சுவரொட்டி எழுதுதல்
சுவரொட்டி
சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் வகையில் செய்தி ஒன்றை தயாரித்து சுவர்களில் ஒட்டப்படுவதால் சுவரொட்டி என்று அழைக்கப்படும்.
சுவரொட்டியின் தன்மை
பொது மக்களது கவனத்தை ஈர்த்து செய்தியொன்றை தெரிவிப்பனவாகவும் ,சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதாகவும் அமைய வேண்டும்.
சுவரொட்டி ஒன்றில் அமைய வேண்டிய அம்சங்கள்
- கவர்ச்சியான அல்லது ஆக்கபூர்வமான மொழிநடையை கையாள்வார்.உடனடியாகத் தேவையான அல்லது முக்கியமான தகவல்களை முதன்மைப்படுத்தல்
- மகுட வாசகங்களை கவர்ச்சியாக கையாளல்
- பெரிய எழுத்துக்கள்,வண்ண எழுத்துக்கள் ஆகியவற்றை பயன்படுத்தல்.
- நிழற்படங்கள்,ஓவியங்கள் ஆகியவற்றை பயன்படுத்தல்
- கருத்துப்படங்கள், கேலிச்சித்திரங்கள் முதலியவற்றை பொருத்தமுற இணைத்தல்
- குறியீட்டுப் பாங்கில் விடயங்களை புலப்படுத்தல்
சுவரொட்டியின் பண்புகள்
- பெரிய எழுத்துக்களில் அமைதல்
- கருத்தாழம் மிக்க சிறிய வசனத்திலான சொற்றொடர்கள்,கூற்றுக்களை கொண்டிருத்தல்
- மக்களை கவரும் தன்மை
- கவனத்தை ஈர்க்கும் வாக்கிய அமைவு, விழிப்பு என்பவற்றை கொண்டிருத்தல்
- வெவ்வேறு நிறங்களையும், எழுத்துக்களையும் கையாண்டு வெளிப்படுதல்
- வித்தியாசமான பாணியிலான கருத்துப்படங்கள் சித்தரிக்கப்படுகின்றமை
சுவரொட்டிகள் வெளியிடப்படும் துறைகள்
- பொதுத்துறை சார்ந்தவை
- அரசியல் சார்ந்தவை
- பொருளாதாரம் சார்ந்தவை
- விளம்பரங்கள் சார்ந்தவை
கருத்துகள் இல்லை