இடைநிலை மெய்மயக்கம்
இடைநிலை மெய்மயக்கம்
சொல்லாக்கத்தில் சொல்லிக் இடையில் வரும் எழுத்துக்களை இடைநிலை எழுத்துக்கள் என்பர். அந்த வகையில் சொல்லின் இடையில் ஒரே மெய் இரட்டித்து அல்லது பிற மெய்களுடன் இணைந்து வருவதை இடைநிலை மெய்மயக்கம் என்று தமிழ் இலக்கண ஆசிரியர் கூறுவர்.
- இடைநிலை மயக்கம் இரண்டு வகைப்படும்
- உடனிலை மெய்மயக்கம்
- வேற்றுநிலை மெய்மயக்கம்
உடனிலை மெய்மயக்கம்
சொல்லாக்கத்தில் சொல்லின் இடையில் ஒரே மெய் இரட்டித்து வருவது உடனிலை மெய்மயக்கம் எனப்படும்.
- தமிழில் ர்,ழ் தவிர்ந்த 16 மெய்களும் சொல் இடையில் இரட்டித்து வரும் .
- க்க்- அக்கா
- ச்ச்- பச்சை
- ட்ட் - வட்டம் ,தொட்டி
- த்த்- மெத்தை
- ப்ப்- அப்பா ,தப்பு
- ற்ற் - வெற்றி, ஒற்றை
- ங்ங் - அங்ஙனம் ,எங்ஙனம்
- ஞ்ஞ் - விஞ்ஞானம்
- ண்ண்- தண்ணீர்
- ந்ந் - அந்நியன், செந்நெறி
- ம்ம் - அம்மா ,தும்மல்
- ன்ன் - மன்னன் ,அன்னை
- ய்ய் - வெய்யில்
- ல்ல் - இல்லை ,செல்லம்
- வ்வ் - செவ்வாய்
- ள்ள் - பள்ளம்
வேற்றுநிலை மெய்மயக்கம்
சொல்லாக்கத்தில் சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்கள் இணைந்து வருவது வேற்றுநிலை மெய்மயக்கம் எனப்படும்.
தமிழ்ச் சொற்களில் க், ச் , த் , ப் தவிர்ந்த 14 மெய்களும் சொல் இடையில் குறிப்பிட்ட சில மெய்களுடன் இணைந்து வரும்.
- டகரமும் றகரமும் க்,ச்,ப் ஆகியவற்றுடன் மயங்கும்
- ட்க் - வெட்கம்
- ட்ச் - காட்சி
- ட்ப் - நுட்பம்
- ற்க் - சொற்கள்
- ற்ச் - பயிற்சி
- ற்ப் - கற்பு
2 .மகரம் பகரத்துடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ம்ப்- தம்பி ,அம்பு
3. நகரம் தகரத்துடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ந்த் - தந்தை, பந்து
4. னகரம் ப், ற், க், ச், ம் ஆகியவற்றுடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ன்ப் - அன்பு, இன்பம்
- ன்ற்- நன்றி
- ன்க் - நான்கு
- ன்ச் - இன்சொல்
- ன்ம் - நன்மை
5. ணகரம் ப், ட் ,க், ம் ஆகியவைகளுடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ண்ப்- நண்பர்
- ண்க்- விண்கலம்
- ண்ட்- தொண்டர்
- ண்ம் - பெண்மை
6. ஞகரம் சகரத்துடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ஞ்ச் - இஞ்சி ,மஞ்சள்
7. ஙகரம் ககரத்துடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ங்க் - சங்கம், தங்கம்
8. யகரம் க்,ச்,த்,ப்,ம்,வ் ஆகியவற்றுடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ய்க்- செய்கை
- ய்ச் - பொய்சொல்
- ய்த்- செய்தி
- ய்ப்- செய்பவன், மெய்பெரிது
- ய்ம்- வாய்மை
- ய்வ் - தெய்வம்
9. ரகரம் , ழகரம் என்பன க், த், ப் , ம், வ் ஆகிய மெய்களுடன் மயங்கும்.
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ர்க்- மார்கழி
- ர்த்- தேர்தல்
- ர்ப்- மார்பு
- ர்ம் - நேர்மை
- ர்வ் - பார்வை
- ழ்க்- வாழ்க
- ழ்த் - வாழ்தல்
- ழ்ப் - வாழ்பவர்
- ழ்ம் - ஏழ்மை
- ழ்வ் - வாழ்வு
10. லகரம் க்,ப், வ்,ய் ஆகியவைகளுடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ல்க்- செல்க
- ல்ப் - இயல்பு
- ல்வ்- கல்வி
- ல்ய்- கல்யாணம்
11. ளகரம் க், ப், வ் ஆகியவைகளுடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- ள்க் - கொள்கை
- ள்ப் - ஆள்பவன்
- ள்வ் - கள்வன்
12. வகரம் யகர மெய் உடன் மயங்கும்
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- வ்ய் - தெவ்யாது ( தெவ் - பகை )
13. தற்காலத்தில் க் த்,ப் ஆகிய வல்லினங்களும் வேற்று நிலை மெய் மயக்கத்தில் இடம்பெறுகின்றன.
எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டு
- க்த்- சக்தி
- க்ன் - அக்னி , யுக்தி
- த்ம் - ஆத்மா ,பத்மா
- த்வ் - சாத்வீகம்,
- ப்த் - சப்தம்
- தனிச்சொற்களில் அல்லது கூட்டுச் சொற்களில் சொல் இடையில் ய் ,ர் , ழ் ஆகிய மெய்கள் வரும்போது 3 மெய்கள் மயங்கி வருவதைக் காணமுடிகின்றது. எடுத்துக்காட்டு
- ய்க்க்- வாய்க்கால்
- ய்த்த்- காய்த்தல்
- ய்ந்த்- சாய்ந்தது
- ய்ச்ச்- காய்ச்சல்
- ய்ப்ப்- வாய்பாடு
- ய்ங்க் - வேங்குழல்
- ர்க்க்- சேர்க்கை
- ர்த்த்- பார்த்தேன்
- ர்ந்த்- சேர்ந்து
- ர்ச்ச்- தேர்ச்சி
- ர்ப்ப்- ஆர்ப்பாட்டம்
- ழ்ச்ச்- சூழ்ச்சி
- ழ்ப்ப்- காழ்ப்பு
- ழ்ந்த்- வாழ்ந்தேன்
- ழ்க்க் - வாழ்த்து
- ழ்ங்க் - பாழ்ங்கிணறு
எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்துங்கள்>>>>
கருத்துகள் இல்லை