாடி வதங்கி - மிக களைப்புற்று
      103. விருப்பு வெறுப்பு - ஆசை நிராசை

இணைமொழிகள் அமையப்பெற்ற சில வாக்கியங்கள்

    1. நாம் பொதுச்சொத்துக்களை கண்ணும் கருத்துமாக பாதுகாத்தல் வேண்டும்.
    2. திருடன் கையும் களவுமாக பிடி கேட்டுக்கொண்டான்.
    3. அக்காட்டில் பாதைகள் கரடு முரடாக காணப்பட்டன.
    4. விவசாயி தனது நிலத்தில் அல்லும் பகலும் மாடாய் உழைத்தார் .
    5. அனைவரும் தமது வாழ்வில் ஏற்ற இறக்கங்களை சந்தித்தே ஆகவேண்டும்.
    6. தமிழினி மூச்சுப்பேச்சற்ற நிலையில் மயங்கி கிடந்தாள்.
    7. அவர் வேலையில் குற்றம் குறை காண முடியாது .
    8. தாய் தன் பிள்ளைகளுடன் கொஞ்சி குலாவினாள் .
    9. கமலா தனது நண்பனின் துன்ப காலத்தில் கூடமாட நின்று உதவி புரிந்தாள்.
    10. செல்வந்தன் தமது செல்வங்களையெல்லாம் கட்டிக் காத்தான்.
    11. அவனது இச் செயலால் அவனுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் இழந்தான்.



மேலும் பல இணை மொழிகளை அறிந்து கொள்ள தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள்

எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>

15 கருத்துகள்: