header

அண்மையவை

அறிக்கை எழுதுதல்

அறிக்கை

அறிக்கை எழுதுதல்

ஒரு விடயம் / நிகழ்வு பற்றிய பல அம்சங்களையும் ஒழுங்காக நிரற்படுத்தி மேலதிகாரிக்கோ , சபையினருக்கோ சமர்ப்பிக்கும் பொருட்டு தெளிவாகவும் சுருக்கமாகவும் எழுதப்படுவது அறிக்கை எனப்படும்.

அறிக்கை எழுதப்படும் சந்தர்ப்பங்கள்

  • வாசித்த புத்தகம் பற்றிய அறிக்கை
  • இலக்கிய மன்றங்களின் கூட்டறிக்கை, ஆண்டறிக்கை
  • பாடசாலை, சனசமூக நிலைய ஆண்டறிக்கை
  • செயற்திட்டம், நிகழ்வு,நிகழ்ச்சி பற்றி சமர்ப்பிக்கப்படும் விசேட அறிக்கை
  • பிரச்சினைகள் ,சூழ்நிலைகள்,வாய்ப்பு வசதிகள், எதிர்பாராத சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கை
  • அரச திணைக்களங்கள் / கூட்டுத்தாபங்கள் போன்றவற்றின் கருமக்கூறுகள் பற்றி திணைக்கள தலைவருக்கு சமர்ப்பிக்கப்படும் முன்னேற்ற அறிக்கை
  • வெளிக்கள பயணங்கள் பற்றிய அறிக்கை
  • பரிசோதனைகள் பற்றிய அறிக்கை
  • வானொலி நிகழ்ச்சிகள் பற்றிய அறிக்கை
  • சொற்பொழிவுகள் பற்றிய அறிக்கை

விதிமுறையாக எழுதப்படும் அறிக்கைகளில் காணப்படும் பொதுவான அம்சங்கள்

  • அறிக்கை இன்னாருக்கு சமர்ப்பிக்கப்படுகிறது என்பது
  • அறிக்கை எப்பொருள் பற்றியது என்பதைக் குறிக்கும் தலையங்கம்
  • ஒரு விடயம் பற்றிய பல அம்சங்களையும் ஒழுங்காக நிரைப்படுத்தி எழுதுதல்
  • அறிக்கை எழுதும் நோக்கத்திற்கேற்ப அவற்றை பந்தி பிரித்து தலைப்பிட்டு எழுதுதல்
  • எழுதுபவரின் ஒப்பம்,பதவி,எழுதப்பட்ட இடம், திகதி ஆகியனவும் எழுதப்பட வேண்டும்

அறிக்கை எழுதப்படும் படிமுறை

1. தகவல் திரட்டுதல்
 - விடயத்தை கலந்தாலோசித்தல்,செவிமடுத்தல்,செவ்வி காணல்,குறிப்பெடுத்தல்

2. தகவல்களை நிரற்படுத்தல்
- முக்கிய அம்சங்களை தேர்ந்தெடுத்தல்

3. அவற்றை ஒழுங்குபடுத்தி பரிசீலணை செய்தல்

4. அறிக்கை எழுதும் நோக்கத்திற்கேற்ப அவற்றை பந்தி பிரித்து வேண்டியவிடத்து உபதலைப்பிடல்

5. சுருக்கமாகத் தெளிவாக தர்க்கரீதியாக எழுதுதல்

6. இறுதியில் வேண்டிய தீர்வை சுட்டிக்காட்டல்
- அறிக்கை யாருக்கும்? யாரால் ? எப்போது? எதைப்பற்றி? எழுதப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட வேண்டும்.

அறிக்கை எழுதுவதனால் கிடைக்கும் நன்மைகள்

  • கடந்த நிகழ்ச்சிகளை தொடர்புபடுத்தலுக்காக அறியத் தருவதற்கு பயன்படும்.
  • குறிப்பிட்ட ஆண்டொன்றில் குறித்த நிறுவனமொன்று நிலைநாட்டிய சாதனையை தெரியப்படுத்துவதற்கு பயன்படும்
  • செயற் திட்டம் ஒன்று எவ்வாறு எந்தளவிற்கு நிறைவேற்றப்பட்டது என்பதை அறிவதற்கு பயன்படும்
  • பிரச்சினைகள்,சம்பவங்கள் பற்றிய காரணங்களை அறிவதற்கு பயன்படும்
  • தரவுகளை இனங்காண்பதற்கு பயன்படும்

உதாரணம்
பாடசாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழா பற்றிய அறிக்கை சட்டகம்

சட்டகம்
¤ பிரதம அதிதிகள் அழைத்துவரப்படல்
¤ நிகழ்வுகள் ஆரம்பம்
¤ பாடசாலை அதிபரின் உரை
¤ நடைபெற்ற நிகழ்வுகள்
¤ பிரதம அதிதியின் உரை
¤ பரிசளிப்பு வைபவம்
¤ நன்றியுரை
¤ நிகழ்வுகள் நிறைவு

3 கருத்துகள்: