ஒத்தகருத்துச் சொற்கள் - பகுதி 02
ஒத்தகருத்துச் சொற்கள் _ பகுதி 02
ஒத்தகருத்துச் சொற்கள் என்றால் என்ன, மற்றும் அகர வரிசையில் அமைந்த ஒத்தகருத்துச் சொற்கள் என்பவற்றை பகுதி ஒன்றின் ஊடாக அறிந்து கொண்டோம் அந்த வரிசையில் இப் பகுதியின் ஊடாக "ஆ" , "இ" வரிசையில் அமைந்த ஒத்தகருத்து சொற்கள் சிலவற்றை அறிந்து கொள்வோம்
- ஆசனம் - இருக்கை
- ஆணை - கட்டளை
- ஆதிக்கம் - முதன்மை
- ஆவி - உயிர்
- ஆகாயம் - விசும்பு
- ஆயர் - கோவலர்
- ஆடி - கண்ணாடி ,ஒரு மாதம்
- ஆடல் - அசைதல்
- ஆறு - நதி, வழி
- ஆனந்தம் - மகிழ்ச்சி
- ஆபரணம் - நகை
- ஆழி - கடல்
- ஆளி - யானை
- ஆலி - அமுதம்
- ஆரம்பம் - தொடக்கம்
- ஆற்றல் - வலிமை
- ஆலம் - நஞ்சு
- ஆழம் - தாழ்வு
- ஆல் - ஆலமரம்
- ஆள் - ஆட்சி செய்
- ஆழ்வார் - விஷ்ணு பக்தர்
- ஆள்வார் - ஆளுவோர்
- ஆசிரியர் - குரு
- ஆனி - மாதப் பெயர்
- ஆரவாரம் - சத்தம்
- ஆயத்தம் - ஏற்பாடு
- ஆபத்து - அபாயம்
- ஆதி - ஆரம்பம், தொடக்கம்
- ஆசை - விருப்பம்
- ஆடை - உடை
- ஆசாரம் - ஒழுக்கம்
- ஆரணம் - வேதம்
- ஆணி- இரும்பு ஆணி
- ஆர- நிறைய
- ஆணம் - குழம்பு
- ஆனம்- தெப்பம்
- ஆலல் - ஆடல்
- ஆசு - குற்றம்
- ஆனை - யானை
- ஆண் - ஆண்மை
- ஆன்- பசு
- ஆ- பசு
- ஆசான் - குரு
- ஆகாரம்- உணவு
- ஆரணியம் -காடு
- ஆர்ப்பு - ஒலி
- ஆசாடபூதி - மோகக்காரன்
- ஆசி- வாழ்த்து
- ஆடகம்- பொன்
- ஆயுதம் -கருவி
- ஆசீர்வாதம் -வாழ்த்து
- ஆடவன் -ஆண்மகன்
- ஆட்கொள்ளல்- அடிமையாதல்
- ஆட்சேபம் -மறுப்பு
- ஆணவம் -செருக்கு
- ஆணித்தரம் -உறுதி
- ஆணை -சத்தியம்
- ஆண்டகை -சிறந்தோன்
- ஆண்டு -வருடம்
- ஆதவன் - சூரியன்
- ஆதாரம் -பற்றுக்கோடு
- ஆதிகாலம் - முற்காலம்
- ஆமோதித்தல் உடன்படல்
- ஆயன் -இடையன்
- ஆயுள் -வாழ்நாள்
- ஆரம்- மாலை
- ஆரவாரம் -பேரொலி
- ஆராதனை -வணக்கம்
- ஆரோக்கியம் -நோயின்மை
- ஆர்வம் -விருப்பம்
- ஆலம் - விடம்
- ஆவணம் - பதிவேடு
- ஆவி -உயிர்
- ஆவேசம் -சன்னதம்
- ஆற்றாமை -பொறுக்க இயலாமை
- இகல் -பகை
- இகழ்ச்சி -அவமதிப்பு
- இங்கிதம் -இனிமை ,நோக்கம்
- இசை -சங்கீதம்
- இச்சை- விருப்பம்
- இடுகாடு -சுடுகாடு
- இணக்கம் - உடன்பாடு
- இடுக்கண் -துன்பம்
- இணைதல் -சேர்தல்
- இனைதல் -வருந்துதல்
- இளை - களைப்படை
- இழை - அணிகலம்
- இறுமாப்பு -செருக்கு
- இன்னல் -துன்பம்
- இறை- கடவுள்
- இலை -தழை
- இழி - நிந்தி
- இரை- உணவு
- இரங்கல் -உருகல்
- இறங்கல் - கீழ் வருதல்
- இரவி -சூரியன்
- இறும்பு -இள மரக்காடு
- இணை- ஒத்து இருத்தல்
- இதழ் -உதடு
- இம்மை -இப்பிறப்பு
- இயந்திரம் -பொறி
- இயமன் - கூற்றுவன்
- இரண்டகம் -துரோகம்
- இரதம் - தேர்
- இரத்தம் -குருதி
- இரம்மியம் -மனநிறைவு
- இரவலர் -பிச்சை எடுப்போர்
- இராசதானி -தலைநகர்
- இலகு -எளிது
- இலக்கம் -எண்
- இலக்கு -குறிக்கோள்
- இலக்குமி -திருமகள்
- இலட்சிணை -அடையாளம்
- இலஞ்சம் -கையூட்டு
- இலட்சணம் -இலக்கணம்
- இலட்சியம் -குறி
- இலம்பாடு -வறுமை
- இலாவணியம் -அழகு
- இலிங்கம் -அடையாளம்
- இலௌகீகம்- உலக சம்பந்தம்
- இல் -வீடு
- இளமை -முருகு
- இறுதி -முடிவு
- இறைச்சி - ஊன்
- இறைமை -தலைமை
- இறைவன் -கடவுள்
- இன்பம் -ஆனந்தம்
- இன்னல் -துன்பம்
- இன்னார் -பகைவர்
- இனியார் -நண்பர்
- இரக்கம் -மன உருக்கம்
- இறக்கம் -சரிவு
- இருத்தல் -அமர்ந்திருத்தல்
- இறுத்தல் - செலுத்துதல்
- இலவு -பஞ்சு
- இழவு -மரணம்
இச்சொற்கள் உங்கள் மொழி விருத்தியில் பங்களிப்புச் செலுத்தும் என்று நம்புகின்றோம் அத்துடன் தொடர்ந்து உங்கள் ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம். மேலும் பல ஒத்தகருத்துச் சொற்களினை பகுதி-3ன் ஊடாக அறிந்து கொள்ளலாம்.
எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>
சிரசு
பதிலளிநீக்குதலை
நீக்குசிரம்
நீக்குஉரி
பதிலளிநீக்கு