header

அண்மையவை

செவ்வி காணல்( பேட்டி ) - sevvi kaanal ( paeddi ) _ தமிழ் களஞ்சியம்

செவ்விகாணல்


ஒரு துறை சார்ந்த விடயத்தில் சிறப்புற்று இருக்கும் ஒருவரை
அவ்விடயம் பற்றி இரசிகர்களுக்கு விளக்கும் பொருட்டு நேரடியாக செவ்வி காண்பவர் செவ்விக்கு முகம்கொடுப்மவர் மூலம் வெளிப்படுத்துதல் செவ்வி காணுதல் எனப்படும்.


செவ்வி காணல் இடம்பெறும் ஊடகங்கள்

  • அச்சு ஊடகங்கள்
     (உ+ம்)பத்திரிகை,சஞ்சிகை

  • இலத்திரணியல் ஊடகங்கள்
    (உ+ம்)வானொலி, தொலைக்காட்சி

பெரும்பாலும் செவ்வி காணல் காணப்படும் துறைகள்

  • இலக்கியம்
  • மருத்துவம்
  • விஞ்ஞானம்
  • அரசியல் 
  • வணிகம்
  • தொழிநுட்பம்

அடிப்படை நோக்கம்

ஒரு குறிப்பிட்ட விடயம் பற்றிய தகவல்களையும், சரத்துக்களையும் பெற்றுக்கொள்வது  செவ்வி காணுதலின் அடிப்படை நோக்கமாகும். 


செவ்வி காணுதலில் முக்கியம் பெறுபவர்கள்
  • செவ்வி காண்பவர்
  • செவ்விக்கு முகங்கொடுப்பவர்

செவ்வி காணலில் இருக்கவேண்டிய பண்புகள்

  • எத்துறையை சார்ந்தவரை செவ்வி காண்கிறோமோ அத்துறை சார்ந்த அறிவு இருக்க வேண்டும்
  • சிறந்த செவ்விகளை கேட்கும் திறன்
  • செவ்விக்கு முகம் கொடுப்பவர் பற்றிய தகவல்களை அறிந்திருத்தல்
  • சிறந்த மொழியறிவு
  • சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப ஒப்பீட்டு வினாக்களை தொடுக்கும் திறன்
  • முன்னைய தகவல்களை மீட்டிக் காட்டும் திறன்
  • புதிய தகவல் தொழில்நுட்ப சாதனங்களை கையாளும் திறன்
  • செவ்வி கொடுப்பவரின் ஆற்றல்கள், திறன்கள் என்பவற்றை வெளிக்கொண்டுவரும் பாங்கு
  • நியம மொழியிலே உரையாடும் ஆற்றல்

செவ்விகாணலின் ஊடாக பல்வேறு தகவல்களையும், விமர்சன ரீதியான அனுபவங்களையும் மக்கள் பெறுவார்கள். இது மக்களுக்கு பயன்தரும் நிகழ்வாக அமைகின்றது.


நன்றி.

தமிழ் களஞ்சியம் 360

கருத்துகள் இல்லை