header

அண்மையவை

எழுத்தின் பரம்பல் - முதனிலை எழுத்துக்கள் / சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள்

சொல்லின் முதலில் வரும் எழுத்துக்கள்


எல்லா எழுத்துக்களும் சொல்லின் முதல், இடை, கடை, ஆகிய எல்லா இடங்களிலும் வருவதில்லை. ஒரு எழுத்து ஏனைய எல்லா எழுத்துக்களுடன் சேர்ந்து சொற்களில் இடம்பெறுவதில்லை. எந்த எந்த எழுத்துகள் சொல்லின்  முதலில் இடம்பெறும், எந்த எந்த எழுத்துகள் சொல்லின் இறுதியில் இடம்பெறும், சொல்லுக்கு இடையில் எந்த எந்த எழுத்துக்கள் எந்த எந்த எழுத்துக்களுடன் சேர்ந்து வரும் என்பவற்றை நாம் வரையறுத்துக் கூற முடியும். 


இவ்வாறு சொல்லாக்கத்தில் எழுத்துக்கள் பயின்றுவரும் முறைமையே எழுத்தின் பரம்பல் எனப்படுகின்றது. இதனை முதல்நிலை, இறுதி நிலை, இடைநிலை என மூன்றாக வகைப்படுத்தலாம்.


01. முதல்நிலை எழுத்துக்கள்

முதல்நிலை எழுத்து என்பது ஒரு எழுத்து சொல்லாக்கத்தில் சொல்லின் முதலில் இடம் பெறுவதை குறிக்கும்

  • 12 உயிர் எழுத்துக்களும் சொல்லாக்கத்தில் முதல் நிலையில் வருகின்றன.
      எடுத்துக்காட்டு:
    1. அ - அம்மா
    2. ஆ - ஆடு
    3. இ - இலை
    4. ஈ - ஈசல்
    5. உ - உரல்
    6. ஊ - ஊர்
    7. எ - எருது
    8. ஏ - ஏர்
    9. ஐ - ஐந்து
    10. ஒ - ஒன்று
    11. ஓ - ஒற்றுமை
    12. ஒள - ஔவை

  • வல்லின மெய்களில் க், ச், த், ப் ஆகிய நான்கும் 12 உயிர்களுடனும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும். எடுத்துக்காட்டு:
  1. க் - கடல், காகம், கிளி, கீரை, குளிர், கூடு, கெடு, கேடு, கை, கொடு, கோபம்,கௌரி
  2. ச் - சத்தம், சாறு, சிலை, சீற்றம், சுவை, சூடு, செவி, சேவல், சைவம், சொல், சோறு, சௌக்கியம்
  3. த் - தலை, தாய், திரை, தீமை, துயில், தூது, தெற்கு, தேசம், தையல், தொழில், தோப்பு தெளபீக் ( இஸ்லாமிய இயற்பெயர்
  4. ப் - பாடு, பார், பிணை, பீடை, புதுமை, பூமி, பெண், பேடு, பையன், பொறுமை, போட்டி,  பெளர்ணமி

  • தற்காலத்தில் தமிழ்ச் சொற்களின் தெள சொல் முதலில் வருவதில்லை எனினும் தமிழில் கலந்துள்ள அரபு முதலிய பிற மொழிச் சொற்களில் தெள எழுத்து மொழி் முதலில் வருகின்றது.
     எடுத்துக்காட்டு : தெளபீக் தெளபா


  • மெல்லின எழுத்துக்களில் ந், ம் ஆகிய இரண்டும் பன்னிரண்டு உயிர் களுடனும் சேர்ந்து சொல்லுக்கு முதலில் வரும்.
     எடுத்துக்காட்டு
    1. ந- நன்று, நான், நிலம், நீ, நுனி, நூல், நெல்,  நேற்று, நைடதம், நொண்டு, நோன்பு, நௌசாத் ( இஸ்லாமிய இயற்பெயர்)
    2. ம - மனம், மாலை, மிளகு, மீன், முயல், மூளை, மென்மை, மேன்மை, மையல், மொழி,மோதல், மௌனம்

  • க, ச, த, ப, ந, ம ஆகிய எழுத்துகளின் ஔகார வரிசை சொல்லாக்கத்தில் மிக அரிதாகவே பயன்படுகின்றது

  • வ், ய், ஞ் ஆகிய மெய்கள் சில  உயிர்களுடன் சேர்ந்து மொழிக்கு முதலில் வருகின்றன. எல்லா உயிர்களும் சேர்ந்து முதல் நிலையில் வருவதில்லை

  • வகரம் உ, ஊ, ஒ, ஓ ஆகியவை தவிர்ந்த ஏனைய உயிர்களுடன் முதல் நிலையில் வருகின்றது
     எடுத்துக்காட்டு
    1. வயல்
    2. வாய்
    3. விலை
    4. வீடு
    5. வெயில்
    6. வேலை
    7. வையம்
    8. வௌவால்

  • வோட்டு எனும் ஆங்கிலச் சொல்லும் தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளது.

  • யகரம் அ, ஆ, உ, உ, ஓ, ஓள ஆகிய உயிர்கள் உடன் இணைந்து முதல் நிலையில் வரும்
     எடுத்துக்காட்டு: 
    1. யமன் 
    2. யார் 
    3. யுகம் 
    4. யூகம் 
    5. யோகம் 
    6. யெளகம்

  • ஞகரம் ஆகாரத்துடன் மட்டுமே தற்காலத் தமிழில் முதல் நிலையில் வருகின்றது
     எடுத்துக்காட்டு :  
    1. ஞாயிறு
    2. ஞாலம்
    3. ஞாபகம்
    4. ஞானம்.

  • ஞமலி, ஞிமிறு,  ஞொள்கு போன்ற பழந்தமிழ் சொற்கள் இன்று வழக்கில் இல்லை

  • ட,ற,ர,ல ஆகிய மெய் எழுத்துக்கள் தமிழில் வந்து சேர்ந்த பிறமொழிச் சொற்களில் முதல் நிலையில் வருகின்றன
      எடுத்துக்காட்டு
    1. ட - டம்பம், டாக்டர், டிமிக்கி, டீசல், டுமீல், டூப்பு, டை,  டோபி
    2. ற- றக்கு, றாத்தல், றேடியோ, றைவர், றோட்டு( இலங்கை வழக்கு)
    3. ர- ரசம், ரசிகன், ராகம், ரீங்காரம், ருசி
    4. ல - லட்டு, லாம்பு, லிங்கம், லீலை, லுங்கி, லூர்த்து, லைலா, லொத்தர், லோபி, லௌகீகம்

  • ஜ, ஷ, ஸ, ஹ ஆகிய கிரந்த எழுத்துக்களும் தமிழில் வந்து சேர்ந்த பிற மொழிச் சொற்களில் முதல் நிலையில் வருகின்றன.
     எடுத்துக்காட்டு :
    1. ஜ -  ஜமீன்தார், ஜனாதிபதி, ஜரிகை,  ஜல்லிக்கட்டு, ஜனநாயகம்
    2. ஷ - ஷரத்து, ஷரீயத்து
    3. ஸ - ஸலாம், ஸாஸ்திரம்
    4. ஹ - ஹர்த்தால், ஹலால், ஹஜ், ஹாஜி, ஹிம்சை, ஹோமியோபதி

  • ங் , ண், ன், ள், ழ் ஆகிய மெய் எழுத்துகள் சொல்லின் முதல் நிலையில் வருவதில்லை எனினும் தத்தம் பெயரைச் சூட்டும் போது மாத்திரம் சொல்லின் முதல் நிலையில் வருகின்றன.
      எடுத்துக்காட்டு : 
    1. ஙகரம்
    2. ணகரம்
    3. னகரம்
    4. ளகரம்
    5. ழகரம்

தற்காலத்தில் சில எழுத்தாளர்கள் சில பிரெஞ்சு நாட்டு அறிஞர்களின் பெயர்களை தமிழ்ப்படுத்தி எழுதும்போது ழகரத்தை முதல் நிலையில் பயன்படுத்துகின்றனர்

  • எடுத்துக்காட்டு : ழான், ழீன்

  • தமிழ்ச் சொற்களில் உயிர்மெய் எழுத்துக்களை சொல் முதலில் வருகின்றன தனி மெய்கள் அவ்வாறு வருவதில்லை எனினும் பிற மொழிப்பெயர்கள் சிலவற்றை எழுதுகையில் தனி மெய் எழுத்துக்கள் சொல் முதலில் வரக் காணலாம்.
      எடுத்துக்காட்டு :  

கருத்துகள் இல்லை