header

அண்மையவை

இரட்டை கிளவி


இரட்டைக் கிளவி

இரட்டைக்கிளவி

இசை பற்றியும், பண்பு பற்றியும், குறிப்பு பற்றியும் அடிச்சொல் இரட்டித்து நிற்பது இரட்டைக்கிளவி ஆகும்.  அல்லது ஒரே சொல் இரட்டித்து அல்லது இரண்டு முறை இணைந்துவந்து பொருள் தருமாயின் அது இரட்டை கிளவி எனப்படும்.  இது ஒரு சொல் தனித்து நின்று பொருள் உணர்த்தாது.

இரட்டை கிளவி சொற்களும் அதன் பொருள்களும்

  • கத கத - விரைவாக
  • கடகட - விரைவாக, ஒலிக்குறிப்பு
  • கரகர - காய்ந்து இருத்தல்
  • கம கம - மணம் வீசுதல்
  • கண கண - உடம்புச் சூடு
  • கலகல - சிரிப்பு
  • கடுகடு - போபமாக பேசுதல்
  • கறகற - தொந்தரவு
  • கலீர் கலீர் - சலங்கையொலி
  • கணீர் கணீர் - மணி ஒலி
  • கிணு கிணு - மெல்ல இரைதல்
  • கிறுகிறு - விரைவாக /சுற்றுதல்
  • கிளு கிளு - சிரித்தல் / மகிழ்ச்சி
  • கிடுகிடு - விரைவாக /அச்சம்
  • கீச்சுகீச்சு - ஒலிக்குறிப்பு (பறவைகளின் ஒலி)
  • கீர்கீர் - ஒலிக்குறிப்பு (கத்துதல்)
  • குடுகுடு - விரைந்தோடித் திரிதல், நடத்தல்
  • குளுகுளு - தென்றல் காற்று / குளிர்
  • குபீர் குபீர் - குருதி பாாய்தல்
  • குறு குறு - மனம் உறுத்துதல்
  • குசுகுசு - ரகசியம் பேசுதல்
  • குமுகுமு - மிக மணத்தல்
  • குபுகுபு - புகை கிளம்புதல்
  • கொழு கொழு - பருத்தல்
  • சட சட - ஒலிக்குறிப்பு (பரபரத்தல்), சிறகுகளை அடித்துக் கொள்ளல், முறிதல்
  • சடார் சடார் - பொருட்கள் மோதுதல்/விழுதல்
  • சரசர - ஒலித்தல் ,உரசல் ஒலி
  • சலசல - ஒலிக்குறிப்பு , நீரின் ஓசை
  • சளசள - ஓயாத இரைச்சல் பேச்சு
  • சிலீர் சிலீர் - குளிர்தல்
  • சிடுசிடு - எரிச்சல் கலந்த கோபம்
  • சுள்சுள் - வலித்தல்
  • சுறு சுறு - கோபம்
  • டாங்டாங் - ஒலிக்குறிப்பு (மணி ஒலி)
  • தடதட - நாத்தட்டுதல், முரட்டுத்தனமாக
  • தரதர - தரையில் உராயும் வகையில் இழுத்தல்
  • தளதள - இளக்கம், சோபை
  • தழுதழு - நாத்தடுமாறுதல்
  • தகதக - ஜொலிப்பு ,எரிதல் , மின்னுதல்
  • திருதிரு - அச்சம் ,முழித்தல்
  • திடு திடு - விரைவான ஓட்டம்
  • துடு துடு - ஒலிக்குறிப்பு
  • துருதுரு - சுறுசுறுப்பு
  • துடி துடி - இரங்குதல் ,வலியால் அவதியுறல்
  • தொளதொள - இறுக்கமின்மை
  • தொண தொண - இடைவிடாது பேசுதல்
  • நறு நறு - கோபம்
  • நற நற - பல்லைக் கடித்தல்
  • நெருநெரு - உறுத்தல்
  • நொளுநொளு - குழைவு
  • பள பள - மினுங்குதல்
  • பரபர - நிதான இழப்பு ,அவசரம் ,வேகமாக செயற்படல்
  • பகபக - வேக குறிப்பு
  • பளிச் பளிச் - மின்னுதல்
  • படபட - இதயத்துடிப்பு
  • பளார் பளார் - கன்னத்தில் அறைதல்
  • பளீர் பளீர் - மின்னல்
  • பிசுபிசு - பசைத்தன்மை
  • புறு புறு - முணுமுணுத்தல்
  • பொல பொல - கண்ணீர் வடிதல்
  • பொலுபொலு - உதிர்தல்
  • மடமட - வேகமாக நீர் குடித்தல்
  • மளமள - முறிதல்
  • மினுமினு - பிரகாசித்தல், மிளிர்தல்
  • மெது மெது - மென்மை
  • மொழு மொழு - வளர்ச்சி
  • மொறமொற - மிகக் காய்தல்
  • மொர மொர - கடித்தல்
  • வழவழ - உறுதியின்மை
  • வளவள - பயனின்றி பேசுதல்
  • வளுவளு - நொளு நொளுத்தல்
  • விதிர்விதிர் - அச்சம்
  • விசுக் விசுக் - வேகநடை
  • விண் விண் - வலித்தல்
  • விடுவிடு - வேகமாக
  • விறுவிறு - வேகமாக, பரபரப்புடன்
  • வெடுவெடு - கோபமான பேச்சு்
  • வெதுவெது - இளஞ்சூடு
  • வெலவெல - நடுங்குதல், பதறுதல்

இரட்டைக்கிளவி சொற்களை வைத்து  அமைக்கப்பட்ட வாக்கியங்கள் சில...

    1. ஆற்று நீர் சலசலவென ஓடியது .
    2. தங்கம் தகதகவென பிரகாசித்தது.
    3. கூடையில் கிடந்த பூக்கள் கமகம என வாசம் வீசின.
    4. அவளது உடல் காய்ச்சல் காரணமாக கணகண என்று இருந்தது .
    5. மாமரத்தில் இருந்து பழங்கள் பொலபொலவென  கீழே விழுந்தன.
    6. அவள் கலகலவென சிரித்தாள்.
    7. ஊர் மக்களால் பிடிபட்ட திருடன் திருதிரு என முளித்தான்.
    8. தமிழரசன் கோபத்தில் பற்களை நறநறவென கடித்தான்.
    9. அவளது காயத்திலிருந்து குருதி குபீர் குபீர் என பாய்ந்தது.
    10. குழந்தை குடுகுடு என ஓடியது.

இரட்டை கிளவி அமையப் பெற்ற சில திரைப்பாடல்களின் வரிகள்... 

    1. கண்ணோடு காண்பதெல்லாம்...(இப்பாடலில் இரட்டை கிளவி பற்றி கூறப்பட்டுள்ளது)
    2. சலசலவென ஓடும் குளிரோடையின் சங்கீதமே...
    3. பளபளக்குற பகலா நீ...

எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.




9 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தளதள எனும் இரட்டைகிளைவி சொல்லை வைத்து வாக்கியம் அமைக்க?

      நீக்கு