header

அண்மையவை

அடுக்குத் தொடர்

அடுக்குத் தொடர்

அடுக்குத் தொடர்

ஒரே சொல் இரட்டித்து வருதல் அல்லது அடுக்கி வருதல் அடுக்குத்தொடர் எனப்படும். இச்சொற்களை பிரித்தால் தனித்து நின்றும் பொருள் தரும். அடுக்குத்தொடர் சொற்களுக்கான சில உதாரணங்கள்...


  • அடுத்து அடுத்து - தொடர்ந்து வருதல்
  • அடுக்கி அடுக்கி - தொடர்ந்து அடுக்குதல்
  • அழுகை அழுகையாக -
  • அணுஅணு - சிறிது சிறிதாக
  • அடிஅடி - பரம்பரையாக
  • அழுது அழுது - தொடர்ந்து அழுதல்
  • அளந்து அளந்து - ஆராய்ந்து
  • அந்தோ அந்தோ - அங்கே
  • அன்றே அன்றே - உடனே
  • ஆங்காங்கு - இடைக்கிடை
  • ஆண்டு ஆண்டு - வருடம் தோறும்
  • ஆடி ஆடி - அசைந்த வாறு
  • இறங்கி இறங்கி - தாழ்வு படல்
  • இசைந்து இசைந்து - உடன்பட்டு
  • உழைத்து உழைத்து - கடின உழைப்பு
  • உயர உயர - உயர்ந்து கொண்டு
  • உண்டு உண்டு - தொடர்ந்து உண்ணல்
  • உதை உதை - துன்பப்படல்
  • ஊர்ந்து ஊர்ந்து - மெதுவாக
  • ஊர் ஊர் - ஊர்கள் தோறும்
  • ஊற்றி ஊற்றி - தொடர்ந்து செய்தல்
  • என்ன என்ன - கோபக் குறிப்பு
  • எடு எடு - விரைவாக எடு
  • எழுஎழு - வேகமாக எழும்பு
  • ஏறி ஏறி - தொடர்ந்து ஏறுதல்
  • ஐயோ ஐயோ - அச்சம்
  • ஒளித்து ஒளித்து - மறைத்து
  • ஓடி ஓடி - விரைவாக
  • ஓய்ந்து ஓய்ந்து - இளைப்பாறி
  • கரிய கரிய - மிகக் கருமையான
  • கட்டுக் கட்டாக -
  • கட்டி கட்டி - அடுக்கி வைத்த/ திரட்சியாக
  • கற்றை கற்றை - கட்டாக
  • கதறிக் கதறி - இடைவிடாது அழுதல்
  • கொத்துக்கொத்தாக -
  • காத்து காத்து - எதிர்பார்த்து/ பாதுகாத்து
  • காய்ந்து காய்ந்து - உலர்ந்து
  • கால்வழி கால்வழி - தொடர்ந்து
  • கிராமம் கிராமம் - ஊர்கள் தோறும்
  • குவியல் குவியல் - குவியல்களாக
  • குலை குலையாக - பல குலைகளாக
  • குறைந்து குறைந்து - அருகிக் கொண்டு
  • குளித்து குளித்து - தொடர்ந்து குளித்து
  • குலுங்கி குலுங்கி-
  • குனிந்து குனிந்து - குனிந்தவாறு
  • குழறிக் குழறி - புலம்பிக்கொண்டு
  •  கூடிக்கூடி - நிறைய பேர் சேர்ந்து
  •  கூடை கூடையாய் -
  •  கூட்டம் கூட்டம் - குவிந்து நிற்றல்
  •  கெட்டேன் கெட்டேன் - அழிந்தேன்
  • கொட்டிக் கொட்டி - அநியாயப்படுத்தி
  • கொதித்து கொதித்து - கோபப்பட்டு
  • கொத்துக் கொத்தாக -
  • கோதி கோதி - வாரிக்கொண்டு
  • சிரித்து சிரித்து - சிரித்தவாறு
  • சிரிப்புச் சிரிப்பாக-
  • சிவக்க சிவக்க - மிகுதியாக சிவக்கும்படி
  • சிறிய சிறிய - மிகச்சிறிய
  • சிவந்த சிவந்த - மிகச் சிவந்த
  • சீச்சீ - அருவருப்பு
  • சீப்புச் சீப்பாக -
  • சுடச்சுட - சூடாக
  • சுளை சுளை -
  • சுற்றிச் சுற்றி-
  • சுவைத்து சுவைத்து -
  • சுகம் சுகம் - நலமாக
  • சொல்லிச் சொல்லி
  • தனித்தனி - தனிமை
  • தலைமுறை தலைமுறை - பரம்பரையாக
  • திட்டி திட்டி - பேசிக்கொண்டு
  • திசைதிசை - எல்லாத் திசைகளிலும்
  • துண்டு துண்டாக
  • தூசி தூசி - புளுதியாக
  • தெளிந்து தெளிந்து - தெளிவாக/ உறுதியாக
  • தேடித்தேடி - ஆராய்ந்து
  • தேம்பித்தேம்பி - அழுதல்
  • தொகுதி தொகுதி - ஒவ்வொரு இடமாக
  • தோட்டம் தோட்டம் - எல்லா இடங்களிலும்
  • நடுங்கி நடுங்கி - எல்லா பக்கங்களிலும்
  • பக்கம் பக்கமாக -
  • பாடிப்பாடி - இசைத்த வண்ணம்
  • பாம்பு பாம்பு - அச்சம்
  • பாளம் பாளம் - பெரிய பதிப்புகளாக
  • பாதை பாதை - தெருவெங்கும்
  • பாய்ந்து பாய்ந்து - வேகமாக
  • பார் பார் - கோபக் குறிப்பு
  • பார்த்து பார்த்து-
  • பிடி பிடி - கை தாக்கு /வேக குறிப்பு
  • பதைத்து பதைத்து - மிகுந்த அச்சம்
  • புதிதுபுதிதாக - புதியவைகள் ஆக
  • புதிர் புதிர் - புரியாத விடயமாக
  • பெரிய பெரிய - மிகப்பெரிய
  • போ போ - வேக குறிப்பு
  • மடக்கி மடக்கி -
  • மணிமணியாக - சிறிது சிறிதாக
  • முத்து முத்தாக - பெறுமதி மிக்கவையாக
  • மெல்ல மெல்ல -
  • மென்று மென்று - நன்றாக மெல்லல்
  • மேலே மேலே - உயர்ந்து செல்லல் / அல்லது தொடர்ந்து செய்தல்
  • வழி வழி -  பரம்பரையாக
  • வருக வருக - அன்புடன் வரவேற்றல்
  • வண்ண வண்ண - அழகிய
  • வரிசை வரிசையாக - நிரையாக
  • வருந்தி வருந்தி - மனம் நொந்து
  • வாழையடி வாழையாக - பரம்பரையாக
  • வாழேன் வாழேன் - கெடுதல்
  • விடிய விடிய - விடியும்வரை
  • வீதிவீதியாக - தெருவெங்கும்
  • நடுங்கி நடுங்கி - மிகுந்த அச்சம் / குளிர்
  • நின்று நின்று - ஓய்வெடுத்தல்
  • நித்தம் நித்தம் - தினமும்
  • நிரைநிரை - வரிசையாக
  • நீண்டநீண்ட - மிக நீளமான
  • நெடுத்து நெடுத்து - மிக உயர்ந்த/ அச்சப்பட்டு
  • நெருப்பு நெருப்பு - அச்சம்
  • நெக்கி நெக்கி - மிக இளகி
  • நேர் நேர்- எதிரெதிராக
  • நொய்மை நொய்மையாக -  இளக்கமாக

மேலே தரப்பட்ட சில அடுக்கு தொடர்களுக்கு பொருள் வழங்கப்படவில்லை அதன் சரியான பொருளை கீழே கமெண்ட்டில் தெரிவியுங்கள்.


 அடுக்குத்தொடர்கள் அமைந்து வருமாறு அமைக்கப்பட்ட வாக்கியங்கள் சில...

    1.  கமலா அந்த நகைச்சுவையைக் கேட்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
    2.  நாய் அவனது வீட்டை சுற்றி சுற்றி வந்தது.
    3.  கண்ணன் தனது பாடசாலையில் நடந்த இல்ல விளையாட்டுப் போட்டி பற்றி தனது நண்பனுக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதினான்.
    4. முதியவர் தனது வீட்டை நோக்கி மெல்ல மெல்ல நடந்து சென்றார்.
    5. இந்நிகழ்வுக்கு வந்த அனைவரையும் வருக வருக என்று வரவேற்கிறோம்.

அடுக்குத் தொடர்கள் அமையப்பெற்ற சில திரைப் பாடல்களின் வரிகள்

    1. விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்...
    2. சின்னச் சின்ன தூறல் என்ன...
    3. என்னைத் தேடி தேடி நாட்கள் போனதே..

எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.


 தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>  



6 கருத்துகள்:

  1. மிகவும் பயன்மிக்க தகவல்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  2. தமிழ் காப்பியங்கள், இலக்கண நூல்களின் சிறப்பு பற்றிய கட்டுரைகளையும் வெளியிடுங்கள். தமிழ் இலக்கணம் எளிய வடிவம் தொடக்கம் உயர் மட்டம் வரையில் இடம்பெறுவதை எடுத்துக்காட்டுக்களுடன் பதிவிடுங்கள். பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. மலை என்பதன் ஒத்த கருத்து சொல்லி தரு க

    பதிலளிநீக்கு
  4. பேருதவியாக இருந்தது. மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  5. அசைவு விலக்கி சினம் அச்சம் மகிழ்ச்சி ஆகியவற்றை ஓசையை நிறைவுசெய்ய பொருட்டு மூன்று சொற்கள் அடுக்கி வருவது அடுக்குத்தொடர் எனப்படும்

    பதிலளிநீக்கு