header

அண்மையவை

எதிர்க்கருத்துச் சொற்கள் - பகுதி 1

எதிர்க்கருத்துச் சொற்கள்

எதிர்க்கருத்துச் சொல்


ஒரு சொல்லின் பொருளுக்கு எதிரான பொருளைத் தரும் சொல் எதிர்க்கருத்துச் சொல் எனப்படும். தமிழில் எண்ணிலடங்கா எதிர்க்கருத்துச் சொற்களை நாம் காணமுடியும். அவற்றில் "அ","ஆ","இ" வரிசைகளில் அமைந்த எதிர்க்கருத்துச் சொற்களை இப் பகுதியினூடாக பார்க்கலாம்.

    1. அடி -முடி
    2. அச்சம் -துணிவு
    3. அனுகூலம் -பிரதிகூலம்
    4. அமிலம் -காரம்
    5. அகம்- புறம்
    6. அகங்கை -புறங்கை
    7. அசல் -நகல்
    8. அடைப்பு -திறப்பு
    9. அண்மை- சேய்மை
    10. அந்தம் -ஆதி
    11. அமைதி -ஆரவாரம்
    12. அர்த்தம் -அனர்த்தம்
    13. அடித்தல் -அணைத்தல்
    14. அழுகை -சிரிப்பு
    15. அணு -மலை
    16. அறிவுடைமை -அறியாமை
    17. அஞ்சுதல் - துணிச்சல்
    18. அமங்கலி- சுமங்கலி
    19. அகற்றுதல் -இணைத்தல்
    20. அஹிம்சை -இம்சை
    21. அங்கீகரித்தல் -நிராகரித்தல்
    22. அங்கீகாரம் -பகிஷ்கரிப்பு
    23. அசட்டுத்தனம் -சாமர்த்தியம்
    24. அசதி -சுறுசுறுப்பு
    25. அசாதாரணம் -சாதாரணம்
    26. அசுரர் -சூரர்
    27. அழித்தல் -ஆக்கல்
    28. அடி- முடி
    29. அம்பலம் -மறைவு
    30. அசீரணம் -சீரணம்
    31. அசைவு -நிலைப்பாடு
    32. அடர்த்தி -பரவல்
    33. அலங்காரம் -அலங்கோலம்
    34. ஞானம் -விஞ்ஞானம்
    35. அதமம் -உத்தமம்
    36. அதிர்ஷ்டம் -துரதிர்ஷ்டம்
    37. அல்வழி -நல்வழி
    38. அவசரம் -நிதானம்
    39. அவசம் -வசம்
    40. அவமதித்தல் -மதித்தல்
    41. அந்தகாரம் -வெளிச்சம்
    42. அந்தி -விடியல்
    43. அன்னியர் -உறவினர்
    44. அபசாரம் -உபசாரம்
    45. அபராதம் -சன்மானம்
    46. அலர் -முகிழ்
    47. அவித்தை -வித்தை
    48. அழித்தல் -ஆக்குதல்
    49. அனுசிதம்- உசிதம்
    50. அனுசரணை -மறுப்பு
    51. அபராதி -நிருபராதி
    52. அமிர்தம் -ஆலம்
    53. அமிழ்தல் -மிதத்தல்
    54. அலர்தல் -குவிதல்
    55. அல்லங்காடி -நாளங்காடி
    56. அவலட்சணம் -லட்சணம் 
    57. ஆக்கினை -கருணை
    58. ஆக்கம் -கேடு
    59. ஆடவர் -பெண்டிர்
    60. ஆண்டவன் -அடியவர்
    61. ஆத்திகன் -நாத்திகன்
    62. ஆசாரம் -அநாசாரம்
    63. ஆதாயம் -நட்டம்
    64. ஆதரவு -அநாதரவு
    65. ஆவேசம் -சாந்தம்
    66. ஆலம்- அமிர்தம்
    67. ஆண்டான் -அடிமை
    68. ஆயாசம் -அனாயாசம்
    69. ஆயுதம் -நிராயுத
    70. ஆரம்பம் -முடிவு
    71. ஆரோகணம் -அவரோகணம்
    72. ஆனந்தம் -துக்கம்
    73. ஆசி -சாபம்
    74. ஆதாரம் - நிராதாரம்
    75. ஆர்ப்பாட்டம் -அமைதி
    76. இரகசியம் -பரகசியம்
    77. இணக்கம் -பிணக்கம்
    78. இணை- தனி
    79. இகழ் -புகழ்
    80. இன்னார் -இனியார்
    81. இன்சொல் -வன்சொல்
    82. இகம் -பரம்
    83. இசை -வசை
    84. இம்மை -மறுமை
    85. இயற்கை -செயற்கை
    86. இல்லறம் -துறவறம்
    87. இலாபம் -நட்டம்
    88. இளமை -முதுமை
    89. இளையோர் -முதியோர்
    90. இறத்தல் -பிறத்தல்
    91. இன்பம் -துன்பம்
    92. இருள் -ஒளி
    93. இறக்கம் -ஏற்றம்
    94. இல்லை -உண்டு
    95. இசைதல் -மறுத்தல்
    96. இயக்கம் -நிலைபேறு
    97. இயல்பு -விகாரம்
    98. இயற்சொல் -திரிசொல்
    99. இயற்பெயர் -புனைபெயர்
    100. இரண்டகம் -நேர்மை
    101. இரவல் -சொந்தம்
    102. இரவலர் -புரவலர்
    103. இல்பொருள் -உள்பொருள்
    104. இழிவு -உயர்வு
    105. இளவேனில் -முதுவேனில்
    106. இறுக்கம் -தளர்வு
    107. இன்கண் -புன்கண்


மேலும் பல எதிர்க்கருத்துச் சொற்களை பகுதி இரண்டில் காணலாம்
பகுதி 2 க்கு செல்ல>>>>>

எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
 தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>

2 கருத்துகள்: