பந்தி அமைப்பு
பந்தி அமைப்பு
யாதேனும் ஒரு விடயத்தை விளக்கியும் விரித்தும் ஒழுங்கு முறையில் எழுதுவதற்குரிய அமைப்பே பந்தி ஆகும். கட்டுரை எழுதுவதற்கு முதற்படி நல்ல பந்திகளை எழுதிப் பழகுவதாகும். ஆகவே பந்தி என்பது கட்டுரையின் தெளிவான ஒரு பகுதி எனலாம். அத்துடன் பந்தி எடுத்துக்கொண்ட ஒரு விடயத்தை மட்டுமே விளக்குவதாய் அமையும்.
பந்தியின் பண்புகள்
- தலைமைக் கருத்தை கொண்டிருக்கும்
- தலைமைக் கருத்தை ஐயந்திரிபற உறுதியாக முன்வைக்கும்
- பொருத்தமான துணைக்கருத்துக்களை , உதாரணங்களை, நியாயத்தர்க்கத்தை , விளக்கத்தை கொண்டிருக்கும்.
- வாசகரின் மனதில் எழக்கூடிய வினாக்களுக்கு விடை தரக்கூடிய வகையில் பந்தி அமைந்திருக்கும்.
- யாதேனும் ஒரு விடயத்தை விளக்குவதாய் அமையும்.
பந்தி எழுதும் படிமுறைகள்
படி - 01பந்தியின் தலைமைக்கருத்தை வாசகர் மனதில் பதியச் செய்யும் வண்ணம் முதல் வாக்கியத்தை எழுதல்
படி- 02
தலைமைக்கருத்தை ஐயந்திரிபற உறுதியாக தெளிவுபடுத்தல்
படி - 03
வாசிப்பவரின் மனதில் எழக்கூடிய வினாக்களை ஊகித்து, அவற்றிற்கு விடை தரக்கூடிய வகையில் எழுதுதல்
படி- 04
பந்தியை வாசித்து திருத்தி மீள எழுதல்
பந்தியை விரித்து வளர்ப்பதற்கான வழிகள்
- விபரங்கள் தந்து விரித்தல்
- ஒற்றுமை, வேற்றுமை காட்டி விரித்தல்
- உதாரணங்காட்டி விரித்தல்
- நிகழ்ச்சிகளை விவரித்து விரித்தல்
- நியாயங் கூறி விரித்தல்
- விளக்கங் கூறி விரித்தல்
- காரண காரியங்களை கூறி விரித்தல்
பந்தி ஒன்றில் தவிர்க்கப்பட வேண்டியவை
- கூறியது கூறல்
- தேவைக்கு அதிகமாக எழுதல்
- முன்னுக்குப் பின் முரணாக எழுதல்
- பிரதான கருத்திற்கு அவசியமற்ற/ பொருத்தமற்ற விடயங்களை எழுதுதல்
- தேவையான அளவிற்கு விளக்கம் இன்றி எழுதுதல்
- தெளிவற்ற விதத்தில் எழுதுதல்
தமிழ் களஞ்சியம்
கருத்துகள் இல்லை