header

அண்மையவை

பழமொழிகளும் அதன் கருத்துக்களும்

 பழமொழிகள்

பழமொழிகள்

பழமொழிகள் என்பவை காலம் காலமாக மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான அற நெறிகளையும் அறிவுரைகளையும்  சுருக்கமான   வாக்கியங்களில் வெளிப் படுத்துவதாகும். இவை தலைமுறை தலைமுறையாக வாய்மொழி வழியாகப் பரவி, மக்களின் பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் நீங்கா இடம்பிடித்துள்ளன.

பழமொழிகளின் முக்கியத்துவம்:

 * அனுபவ அறிவு: பழமொழிகள் பல தலைமுறைகளின் அனுபவத்தை சுருக்கமாக வெளிப்படுத்துகின்றன.

 * வாழ்க்கை நெறி: வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளையும், ஒழுக்கங்களையும் எடுத்துரைக்கின்றன.

 * சுருக்கமான விளக்கம்: சிக்கலான கருத்துகளை எளிமையாகவும் சுருக்கமாகவும் விளக்குகின்றன.

 * மொழி வளம்: இவை மொழியின் வளத்தையும், அழகையும் மேம்படுத்துகின்றன.

 * சமூகப் பண்பாடு: ஒரு சமூகத்தின் பண்பாடு, வரலாறு, வாழ்க்கை முறை ஆகியவற்றை உணர்த்துகின்றன.

சில பிரபலமான பழமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்:

    1. சண்டிக் குதிரைக்கு நொண்டிச் சாரதி - பொருத்தமற்ற நியமனம்.
    2. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் கணுக்கால் அளவு - அச்சமின்மை
    3. சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம் - உரியவரிடம் சென்று பிரச்சனையை தீர்க்க வேண்டும்
    4. சாதுமிரண்டால் காடு கொள்ளாது - அடங்கா கோபம்
    5. சாண் ஏற முழம் சறுக்கும்- உயர்ச்சியை மிஞ்சிய தாழர்ச்சி
    6. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் - பரீட்சையம் அல்லது எதையும் தொடர்ந்து செய்தால் வெற்றி உண்டாகும். 
    7. சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது - தகுதியற்றவர் முயற்சி பயன்தராது. 
    8. சிறுதுள்ளி பெருவெள்ளம் -  சிறுகச் சிறுகச் சேர்த்தால் அதிகம் சேரும். 
    9. சிறு துரும்பும் பல் குத்த உதவும் - சிறு பொருளையும் பாதுகாக்க வேண்டும்.
    10. சுடர்விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் -  முன்னேற்றத்திற்கு துணை வேண்டும். 
    11. சுண்டைக்காய் காப்பணம் சுமை கூலி முக்கால் பணம் -  கூடிய முயற்சியில் குறைந்த பலன்/ வரவை விட செலவு அதிகம்.
    12. சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு -  அச்சமின்மை 
    13. சும்மா வந்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பாராதே - இலவச பொருளின் தரத்தை அறிய தேவையில்லை.
    14. சும்மா கிடக்கிற சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி - தானாக பிரச்சனையை உண்டு பண்ணல்.
    15. சுயபுத்தி போனாலும் சொற்பூத்தி வேண்டாமா - அறிவுரையை கேட்டு நடக்க வேண்டும். 
    16. சுவருக்கும் காதுண்டு - அவதானமாக கேட்டு நடக்க வேண்டும். 
    17. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய வேண்டும் - உயிரைப்பேண உடம்பை பேணல் வேண்டும். 
    18. சுவாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டான் - இடைத்தரகரின் இடை ஈடு. 
    19. சூடு கண்ட பூனை அடுப்பங்கரையை நாடாது - அனுபவம் தீய வழியில் செல்லாது 
    20. செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும் - வெளிப்பகட்டு கலைந்தால் உண்மை விடயங்கள் வெளிவரும். 
    21. செத்தும் கொடுத்தான் சீதக்காதி - கொடைச் சிறப்பு 
    22. செய்வன திருந்தச் செய் - எதையும் திருத்தமாக செய்தல் வேண்டும்.
    23. செத்த நாய் திரும்பக் கடியாது - வலிமையற்றவரால் எந்தப் பயனும் இல்லை
    24. செல்வம் என்பது சிந்தனையின் நிறைவே - மனதிருப்தியே சிறந்த செல்வம்
    25. செவிடன் காதில் ஊதிய சங்கு - கேட்காதது போல் இருத்தல்
    26. சேற்றிலே புதைந்த யானையை காக்கையும் கொத்தும் - வலியவர் நிலை தாழ்ந்தால் எளியவரும் வருத்துவர்
    27. சேற்றிலே முளைத்த செந்தாமரை - இழிந்த இடத்தில் சிறந்த பொருள்
    28. சைகை அறியாதவன் சற்றும் அறியான் - குறிப்பறிதலின் அவசியம்
    29. சொப்பனம் கண்ட அரிசி சோற்றுக்ககு ஆகுமா - பயனின்மை
    30. சொல்லுகிறது ஒன்று செய்கிறது ஒன்று - சொல்லியபடி செய்வதில்லை 
    31. சொல்லாத பிறவாது அள்ளாது குறையாது - காரணம் இன்றி காரியமில்லை
    32. சொல்லிப் போக வேண்டும் சுகத்திற்கு சொல்லாமல் போக வேண்டும் துக்கத்திற்கு -  நன்மைக்கு சொல்லியும் தீமைக்கு சொல்லாமலும் செல்ல வேண்டும்
    33. சொற்கேளா பிள்ளை குலத்துக்கு ஈனம் -சொற்கேட்டு நடத்தலின் முக்கியத்துவம்
    34. சொறிந்து தேய்க்காத எண்ணையும் பரிந்து இடாத சோறும் பாழ் - எதையும் பணிவோடும் விருப்பத்துடனும் செய்ய வேண்டும்
    35. சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை -  சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லுதல்
    36. சோழியன் குடுமி சும்மா ஆடாது -  பயன் கருதி உதவி செய்தல்
    37.  சோற்றுக்குக் கேடு பூமிக்கு பாரம் - தொழில் செய்து வாழ வேண்டும்
    38. டெல்லிக்கு ராஜா என்றாலும் தாய்க்கு பிள்ளை தான் -  எவ்வளவு உயர்ந்த மனிதன் என்றாலும் அவன் தாயை மதிக்க வேண்டும்.

