header

அண்மையவை

ஒத்தகருத்துச் சொற்கள் - பகுதி 02

ஒத்தகருத்துச் சொற்கள் _ பகுதி 02

ஒத்தகருத்து சொற்கள் பாகம் 2

ஒத்தகருத்துச் சொற்கள் என்றால் என்ன, மற்றும் அகர வரிசையில் அமைந்த ஒத்தகருத்துச் சொற்கள் என்பவற்றை பகுதி ஒன்றின் ஊடாக அறிந்து கொண்டோம் அந்த வரிசையில் இப் பகுதியின் ஊடாக "ஆ" , "இ" வரிசையில் அமைந்த ஒத்தகருத்து சொற்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்

      1. ஆசனம் - இருக்கை
      2. ஆணை - கட்டளை
      3. ஆதிக்கம் - முதன்மை
      4. ஆவி - உயிர்
      5. ஆகாயம் - விசும்பு
      6. ஆயர் - கோவலர்
      7. ஆடி - கண்ணாடி ,ஒரு மாதம்
      8. ஆடல் - அசைதல்
      9. ஆறு - நதி, வழி
      10. ஆனந்தம் - மகிழ்ச்சி
      11. ஆபரணம் - நகை
      12. ஆழி - கடல்
      13. ஆளி - யானை
      14. ஆலி - அமுதம்
      15. ஆரம்பம் - தொடக்கம்
      16. ஆற்றல் - வலிமை
      17. ஆலம் - நஞ்சு
      18. ஆழம் - தாழ்வு
      19. ஆல் - ஆலமரம்
      20. ஆள் - ஆட்சி செய்
      21. ஆழ்வார் - விஷ்ணு பக்தர்
      22. ஆள்வார் - ஆளுவோர்
      23. ஆசிரியர் - குரு
      24. ஆனி - மாதப் பெயர்
      25. ஆரவாரம் - சத்தம்
      26. ஆயத்தம் - ஏற்பாடு
      27. ஆபத்து - அபாயம்
      28. ஆதி - ஆரம்பம், தொடக்கம்
      29. ஆசை - விருப்பம்
      30. ஆடை - உடை
      31. ஆசாரம் - ஒழுக்கம்
      32. ஆரணம் - வேதம்
      33. ஆணி- இரும்பு ஆணி
      34. ஆர- நிறைய
      35. ஆணம் - குழம்பு
      36. ஆனம்- தெப்பம்
      37. ஆலல் - ஆடல்
      38. ஆசு - குற்றம்
      39. ஆனை - யானை
      40. ஆண் - ஆண்மை
      41. ஆன்- பசு
      42. ஆ- பசு
      43. ஆசான் - குரு
      44. ஆகாரம்- உணவு
      45. ஆரணியம் -காடு
      46. ஆர்ப்பு - ஒலி
      47. ஆசாடபூதி - மோகக்காரன்
      48. ஆசி- வாழ்த்து
      49. ஆடகம்- பொன்
      50. ஆயுதம் -கருவி
      51. ஆசீர்வாதம் -வாழ்த்து
      52. ஆடவன் -ஆண்மகன்
      53. ஆட்கொள்ளல்- அடிமையாதல்
      54. ஆட்சேபம் -மறுப்பு
      55. ஆணவம் -செருக்கு
      56. ஆணித்தரம் -உறுதி
      57. ஆணை -சத்தியம்
      58. ஆண்டகை -சிறந்தோன்
      59. ஆண்டு -வருடம்
      60. ஆதவன் - சூரியன்
      61. ஆதாரம் -பற்றுக்கோடு
      62. ஆதிகாலம் - முற்காலம்
      63. ஆமோதித்தல் உடன்படல்
      64. ஆயன் -இடையன்
      65. ஆயுள் -வாழ்நாள்
      66. ஆரம்- மாலை
      67. ஆரவாரம் -பேரொலி
      68. ஆராதனை -வணக்கம்
      69. ஆரோக்கியம் -நோயின்மை
      70. ஆர்வம் -விருப்பம்
      71. ஆலம் - விடம்
      72. ஆவணம் - பதிவேடு
      73. ஆவி -உயிர்
      74. ஆவேசம் -சன்னதம்
      75. ஆற்றாமை -பொறுக்க இயலாமை
      76. இகல் -பகை
      77. இகழ்ச்சி -அவமதிப்பு
      78. இங்கிதம் -இனிமை ,நோக்கம்
      79. இசை -சங்கீதம்
      80. இச்சை- விருப்பம்
      81. இடுகாடு -சுடுகாடு
      82. இணக்கம் - உடன்பாடு
      83. இடுக்கண் -துன்பம்
      84. இணைதல் -சேர்தல்
      85. இனைதல் -வருந்துதல்
      86. இளை - களைப்படை
      87. இழை - அணிகலம்
      88. இறுமாப்பு -செருக்கு
      89. இன்னல் -துன்பம்
      90. இறை- கடவுள்
      91. இலை -தழை
      92. இழி - நிந்தி
      93. இரை- உணவு
      94. இரங்கல் -உருகல்
      95. இறங்கல் - கீழ் வருதல்
      96. இரவி -சூரியன்
      97. இறும்பு -இள மரக்காடு
      98. இணை- ஒத்து இருத்தல்
      99. இதழ் -உதடு
      100. இம்மை -இப்பிறப்பு
      101. இயந்திரம் -பொறி
      102. இயமன் - கூற்றுவன்
      103. இரண்டகம் -துரோகம்
      104. இரதம் - தேர்
      105. இரத்தம் -குருதி
      106. இரம்மியம் -மனநிறைவு
      107. இரவலர் -பிச்சை எடுப்போர்
      108. இராசதானி -தலைநகர்
      109. இலகு -எளிது
      110. இலக்கம் -எண்
      111. இலக்கு -குறிக்கோள்
      112. இலக்குமி -திருமகள்
      113. இலட்சிணை -அடையாளம்
      114. இலஞ்சம் -கையூட்டு
      115. இலட்சணம் -இலக்கணம்
      116. இலட்சியம் -குறி
      117. இலம்பாடு -வறுமை
      118. இலாவணியம் -அழகு
      119. இலிங்கம் -அடையாளம்
      120. இலௌகீகம்- உலக சம்பந்தம்
      121. இல் -வீடு
      122. இளமை -முருகு
      123. இறுதி -முடிவு
      124. இறைச்சி - ஊன்
      125. இறைமை -தலைமை
      126. இறைவன் -கடவுள்
      127. இன்பம் -ஆனந்தம்
      128. இன்னல் -துன்பம்
      129. இன்னார் -பகைவர்
      130. இனியார் -நண்பர்
      131. இரக்கம் -மன உருக்கம்
      132. இறக்கம் -சரிவு
      133. இருத்தல் -அமர்ந்திருத்தல்
      134. இறுத்தல் - செலுத்துதல்
      135. இலவு -பஞ்சு
      136. இழவு -மரணம்

இச்சொற்கள் உங்கள் மொழி விருத்தியில் பங்களிப்புச் செலுத்தும் என்று நம்புகின்றோம் அத்துடன் தொடர்ந்து உங்கள் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம். மேலும் பல ஒத்தகருத்துச் சொற்களினை பகுதி-3ன் ஊடாக அறிந்து கொள்ளலாம்.

எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

 தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>

4 கருத்துகள்: