எழுத்தின் பரம்பல் - இறுதி நிலை எழுத்துக்கள் அல்லது சொல் இறுதியில் வரும் எழுத்துக்கள்
இறுதிநிலை எழுத்துக்கள்
இறுதி நிலை என்பது ஒரு எழுத்து சொல்லாக்கத்தில் சொல்லின் இறுதியில் இடம் பெறுவதை குறிக்கும்.
- எ, ஒ, ஔ தவிர்ந்த ஏனைய உயிர் எழுத்துக்கள் சொல்லாக்கத்தில் இறுதி நிலையில் வருகின்றன
- அ - நட , கட , நல்ல, பெரிய, பல, சில
- ஆ - வா , நிலா, பூங்கா
- இ - படி , நடி , பணி, புலி, எலி , நன்றி
- ஈ - நீ , தீ
- உ - உப்பு , கரும்பு , நன்று , இன்று , பங்கு
- ஊ - பூ
- ஏ - நானே , அவனே , என்னே
- ஐ - தலை , மலை , தென்னை , பனை
- ஓ - போ, யாரோ , அறிந்தோ , அறியாமலோ
- எகரம் பழந்தமிழிலும் சொல் இறுதியில் இடம் பெறவில்லை
- ஒகரம் பழந்தமிழில் "தொ" என்னும் சொல்லில் மட்டும் சொல் இறுதியில் இடம்பெற்றது.
- ஔகாரம் பழந்தமிழில் கௌ, வௌ ஆகிய சொற்களில் மட்டும் இறுதி நிலையில் இடம்பெற்றது. இச்சொற்கள் கௌவு, வௌவு என பிற்காலத்தில் வடிவ மாற்றம் அடைந்தன.
- ஏகாரம் இடைச்சொல் ஆகவே இறுதி நிலையில் இடம் பெறுகின்றது
- ஒகரம் பெரும்பாலும் இடைச்சொல் ஆகவே இறுதி நிலையில் இடம் பெறுகின்றது
- மெய்யெழுத்துக்களில் ண், ம், ன் ஆகிய மூன்று மெல்லினங்களும் ய், ர், ல், ழ்,ள் ஆகிய 5 இடையினங்களும் சொல்லாக்கத்தில் இறுதிநிலையில் வருகின்றன.
- ண் - மண், பின் , கண், பெண்
- ம் - நாம் , மனம் , இடம் , நிலம்
- ன் - நான் , மான் , பொன்
- ய் - மெய் , மெய் , வாய் , நாய்
- ர் - போர் , பயிர்
- ல் - சொல் , நெல் , கல்
- ழ் - வாழ் , வீழ் , மகிழ்
- ள் - மகள் , அவள் , வாள்
- தமிழ்ச் சொற்களில் வல்லின மெய்கள் இறுதி நிலையில் வருவதில்லை எனினும் தற்காலத் தமிழில் வழங்கும் பிறமொழிச் சொற்களையும், இடப்பெயர் களையும் , ஆட் பெயர்களையும் எழுதும்போது இவையும் இறுதி நிலையில் இடம்பெறுகின்றன.
- க் - ஈராக் , பேங்காக் , கேக்
- ச் - சூரிச், டோர்ச்
- ட்- லெனின்கிராட் , டேவிட்
- த்- பக்தாத் , ரோலண்ட்பார்த்
- ப் - யோசப்
- ற்- பெப்பர்மின்ற்
- பிற மொழி பெயர்களை தமிழில் எழுதும்போது ஜ், ஸ், ஷ், ஹ் ஆகிய கிரந்த எழுத்துக்களும் தற்காலத் தமிழில் சொல் இறுதியில் வருகின்றன
- ஜ்- ஜோர்ஜ், மிஃராஜ்
- ஸ்- பீரிஸ், பெர்னாண்டஸ்
- ஷ்- ரமேஷ்
- ஹ் - நிக்காஹ், நுஹ்
- பழந்தமிழில் ஞ், ந், வ் ஆகிய மெய்கள் அரிதாக சில சொற்களில் இடம் பெற்றன.
- உரிஞ் (உராய்தல்)
- வெரிந் ( முதுகு)
- தெவ் (பகை)
- நகரம் தற்காலத் தமிழில் ரஜினிகாந்த் விஜயகாந்த் போன்ற பெயர்களில் இறுதியில் இடம் பெறுகின்றது
- நகரம் பழந்தமிழில் சொல் இறுதியில் இடம்பெறவில்லை. தென்கிழக்காசிய இடப்பெயர்கள் , ஆட் பெயர்களை எழுதும்போது தற்காலத் தமிழில் இறுதி நிலையில் இடம்பெறுகின்றது எடுத்துக்காட்டு
- ஹொங்கொங்
- பீஜிங்
- மாஓசேதுங்
முதனிலை எழுத்துக்கள் பகுதிக்கு செல்ல »»»»
கருத்துகள் இல்லை