header

அண்மையவை

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்


ஒலி வேறுபாட்டுச் சொற்கள்


தமிழ் எழுத்துக்களில் சில ஒலிப்பில் ஒத்த தன்மை உடையனவாய் காணப்படுகின்றன. இவ்வாறான எழுத்துக்களை 3 தொகுதிகளாக பிரிக்கலாம்.

  • லகர,ழகர,ளகர ஒலி வேறுபாடு ( ல,ழ,ள)
  • ணகர,னகர,நகர ஒலி வேறுபாடு( ண,ன,ந)
  • ரகர,றகர ஒலி வேறுபாடு(ர,ற)

 லகர,ழகர,ளகர ஒலி வேறுபாடு ( ல,ழ,ள)


01. அலை - கடலின் அலை
      அளை - கறையான் புற்று, அளைதல்
      அழை - அழைத்தல்

02. ஆல் - ஆலமரம்
       ஆள் - ஒரு மனிதன்
       ஆழ் - ஆழம்

03. இலை - மர இலை
       இளை - இளைத்தல்
       இழை - இழையோடுதல்

04. வலி - நோவு
       வளி - காற்று
       வழி - பாதை

05. அழகு - வடிவு, வனப்பு
      அளகு - பெண் பறவை
      அலகு - பறவையின் வாய்,  பறவையின் மூக்கு, பிரிவு

06. உழவு - உழுதல், பயிர்த்தொழில்
      உளவு - வேவு
      உலவு - உலவுதல் , உலா வருதல்

07. ஆழி - கடல்,சக்கரம்
      ஆளி - யானை, சிங்கம்
      ஆலி - அமுதம், மழைத்துளி(ஆலங்கட்டி மழை)

08. குழவி - பிள்ளை
      குளவி - ