ஒத்தகருத்துச் சொற்கள் _ பகுதி - 01
ஒத்தகருத்துச் சொற்கள் _ பகுதி 01
ஒரே பொருளைத் தரும் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒத்தகருத்துச் சொற்கள் எனப்படும்
அந்தவகையில் ஒத்தகருத்துச் சொற்கள் சில வருமாறு
- அரசன் - மன்னன்
- அகம் - உள்ளம்
- அக்கறை - ஆர்வம்
- அக்கிரமம் - அநியாயம்
- அகங்கை - உள்ளங்கை
- அகதி - கதியற்றவன்
- அங்காடி - சந்தை
- அங்கு - அவ்விடம்
- அச்சம் - பயம்
- அஞ்சலி - வணக்கம்
- அடவி - காடு
- அச்சன் - தந்தை
- அடிசில் - உணவு
- அடியிடல் - தொடங்குதல்
- அடைதல் - சேர்தல்
- அண்ணம் - மேல்வாய்
- அன்னம் - உணவு
- அண்மை - சமீபம்
- அணங்கு - அழகு , பெண், தெய்வமகள்
- அணை- வரம்பு
- அண்ணல் - சிறந்தோர், தலவர்
- அதரம் - உதடு
- அத்தனையும் - யாவும்
- அத்தி - எலும்பு, ஒருவகை மரம்
- அந்தம் - முடிவு
- அந்திநேரம் - மாலைநேரம்
- அபயம் - அடைக்கலம்
- அகங்காரம் - ஆணவம்,செருக்கு, அகந்தை
- அக்கரம் - எழுத்து
- அக்கினி - நெருப்பு
- அங்கத்துவம் - உறுப்புரிமை
- அகண்டம் - முழுமை
- அகம்பாவம் - தற்பெருமை
- அச்சாரம் - முன்பணம்
- அசுவம் - குதிரை
- அஞ்சுதல் - பயப்படுதல்
- அடர்த்தி - செறிவு
- அச்சாணி - சக்கரக் காப்பாணி
- அடிமை - தொண்டன்
- அடையாளம் - சின்னம்
- அடைக்கலம் - தஞ்சம்
- அணிகலன் - ஆபரணம்
- அனல் - தீ , சூடு
- அண்டம் - உலகம்
- அதிதி - விருந்தினர்
- அதர் - வழி
- அத்தை - மாமி
- அபசாரம் - குற்றம்
- அந்தரங்கம் - இரகசியம்
- அவதாரம் - திவ்யபிறப்பு
- அன்பு - நேசம்
- அற்புதம் - அதிசயம்
- அஞ்சல்தலை - முத்திரை
- அல் - இரவு
- அந்நியர் - பகைவர்
- அநீதி - அநியாயம்
- அழகு - வடிவு
- அழைத்தல் - கூப்பிடுதல்
- அறிதல் - தெரிதல்
- அரண் - கோட்டை
- அரன் - சிவன்
- அறிவியல் - விஞ்ஞானம்
- அலகு - சொண்டு
- அளகு - பெட்டைக்கோழி
- அளி - கொடு, வண்டு
- அலி - பேடி
- அளித்தல் - கொடுத்தல்
- அழித்தல் - இல்லாமல் செய்தல்
- அலை - திரை
- அளை - புற்று
- அழை - கூப்பிடு
- அல்லல் - துன்பம்
- அவி - தேவர் உணவு
- அழி பசி - மிகுந்த பசி
- அபாயம் - ஆபத்து
- அனுமதி - உத்தரவு
- அறம் - தருமம்
- அமைச்சர் - மந்திரிமார்
- அலங்கரித்தல் - அழகுபடுத்தல்
- அரசிறை - வரி
- அறிஞர் - சான்றோர்
- அடி - பாதம்
- அரி - சிங்கம்
- அசைதல் - ஆடல்
- அந்தணர் - மறையவர்
- அறிவு - ஞானம்
- அரவம் - பாம்பு ,சத்தம்
- அலர் - பூ
- அம்பலம் - சபை
- அம்பு பாணம்
- அத்திரம் - கணை
- அனங்கன் - காமன்
- அரி - பரி
- அமர் - யுத்தம்
- அழல் - நெருப்பு
- அவனி - உலகம்
- அமுது - உணவு
- அயன் - பிரமன்
- அரங்கம் - நாடக சாலை
- அருள் - இரக்கம்
- அரற்றல் - அழுதல்
- அவா - விருப்பம்
- அரவம் - ஒலி
- அருகுதல் - குறைதல்
- அளகம் - கூந்தல்
- அம்புலி - சந்திரன்
- அண்ணன் தமைமன்
- அனந்தல் - நித்திரை
- அம்புயம் - தாமரை
- அப்பு - நீர்
- அருந்துதல் - உண்ணல்
- அகிலம் - பூமி
- அரிவை - பெண்
- அந்தகன்- எமன்
- அறவர் - முனிவர்
- அசலம் - மலை
- அயர்வு - சோர்வு
- அகற்றுதல் - நீக்குதல்
அகர வரிசையில் உள்ள ஒத்தகருத்துச் சொற்கள் இங்கே தரப்பட்டுள்ளன. மேலும் ஒத்தகருத்து சொற்களை அறிய பகுதி-2 னுள் பிரவேசியுங்கள்.
நன்றி.
நன்றி.
ஆஞ்ஞானம்
பதிலளிநீக்குமேதினி
நீக்குகானகம்
நீக்குசூரியன்
நீக்குபா
நீக்குஇளந்தளிர் என்பதன் ஒத்த சொல் என்ன?
நீக்குசுசிக்கீ நல்ல மாற்றம் வரும்
பதிலளிநீக்குஏழை
நீக்குMusic drop
பதிலளிநீக்குகாய்
பதிலளிநீக்கு