    39. தங்கம் தரையிலே தவிடு பானையிலே - முக்கியமற்ற பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தல்.
    40. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது
    41. தண்ணீரிலே விளைந்த உப்பு தண்ணீரிலே கரைய வேண்டும் -  எப்படி தோன்றியதோ அப்படியே அழியும்.
    42. தம்பி உடையான் படைக்கு அஞ்சான் - சகோதரத்துவத்தின் வலிமை
    43. சரித்திரப்பட்டாலும் தைரியம் விடாதே - வறுமையிலும் செம்மையாக வாழ வேண்டும்
    44. தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும் - எதையும் நாம் உணரும்போதே அறியலாம்.
    45. தலை இருக்க வாழ ஆடலாமா? 
    46. தலைக்கு மேல் வெள்ளம் போன பின் சாண் ஓடி என்ன முழம் ஓடி என்ன - துன்பம் வந்தபின் முயற்சி எடுத்துப் பயனில்லை. ஆபத்து வரும் முன்னே தப்பித்துக் கொள்ள வேண்டும்.
    47. தவளையும் தன் வாயால் கெடும் - நாவடக்கத்தின் அவசியம்.
    48. தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும் - சிறிய பொருளை திருடியவன் பெரிய பொருளையும் திருடுவான்.
    49. தன்வினை தன்னைச் சுடும் - நாம் செய்வதின் பலன் நம்மையே வந்து சேரும்.
    50. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா? - தீமையானவற்றை தீண்டினால் தீமையே உண்டாகும்.
    51. தன்னை புகழாத கம்மாளன் இல்லை - தற்புகழ்ச்சி
    52. தன் குற்றம் இருக்க பிறர் குற்றம் பார்க்கலாமா? - உறவை திருத்தமும் தன்னைத்தானே திருத்த வேண்டும்.
    53. தனக்கென்று இருந்தால் சமயத்துக்கு உதவும் - சேமிப்பின் முக்கியத்துவம்/ பிள்ளைச் செல்வத்தின் சிறப்பு.
    54. தாயைத் தவிர தரணியில் சகலமும் வாங்கலாம் - தாயின் மேன்மை 
    55. தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு - உறவும் உரிமையும் வேறானவை.
    56.  தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை - பிரதிபலிப்பு
    57. தானாடா விட்டாலும் தன் தசை ஆடும் - உறவின் மேன்மை
    58.  நாமொன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கும் -  எல்லாம் விதிப்படி நடக்கும்
    59.  தானே கனியாத பழத்தை தடி கொண்டு அடித்தால் கனியுமா? - வற்புறுத்தி செய்ய முடியாது.
    60.  திக்கற்றவனுக்கு தெய்வமே துணை - கதியற்றவனை கடவுள் காப்பார். 
    61. திரு ஏற உரு ஏறும் - செல்வம் பெருக தலைக்கனமும் பெருகும்.
    62.  திருடப் போனாலும் திசை வேண்டும் - எல்லாவற்றிற்கும் அதிர்ஷ்டம் தேவை.
    63.  திரை கடல் ஓடி திரவியும் திரவியம் தேடு - எப்பாடுபட்டாவது செல்வத்தைச் சேர்.
    64. திணை விதைத்தவன் திணை அறுப்பான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் - செய்த செயலுக்கு ஏற்ற பலனே கிடைக்கும்.
    65.  தீராக் கோபம் போராய் முடியும் - கோபம் கொடியது. 
    66. துட்டரைக் கண்டால் தூர விலகு - தீமைக்கு விலகி நடக்க வேண்டும். 
    67. துணைக்கு போனாலும் பிணைக்குப் போகாதே -  பிணைக்கு நிற்கக்கூடாது.
    68.  துள்ளுகிற மாடு பொதி சுமக்கும் - செருக்குடன் நடப்போர் துன்பமடைவர்.
    69. தூரத்து தண்ணீர் ஆபத்துக்கு உதவாது
    70.  தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி 
    71. திருப்தியற்ற மரம் தூங்குற நரிக்கு இரை கிடையாது - சோம்பல் கூடாது.
    72. தேய்ந்தாலும் சந்தன கட்டை மனம் போகாது 
    73. தொட்டில்ப் பழக்கம் சுடுகாடு மட்டும் - சிறுவயதில் பழகிய பழக்கம் முதுமை வரை இருக்கும்.
    74. தோட்டி போல் உழைத்து துரைபோல் சீவிக்க வேண்டும் தையல் சொல் கேட்டால் எய்திடும் கேடு - பெண் புத்தி அழிவை தரும்.

இவை சில பொதுவான பழமொழிகள் மட்டுமே. ஒவ்வொரு பழமொழிக்கும் ஒரு ஆழமான கருத்தும், வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரையும் உள்ளது.

கருத்துகள் இல்லை