header

அண்மையவை

செய்வினையும் செயப்பாட்டு வினையும்

 செய்வினையும் செயற்பாட்டு வினையும்

செய்வினையும் செயப்பாட்டு வினையும்


எழுவாய்க்கும் வினைக்கும் உள்ள உறவின் அடிப்படையில் வினைச் சொற்களை செய்வினை, செயற்பாட்டு வினை என இரு வகையாக வகைப்படுத்தலாம். 


செய்வினை 

எழுவாயை கருத்தாக கொள்ளும் வினைகள் செய்வினை எனப்படும்.

உதாரணம் : 

தம்பி தண்ணீர் குடித்தான் 

பசு புல் மேய்ந்தது 

யானை பாகனை கொன்றது


மேலே உள்ள வாக்கியங்களில் உள்ள குடித்தான், மேய்ந்தது, கொன்றது ஆகிய வினைகள் முறையே தம்பி, பசு, யானை ஆகியவற்றை எழுவாயாக கொண்டுள்ளன. இங்கு எழுவாயே (கருத்தாவே) வினையை செய்வதால் அது செய்வினை எனப்படுகிறது. 


செய்வினையின் அமைப்பு 

வினையடி + கால இடைநிலை + திணை பால் எண் இடவிகுதி 


 செயப்பாட்டுவினை 

செயப்படுபொருளை எழுவாயாக கொள்ளும் வினை செயப்பாட்டுவினை எனப்படும்.

 உதாரணம் : 

தண்ணீர் தம்பியால் குடிக்கப்பட்டது.

புல் பசுவால் மேயப்பட்டது.

பாகன் யானையால் கொல்லப்பட்டான்.


செயப்பாட்டுவினையின் அமைப்பு

 வினையெச்சம் + படு + கால இடைநிலை + திணை பால் விகுதி


இப்பொழுது செய்வினை செயப்பாட்டு வினை என்பவற்றுக்கு தரப்பட்ட உதாரணங்களை சற்று பார்க்கலாம்.

  1. யானை பாகனை கொன்றது
  2. பாகன் யானையால் கொல்லப்பட்டான்

முதல் வாக்கியத்தில் செயட்படுபொருளாக வந்த பாகன் எனும் சொல்  அதன் ஐ உருபு நீங்கி எழுவாயாக வந்துள்ளதுடன் முதல் வாக்கியத்தில் வந்துள்ள யானை எனும் எழுவாய் ஆல் உருபை ஏற்று யானையால் என்று வந்துள்ளது. அத்துடன் கொன்றது எனும் வினை படு எனும் சொல் சேர்ந்து கொல்லப்பட்டான்  என்று வந்துள்ளது. முதல் வாக்கியமானது எழுவாய் + செயப்படுபொருள் + பயனிலை எனும் அமைப்பில் வர இரண்டாவது வாக்கியம் செயப்படுபொருள் + எழுவாய் + பயனிலை எனும் அமைப்பில் வரும். இவ்வாறு செய்வினை வாக்கியத்தில் செயப்படுபொருளாக அமைந்து வரும் சொல் செயப்பாட்டு வினை வாக்கியத்தில் எழுவாயாக வரும். இது மாத்திரமின்றி செய்வினையில் வினைஅடிப்படை வடிவத்தில் இருக்க செயப்பாட்டு வினையில் அடிச்சொல் செய்ய எனும் வாய்ப்பாட்டு வடிவில் இருக்கும்.

உதாரணம் : திறந்தான் - திறக்கப்பட்டது 

எரித்தாள் - எரிக்கப்பட்டது


செய்வினை செயப்பாட்டு வினைக்கான மேலும் சில உதாரணங்கள்

செய்வினை 

கண்ணன் இரண்டு குருவிகளைப் பிடித்தான்.

செயப்பாட்டுவினை

இரண்டு குருவிகள் கண்ணனால் பிடிக்கப்பட்டது.


செய்வினை 

மாலா கவிதை எழுதினாள்.

செயப்பாட்டுவினை

கவிதை மாலாவால் எழுதப்பட்டது.


செய்வினை 

பத்திரிகைகள் அமைச்சரின் ஊழலை அம்பலமாக்கின 

செயப்பாட்டுவினை 

அமைச்சரின் ஊழல் பத்திரிகைகளால் அம்பலப்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை