எதிர்க்கருத்துச் சொற்கள் - பகுதி 2
எதிர்க்கருத்துச் சொற்கள் பகுதி 2
எதிர்க்கருத்துச் சொற்கள் என்றால் என்ன மற்றும் "அ","ஆ","இ"வரிசைகளில் அமைந்த எதிர்க்கருத்துச் சொற்கள் சிலவற்றையும் பகுதி-1ல் பார்த்தோம். அதனை தொடர்ந்து இன்னும் சில சொற்களினை இப்பகுதியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஈ
- ஈதல் -ஏற்றல்
- ஈற்றில் -முதலில்
- ஈரம் -உலர்வு
- ஈவார் - ஈயார்
- ஈடேற்றம் -வீழ்ச்சி
- ஈடுபாடு -முரண்பாடு
உ
- உதயம் -அஸ்தமனம்
- உபகாரம் -அபகாரம்
- உம்பர்- இம்பர்
- உத்தமன் -அதமன்
- உலோபம் -வள்ளன்மை
- உற்சாகம் -சோர்வு
- உருவம் -அருவம்
- உடன்பாடு -மறுப்பு
- உசிதம் அனுசிதம்
- உண்மை -பொய்மை
- உபசாரம் -அபசாரம்
- உயர்வு -தாழ்வு
- உற்றார்- அற்றார்
- உலோபி -வள்ளல்
- உபேட்சை- பேட்டை
- உறக்கம் -விழிப்பு
- உறவு -பகை
- உயரம் -தாழ்வு
- உடைப்பு -அடைப்பு
- உதயம் -அஸ்தமனம்
- உதித்தல் -மறைதல்
- உருகுதல் -இறுகுதல்
- உரூபி- அரூபி
- உமிழ்தல் -விழுங்குதல்
- உருசி- அருசி
- உள்ளுறை -வெளிப்படை
- உள்ளே -வெளியே
- உற்சாகம் -சோர்வு
- உன்னதம் -இழிவு
ஊ
- ஊடல் -கூடல்
- ஊர்தல் -விரைதல்
- ஊன்றுதல்- பிடுங்குதல்
- ஊதாரி -சிக்கனம்
எ
- எளிது -அரிது
- எஞ்சுதல்- விஞ்சுதல்
- எதிர்ப்பு -ஆதரவு
- எதிர் -நேர்
ஏ
- ஏகம் -அனேகம்
- ஏராளம் -குறைவு
- ஏழை -செல்வந்தன்
- ஏற்றுமதி -இறக்குமதி
ஐ
- ஐது -தெளிவு
- ஐயம் -தெளிவு
ஒ
- ஒருமை -பன்மை
- ஒற்றுமை -வேற்றுமை
- ஒழுக்கம் -இழுக்கம்
- ஒறுத்தல் -அளித்தல்
- ஒற்றை -இரட்டை
- ஒரு முகம் -பன்முகம்
- ஒளித்தல் -வெளிப்படல்
ஓ
- ஓரவஞ்சனை -நடுநிலைமை
- ஓடு் -நில்
க
- கண்டம் -அகண்டம்
- களங்கம் -நிட்களங்கம்
- கனவு -நனவு
- கலக்கம் -தெளிவு
- களவியல் -கற்பியல்
- கசப்பு -இனிப்பு
- கதி -நிர்கதி
- கட்டுதல்- அவிழ்த்தல்
- கலைத்தல்- சேர்த்தல்
- கருமை -வெண்மை
- கற்றார் -கல்லார்
- கடுங்காவல்- வெறுங்காவல்
- கண்கூடு - ஐயம்
- கண்டனம் -பாராட்டு
- கபடம் -நேர்மை
- கருத்துரை -வெற்றுரை
- கவலை -மகிழ்ச்சி
- கவனிப்பு -பாராமுகம்
- கறை -தூய்மை
- கனிவு- முனிவு
- கனிஷ்டன்- சிரேஷ்டன்
- காடு -நாடு
- காய் -கனி
- காரம் -இனிப்பு
- காலம் -அகாலம்
- காலை -மாலை
- காழ்ப்பு- நயப்பு
- கிழக்கு- மேற்கு
- கிட்ட -எட்ட
- கிரமம் -அக்கிரமம்
- கிளர்ச்சி -அமைதி
- கீர்த்தி -அபகீர்த்தி
- கீழோர்- மேலோர்
- கீழ்த்திசை -மேல்திசை
- குழிவு- குவிவு
- குறுக்கம் -விரிவு
- குடியரசு -முடியரசு
- குறைவு -நிறைவு
- குறைகுடம் -நிறைகுடம்
- குணம் -குற்றம்
- குள்ளம் -நெட்டை
- குறுக்கு -நெடுக்கு
- குனிதல் -நிமிர்தல்
- குரு -சீடன்
- குற்றவாளி -சுத்த வாழி
- குந்தகம் -நன்மை
- குயுக்தி -யுக்தி
- குறிப்பு -விளக்கம்
- குறில் -நெடில்
- கூட்டல் -கழித்தல்
- கூதிர் -கோடை
- கெட்டவன் -நல்லவன்
- கேடு -ஆக்கம்
- கேண்மை -பகைமை
- கைப்பற்றல் -கைவிடல்
- கொடுங்கோல் -செங்கோல்
- கொடையாளி -உலோபி
- கொண்டாட்டம் -திண்டாட்டம்
- கொடியார் -நல்லார்
- கொடுந்தமிழ் -செந்தமிழ்
- கொண்டல் -கச்சான்
- கொடுத்தல் -வாங்குதல்
- கோடை -மாரி
- கோலம் -அலங்கோலம்
- கோழை -வீரன்
- கோபம் -சாந்தம்
- கௌமாரம் வயோதிபம்
பகுதி 1 க்கு செல்ல இங்கே அழுத்தவும்
எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்>>>>
உயரமாக
பதிலளிநீக்கு