தமிழ் எழுத்துக்களின் வகை தொகை
தமிழ் எழுத்துக்களும் அதன் வகைகளும்
எழுத்து
மொழியில் வழங்கும் ஒலிகளை குறிக்கவும் , அவ் ஒலிகளுக்குரிய வரிவடிவத்தை குறிக்கவும் எழுத்து பயன்படுகிறது.
தமிழில் உள்ள எழுத்துக்களை 4 பிரிவுக்குள் அடக்கலாம்.
- உயிரெழுத்துக்கள்
- மெய்யெழுத்துக்கள்
- உயிர்மெய் எழுத்துக்கள்
- ஆய்த எழுத்து
முதல் எழுத்து
தமிழில் வழங்கும் அடிப்படையான எழுத்துக்கள் ஆகும். முதல் எழுத்துக்கள் 30 ஆகும். உயிர் எழுத்துக்கள்[12] , மெய் எழுத்துக்கள்[18] என இரு பிரிவுகள் இதனுள் அடக்கப்படும்.
உயிர் எழுத்துக்கள் 12 ஆகும். அவையாவன
அ,அ,இ,இ,உ,உ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ
இவை உச்சரிக்க எடுக்கும் கால அளவை [மாத்திரை] பொறுத்து 2வகையினுள் அடக்கப்படும்.
- குறில் எழுத்துக்கள் / குற்றெழுத்துக்கள்
- நெடில் எழுத்துக்கள் / நெட்டெழுத்துக்கள்
குறுகிய ஓசையுடைய எழுத்துக்கள் குறில் எழுத்துக்கள் எனப்படும். அவையாவன
அ,இ,உ,எ,ஒ [05]
- இவற்றின் மாத்திரை அளவு 1 ஆகும்
நீண்ட ஓசையுடைய எழுத்துக்கள் நெடில் எழுத்துக்கள் ஆகும்.அவையாவன
ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஒ,ஔ [07]
- இவற்றின் மாத்திரை அளவு 2 ஆகும்.
கூட்டுயிர் / சந்தியக்கரம்
உயிர் எழுத்துக்களில் ஐ,ஔ ஆகிய இவ்விரு எழுத்துக்களும் பழங்காலத்தில் முறையே அஇ, அஊ என்று எழுதப்பட்டன. இதனால் இவை கூட்டுயிர் எனப்படும். இன்று அய்,அவ் என்றும் எழுதப்படும்மெய் எழுத்துக்கள் 18ஆகும். அவையாவன
- க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
மெய் எழுத்துக்கள் மேலே புள்ளி வைத்து எழுதப்படுகின்றன. இவற்றை உயிர் எழுத்துக்களின் துணையின்றி தனியே ஒலிக்க முடியாது. இவற்றை உச்சரிப்பின் அடிப்படையில் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
- வல்லினம்
- மெல்லினம்
- இடையினம்
வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் ஆகும்.இவ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப் பையிலிருந்து வரும் காற்றானது பேச்சு உறுப்புக்களால் தடைசெய்யப்பட்டு திடீரென வெளிவரும். இதனால் இவை வெடிப்பொலிகள் அல்லது தடை ஒலிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
வல்லின எழுத்துக்கள்- க், ச், ட், த், ப், ற்
மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் ஆகும். இவ் எழுத்துக்களை உச்சரிக்கும் போது சுவாசப்பையிலிருந்து வரும் காற்றானது பேச்சுறுப்புக்களால் தடை செய்யப்பட்டு மூக்கு வழியாக வெளியேறும். மூக்கை மூடிக்கொண்டு இவ் எழுத்துக்களை சரியாக உச்சரிக்க முடியாது. ஆகையால் இவை மூக்கொலிகள் என்றும் அழைக்கப்படுகிறது.
மெல்லின எழுத்துக்களாவன
- ங், ஞ், ண், ந், ம், ன்
வல்லின மெல்லின எழுத்துக்களுக்கு இடைப்பட்ட உச்சரிப்பில் ஒலிக்கும் எழுத்துக்கள் ஆகும். அவையாவன
- ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
- 12×18=216
4. ஆய்தம்
- ஃ
எழுத்துக்களின் வகை தொகை பற்றிய சுருக்கப்பார்வை
- உயிர் எழுத்துக்கள் - 12
- மெய் எழுத்துக்கள் - 18
- உயிர் மெய் எழுத்துக்கள் - 216
- ஆய்தம் - 01
- மொத்தம் = 247
இவை தவிர்ந்து வட மொழியில் இருந்து தமிழில் கலந்த எழுத்துக்களான கிரந்த எழுத்துக்களும் தமிழில் வழங்கப்படுகின்றன.
- ஜ் , ஸ் , ஹ் ,ஷ்,
மாத்திரை = கண் இமைப்பொழுது அல்லது கை நொடிப்பொழுது நேரத்தை குறிக்கும்.
ஒரு மாத்திரை ஒரு செக்கனை குறிக்கும். ஆயினும் இது ஒலி ஆய்வுக்கு பயன்படும் நவீன கருவிகளை கொண்டு உறுதி செய்யப்பட்ட கூற்று அல்ல.
Updated Version: தமிழ் எழுத்துக்கள் 216
பதிலளிநீக்கு