தொகைப்பெயர்கள்
![தொகைப்பெயர்கள்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiBJ078Ho7Dl6gpMYRvT3KYUtcqb71vxVvyr6XO_7z_6OVWGBvL6WaRDyGkaHghe1fHjuByWFG_qoWgiUyParDrPyLeyRPSpKROp_xu5aWsrmHia8dt0prMgCfPwCqR7sSopom3N57Gw6H_/w640-h360/20211002_160331.png)
- ஒருவன்- இறைவன்
- இருமை- இம்மை,மறுமை
- இருபொருள்- கல்வி, செல்வம்
- இருவினை- நல்வினை,தீவினை
- இருதிணை- உயர்திணை,அஃறிணை
- இருவகை அறம்- இல்லறம்,துறவறம்
- இருசுடர்- சந்திரன்,சூரியன்
- இருமுது குரவர்- தாய்,தந்தை
- முக்கனி-மா,பலா ,வாழை
- முத்தமிழ் -இயல்,இசை,நாடகம்
- முச்சுடர்-சந்திரன்,சூரியன்,அக்கினி
- முந்நீர்-ஆற்று நீர்,ஊற்று நீர், வேற்று நீர்
- மும்மூர்த்திகள் -சிவன், விஷ்ணு, பிரம்மா
- முக்கடுகம்-சுக்கு, மிளகு, திப்பிலி
- மூவேந்தர் -சேர, சோழ, பாண்டியர்
- முத்தொழில்-படைத்தல், காத்தல், அழித்தல்
- முக்காலம்-இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்
- மூவிடம்- தன்மை, முன்னிலை, படர்கை
- நாற்படை-தேர்படை, யானைப்படை,குதிரைப்படை, காலாற்படை
- நாற்பயன்-அறம்,பொருள், இன்பம், வீடு
- நாற்சொல்-பெயர்ச்சொல்,வினைச்சொல்,இடைச்சொல்,உரிச்சொல்
- ஐம்புலன்-சுவை,ஊறு,ஒளி, ஓசை, நாற்றம்
- ஐம்பூதம்-நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்
- ஐம்பொறி-மெய், வாய், கண், மூக்கு,செவி
- ஐம்பெரும் காப்பியங்கள் - சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி
- ஐம்பெரும் குழு- அரசர், அமைச்சர், புரோகிதர், ஒற்றர், தூதுவர்
- ஐவகை தந்தையர் - பிறப்பித்தோன், கற்பித்தோன், மணமுடிதோன், அன்னம் தந்தோன், ஆபத்துக்குதவினோன்
- பஞ்சமா பாதகங்கள்- கொலை, களவு, கள், பொய் ,குரு நிந்தை
- அறுசுவை - கைப்பு, புளிப்பு, துவர்ப்பு, தித்திப்பு, உவர்ப்பு, கார்ப்பு
- ஆறறிவு- பார்வை,கேள்வி, நுகர்தல்,சுவைத்தல்,தொடுதல், பகுத்தல்
- ஏழு சுரங்கள்- ஸ ரி க ம ப த நி
- அட்ட ஜசுவரியம் - அரசாங்கம், மக்கள், சுற்றம், பொன், மணி,நெல், வாகனம், அடிமை
- நவரத்தினம்- பவளம், நீலம், மரகதம், பதுமராகம்,வச்சிரம், முத்து,கோமேதகம், வைடூரியம்,புஸ்பராகம்
- நவதானியம்- நெல், எள்,உழுந்து, கடலை,கொள்ளு, தினை, துவரை,பயறு,சாமை
முத்தமிழ்-இயல்,இசை,நாடகம்
பதிலளிநீக்குமுத்தமிழ் இயல்,இசை, நாடகம்
பதிலளிநீக்கு