உவமை அணி
அணிகள்
அணி என்றால் அழகு என்று பொருள்படும். அணியிலக்கணம் பற்றி கூறும் நூலில் தண்டியலங்காரம் முக்கியமானதாகும். அணிகள் இருவகைப்படும்.• சொல்லணிகள்
• பொருள் அணிகள்
சொல் அணிகள்
சொல்லடிகள் ஆறு வகைப்படும்.• எதுகை
• மோனை
• சிலேடை
• மடக்கு
• பின்வருநிலை
• அந்தாதி
பொருள் அணிகள்
பொருள் அணிதல் 35 வகைப்படும் என தண்டியலங்காரம் கூறுகின்றது. அவற்றில் பின்வருவன முக்கியமானவை ஆகும்.• உவமையணி
• உருவக அணி
• தன்மை நவிற்சி அணி
• உயர்வு நவிற்சி அணி
• தற்குறிப்பேற்ற அணி
• வஞ்சப்புகழ்ச்சி அணி
• முரண் அணி
• வேற்றுப்பொருள் வைப்பு அணி
உவமையணி
அணி இலக்கணத்தில் முதன்மையான அணி உவமை அணியாகும். கவிஞர் தான் கூற வந்த விடயத்தை தெரிந்த பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணி ஆகும். அதாவது ஒன்றை விளக்குவதற்கு அதனோடு தொடர்புடைய வேறொன்றை உவமையாக கூறி ஒப்பிட்டு விளங்க வைப்பது உவமையணி ஆகும்உவமை அணிகள் ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிடும்போது தெரியாத ஒன்றை தெரிந்த ஒன்றின் மூலம் விளக்க முற்படுவர். இதுவே உவமை அணியின் அடிப்படை பண்பு. இருப்பினும் இலக்கிய வழக்கிலும் உலகியல் வழக்கிலும் ஒரு பொருளை அதனை விட சிறந்த ஒன்றோடு ஒப்பிட்டு ஒப்பிடப்படும் பொருளை சிறப்பிப்பதற்கே உவமை பெரிதும் கையாளப்படுகிறது.
உதாரணம் - தாமரை போன்ற முகம்
இங்கு முகத்தினை விட தாமரை அழகானது எனும் அடிப்படையிலேயே கையாளப்பட்டுள்ளது.
உவமை அணி பற்றி தண்டியலங்காரம் பின்வருமாறு கூறுகின்றது.
" பண்பும் தொழிலும் பயனும் என்று
இவற்றின்
ஒன்றும் பலவும் பொருளொடு பொருள்
புணர்ந்து
ஒப்புமை தோன்ற செப்புவது உவமை"
அதாவது புலவர் தான் கூற வந்த விடயத்தை வேறு ஒரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறும் போது அப்பொருளின் பண்பு தொழில் பயன் ஆகியவற்றை காரணமாக கொண்டு இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை புறப்படும் படி பாடுவது உவமையணி ஆகும் என்று கூறுகிறது.
உவமை அணியின் பிரதான அம்சங்களாக பின்வருவன காணப்படுகின்றன.
உவமானம்
உவமேயம்
பொதுத்தன்மை
உவமை உருபு
உவமானம்
கவிஞன் தான் கூற வந்த விடயத்தை ஒப்பிட்டு விளக்குவதற்காக எடுத்துக்கொண்ட பொருள் உவமானம் ஆகும். இதனை தெரிந்த பொருள் என்றும் கூறலாம்.உதாரணம் - சவர்க்கார முறை போன்று கடல் அலைகள் நுழைத்து எழுந்தன.
இங்கு கவிஞன் கடல் அலைகள் எப்படி நுழைத்து எழுந்தன என்பதனை விளக்குவதற்கு சவர்க்கார நுரையை உதாரணமாக காட்டியுள்ளார். இவ்வாறு ஒன்றை விளக்குவதற்கு உதாரணமாக எடுத்துக் காட்டப்படும் விடயம் உவமானம் ஆகும். மேற்குறித்த வசனத்தில் சவர்க்கார நுரை என்பது உவமானம் ஆகும்.
