அழைப்பிதழ் எழுதுதல்
அழைப்பிதழ்
இல்லங்களிலும் நிறுவனங்களிலும் நடைபெறும் மங்களகரமான நிகழ்வுகளுக்கு நண்பர்களை,உறவினர்களை ஆர்வலர்களை, நலன்விரும்பிகளை அன்புடன் அழைக்கும் வகையில் எழுதப்படுவன அழைப்பிதழ் எனப்படும்.
அழைப்பிதழின் வகைகள்
குடும்பம் சார் அழைப்பிதழ்
- பிறந்த நாள் அழைப்பிதழ்
- திருமண அழைப்பிதழ்
- புதுமனை புகுவிழா அழைப்பிதழ்
நிறுவனம் சார் அழைப்பிதழ்
- கலை இலக்கிய மன்ற அழைப்பிதழ்
- நூல் ஆய்வரங்கு அழைப்பிதழ்
- நாடக விழா அழைப்பிதழ்
- இசை விழா அழைப்பிதழ்
- திறப்பு விழா அழைப்பிதழ்
- விளையாட்டு போட்டி அழைப்பிதழ்
- சமூக மன்றங்களின் அழைப்பிதழ்
அழைப்பிதழின் அம்சங்கள்
- கவரக்கூடியதாக வடிவமைத்தல்
- தலைப்பு (நிகழ்வை வெளிப்படுத்த வேண்டும்)
- நியதி, நேரம், இடம்
- சுருங்கச் சொல்லி விரிந்த பொருள் தருவதாய் அமைதல் வேண்டும்
- பொருத்தமான விளிப்பு
- அழைப்பை விடுப்பவர்/ அழைப்பை விடுக்கும் நிறுவனம்
விழிப்புக்குரிய குறிப்புக்கள்
அழைப்பை விடுக்கும் போது அழைக்கப்படுபவரின் பதவி, அந்தஸ்து ஆகியவற்றை கருத்திற் கொண்டு உரிய மரியாதை பதங்களை பயன்படுத்தி அழைப்பை விடுத்தல் மிகவும் முக்கியமானது.
- ஜனாதிபதி - அதி உத்தம , அதி மேதகு
- அமைச்சர்கள் - மாண்புமிகு
- பௌத்த பிக்குகள் - அதி சங்கைக்குரிய, சங்கைக்குரிய
- கிறிஸ்தவ மதத் தலைவர்கள் - அருட்சகோதரர்கள், அருட்சகோதரி, அருட்தந்தை, வணக்கத்துரிய, ஆயர், பேராயர், அதி வணக்கத்துக்குரிய
- இஸ்லாமிய மதத் தலைவர்கள் - மௌலவி, உலமா
- இந்துசமயத் தலைவர்கள் - சுவாமிகள்
- ஏனையோர் - அன்படையீர்
கருத்துகள் இல்லை