வேற்றுமைகள் பகுதி 01
வேற்றுமை
வாக்கியத்தில் பெயச்சொற்களின் இலக்கணத் தொழிற்பாடு வேறுபடுவது வேற்றுமை எனப்படும். இலக்கணத் தொழிற்பாடு என்பது பெயர்ச் சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடையிலான வாக்கிய ரீதியான உறவைக் குறிக்கும். தமிழில் வேற்றுமை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன தொல்காப்பியம் நன்னூல் வேற்றுமைகள் எட்டு என்று கூறுகின்றன எனினும் பிற்கால மொழியியல் ஆய்வாளர்கள் வேற்றுமை ஒன்பது உள்ளன என்றும் கூறுகின்றனர்.
முதலாம் வேற்றுமை
இதனை எழுவாய் வேற்றுமை எனவும் இலக்கண நூல்கள் கூறும். பெயர்ச்சொல் வாக்கியத்தில் எழுவாயாக செயல்படுவது எழுவாய் வேற்றுமை ஆகும். இதற்கு உருபு இல்லை. உருபு ஏற்காத பெயர்ச் சொல்லே எழுவாயாக செயற்படுகின்றது.
(உ+ம்) சூரியன் உதித்ததுமரம் சரிந்தது
இங்கு சூரியன், மரம் என்பன பெயர்ச் சொற்களாகும். இவை திரிபு அடையாத பெயர்ச் சொற்களாகும். ஆகவே முதலாம் வேற்றுமைக்குரியதாக வந்துள்ளது.
குறிப்பு : முதலாம் வேற்றுமைக்கு என்பவன், என்பவள், ஆனவன், ஆனவள், என்பது, என்பவை.... என சொல் உருபுகள் இருப்பதாக சில இலக்கணக்காரர்கள் கூறுகின்றனர். இருப்பினும் அவை சொல்லுருபுகள் அல்ல அவையும் பெயர்ச்சொற்களே என பேராசிரியர் எம். ஏ. நுஃமான் குறிப்பிடுகின்றார்.
இரண்டாம் வேற்றுமை
இதனை செயற்படுபொருள் வேற்றுமை என்றும் கூறுவர். வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல் செயற்படு பொருளாக தொழிற்படுவதை இவ் வேற்றுமை குறிக்கின்றது. இவ் வேற்றுமைக்கான உருபு "ஐ" ஆகும். 2ம் வேற்றுமை பின்வரும் பொருள்களைக் கொண்டுள்ளதாக நன்னூல் கூறுகின்றது.
- ஆக்கப்படு பொருள் - வீட்டை கட்டினான்.
- அழிக்கப்படு பொருள் - வீட்டை இனித்தான்.
- அடையப்படு பொருள் - வீட்டை அடைந்தன்.
- துறக்கப்படு அல்லது நீங்கல் பொருள் - வீட்டை விட்டு சென்றான்.
- ஒப்பு பொருள் - அந்த வீட்டைப் போன்றது.
- உடைமைப் பொருள் - இரண்டு வீடுகளை வைத்திருந்தான்.
மேலே குறிப்பிட்ட பொருட்கள் யாவும் வினையின் பொருள்களே அன்றி வேற்றுமையின் பொருள்கள் அல்ல என தற்கால அறிஞர்கள் கூறுவர். இப்படி பார்த்தால் தலையைச் சொறிந்தான், கன்னத்தை கிள்ளினான் போன்ற வாக்கியங்களில் இரண்டாம் வேற்றுமை பொருளை சொறிதல் பொருள் கிள்ளல் பொருள் என்றெல்லாம் விவரிக்க வேண்டி இருக்கும் என கு.பரமசிவம் என்னும் மொழியியல் அறிஞர் தனது "இக்கால தமிழ் மரபு" எனும் நூலில் கிண்டலாக கூறியுள்ளமையை உதாரணமாக கூறலாம். இரண்டாம் வேற்றுமையின் பொருளை சுருக்கமாக சொல்வதானால் ஒரு பெயர்ச்சொல் வாக்கியத்தில் செயற்படு பொருளாக தொழிற்படுவதே இரண்டாம் வேற்றுமை என கூறலாம்.
மூன்றாம் வேற்றுமை
இதனை உடநிகழ்ச்சி வேற்றுமை என்றும் கூறுவர். ஆல், ஆன்,ஒடு, ஓடு என்பன இதன் உருபுகள் ஆகும். இவ் உருபுகளில் தற்காலத்தில் ஆல், ஓடு ஆகியன மாத்திரமே வழக்கில் உள்ளன. கொண்டு, உடன் என்பன இவற்றின் சொல் உருபுகள் ஆகும் . இவ் வேற்றுமையானது கருவி, கருத்தா, உடநிகழ்ச்சி என மூன்று வகையான பொருள்களை கொண்டு அமைந்துள்ளது. இதில் ஆல் உருபு கருவி கருத்தா பொருள்களில் அமைந்து வரும் எனவும் ஓடு உருபு உடநிகழ்ச்சி பொருளாக வரும் எனவும் இலக்கண நூல்கள் கூறுகின்றன.
- கருவி
நான் இரும்பால் மேசை செய்தேன்.
- கருத்தா
என்னால் ஆங்கிலம் பேச முடியும்.
- உடநிகழ்ச்சி
தம்பி அண்ணனோடு சென்றான்.
இவை தவிர தற்காலத் தமிழில் பின்வரும் பொருள்களும் வழங்குகின்றன.
- காரணப்பொருள்
- மூலப்பொருள்
- அடைமொழிப் பொருள்
- கலப்புறு பொருள்
- கூட்டல் அல்லது சேர்த்தல் பொருள்
- ஓர் இடத்தில் தொடர்ந்திருத்தல்
- வரையறைப் பொருள்
- வினையடையாக்கி
நான்காம் வேற்றுமை
- கு- நாட்டிற்கு
- அக்கு - எனக்கு
- க்கு - எலிக்கு
- உக்கு - அப்பாவுக்கு
- புலவருக்கு பொன் கொடுத்தான் - கொடை
- எலிக்கு பகை பூனை - பகை
- கண்ணனுக்கு நண்பன் துரியோதனன் - நட்பு
- கண்ணமைக்கும் மகன் விபுலானந்தர் - உறவு
- மாணவருக்கு உரியது அடக்கம் - தகுதி
- மேசைக்கு பலகை வாங்கினான் - முதற்காரணம்
- கூலிக்கு வேலை செய்தான் - நிமித்த காரணம்
- எல்லைப் பொருள் -இலங்கைக்கு வடக்கில் இந்தியா இருக்கிறது.
- ஓர் இடம் நோக்கி நகர்தல் - நான் கொழும்புக்கு போகிறேன்.
- அனுபவப் பேறு - அவருக்கு மருத்துவத்தில் அனுபவம் உண்டு.
- காலக்குறிப்பு - ஆசிரியர் மூன்று மணிக்கு வரச் சொன்னார்.
- வீதம்,விகிதாசாரம் - 50 க்கு 50
- வினையடை ஆக்கம் - வீட்டுக்கு வீடு
கருத்துகள் இல்லை