header

அண்மையவை

தனிவினையும் கூட்டுவினையும்

 தனி வினையும் கூட்டுவினையும்

தனிவினையும் கூட்டுவினையும்


வினைச் சொற்களின் அமைப்பின் அடிப்படையில் இவை  வகைப்படுத்தப்படுகின்றன.

தனி வினை

வினையடியும் ஒட்டுக்களும் இணைந்த வினைச்சொற்கள் தனி வினைகள் ஆகும். உதாரணம் :  தா, தாருங்கள்
வா, வருகிறேன்

ஒரு வினைச் சொல்லானது வினையடி + இடைநிலை + விகுதி என்ற அமைப்பில் இருக்கும் என்று முன்னர் கற்றுள்ளோம்.  இதில் வினையடி  என்பது பகாப்பதமாகும்.  அதனை மேலும் பொருள் தரக்கூடிய கூறுகளாகப் பிரிக்க முடியாது.  இவ்வாறு பகாப்பதமாக அமையும் வினையடிகள் தனிவினையடிகள் எனப்படும்.  இவ்வாறாக அமைந்து வரும் தனிவினையடிகள்,  தனிவினையடிகளைக் கொண்டமைந்த வினைச்சொற்கள் தனிவினை எனப்படும். 

தனி வினையடிளுடன் சேர்ந்து வரும் விகுதி, இடைநிலை என்பன ஒட்டுக்கள் எனப்படும்.  தனிவினையானது இவ்வாறாக ஒட்டுக்களைக் கொண்டதாகவும் அமையலாம் அல்லது தனி வினை அடியை மட்டும் கொண்டதாகவும் அமையலாம்.

உ+ம் : 
• வா
• போ
• நில்
• குத்து
• ஆடு
• நட
• வந்தேன்
• வருகிறேன்
• வருவேன்
• போகின்ற
• நின்ற
• போய்
• நிற்பேன்

கூட்டுவினை

ஒன்றுக்கு மேற்பட்ட அடிச்சொற்களை கொண்ட அல்லது வினையடிகளைக் கொண்ட வினை கூட்டுவினை எனப்படும்.
உதாரணம் :
• வெட்டு + எறி = வெட்டியெறி -  வெட்டியறிந்தான்
• கட்டு + பிடி = கட்டிப்பிடி = கட்டிப்பிடித்தான்

குறிப்பு :
இவற்றினது வினையடிகள் பகுபதங்களாக காணப்படும்

கூட்டு வினையாக்கம்
பொதுவாக கூட்டு வினைகள் மூன்று வகையில் ஆக்கப்படுகின்றன.

1. ஒரு பெயர்ச் சொல்லுடன் வினைச்சொல்லினை சேர்த்து ஆக்குதல்.  இதன் அமைப்பு பின்வருமாறு அமையும்.


மேலும் சில உதாரணங்கள்
  1. களவு + எடு = களவெடு
  2. தந்தி + அடி = தந்தியடி
  3. தோல்வி +அடை = தோல்வியடை
  4. கைது + செய் = கைதுசெய்
  5. சீர் + அழி = சீரழி
  6. கை + பிடி  = கைப்பிடி
  7. சூறை + ஆடு = சூறையாடு
  8. கேள்வி + படு  = கேள்விப்படு
  9. உத்தரவு + இடு = உத்தரவிடு

2. ஒரு வினைச் சொல்லுடன் ஒரு வினைச்சொல்லை சேர்த்து ஆக்குதல்.

மேலும் சில உதாரணங்கள்
  1. கிள்ளு + எறி = கிள்ளியெறி
  2. காத்து + இரு = காத்திரு
  3. கட்டி + பிடி = கட்டிப்பிடி
  4. காட்டி + கொடு = காட்டிக்கொடு
  5. ஏற்று + கொள் = ஏற்றுக் கொள்
  6. சுட்டி + காட்டு = சுட்டிக்காட்டு
  7. தட்டி + கேள் = தட்டிக்கேள்
  8. சொல்லி + கொடு = சொல்லிக்கொடு
3. ஒரு இடைச் சொல்லுடன் வினைச்சொல்லை சேர்த்து கூட்டுவினை ஆக்குதல்.

மேலும் சில உதாரணங்கள்
  1. முன் + ஏறு = முன்னேறு
  2. பின் + வாங்கு = பின்வாங்கு
  3. பின் + அடை = பின்னடை
  4. சரி + பார் = சரிபார்
  5. சரி + கட்டு = சரிக்கட்டு 

கருத்துகள் இல்லை