உவமேயம்
இதனை விளக்க வேண்டிய விடயம் என்றும் கூறலாம். அதாவது கவிஞன் எந்த விடயத்தை பற்றி கூற வருகிறானோ அதுவுமே உவமேயம் ஆகும்.உதாரணம் - சவர்க்கார நுரையைப் போன்று கடல் அலைகள் நுரைத்து எழுந்தன.
இங்கு கடல் அலைகள் நுரைத்தல் என்பது உவமேயம் ஆகும்.
பொதுத்தன்மை
இரண்டு பொருட்களை ஒப்பிடும்போது இரண்டுக்கும் பொதுவாக காணப்படும். இயல்பு பொதுத்தன்மை ஆகும்.உதாரணமாக மேலே குறிப்பிட்ட வசனத்தில் உள்ள பொதுத்தன்மை நுரைகளில் தோற்றம் ஆகும். நாம் சவர்க்காரத்தை நுரைக்கும்போது அது எப்படி நுரைக்கிறதோ அதேபோல் கடல் அலைகள் நுரைப்பதாக கூறப்பட்டுள்ளது.
போல, போன்று, ஒத்த, புரைய, அன்ன போன்ற பல உவமையை உருபுகள் உள்ளன.
உவமை உருபுகள்
உவமானத்தையும் உவமையத்தையும் ஒப்பிடுவதற்கு பயன்படும் இடைச்சொல் உவமை உருபுகள் ஆகும்.போல, போன்று, ஒத்த, புரைய, அன்ன போன்ற பல உவமையை உருபுகள் உள்ளன.
இதனையே நன்னூல்
போல புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்துருபே
என்று கூறுகிறது.
*உவமை அணிகள் 24 வகைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
உதாரணம்
"கண்ணுற்றான் வாலி நீலக்கார்முகில் கமலம் பூத்து
மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை"
கருமேகம் ஒன்று தாமரை பூக்களை பூத்து கையிலே வில்லும் தாங்கி வந்தது போல் ராமன் வந்தான். இங்கு குறிப்பிடப்பட்ட செயல் உண்மையில் நடைபெறாத ஒன்றாகும். இவ்வாறு இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.
உவமை அணிகளுக்கான சில உதாரணங்கள்
போல புரைய ஒப்ப உறழ
மானக் கடுப்ப இயைய ஏய்ப்ப
நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத்துருபே
என்று கூறுகிறது.
*உவமை அணிகள் 24 வகைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இல் பொருள் உவமையணி
உலகில் இல்லாத ஒரு பொருளை உவமானமாக எடுத்து கூறி விளக்குதல் அதாவது புலவர் ஒரு பொருளுக்கு உவமை கூறும் பொழுது உலகில் இல்லாத பொருளை அல்லது நடைபெறாத செயலை உவமையாக கூறுவது இல் பொருள் உவமையணி ஆகும்.உதாரணம்
"கண்ணுற்றான் வாலி நீலக்கார்முகில் கமலம் பூத்து
மண்ணுற்று வரிவில் ஏந்தி வருவதே போலும் மாலை"
கருமேகம் ஒன்று தாமரை பூக்களை பூத்து கையிலே வில்லும் தாங்கி வந்தது போல் ராமன் வந்தான். இங்கு குறிப்பிடப்பட்ட செயல் உண்மையில் நடைபெறாத ஒன்றாகும். இவ்வாறு இல்லாத ஒன்றை உவமையாக கூறுவது இல்பொருள் உவமையணி ஆகும்.
உவமை அணிகளுக்கான சில உதாரணங்கள்
- மலை போன்ற தோள்களை உடையவன்.
- தேன் போன்ற தமிழ்
- கடல் போன்ற துன்பம்
- முத்து போன்ற பற்கள்
- கார்முகில் ஒப்ப மேனியான்
கருத்துகள் இல்லை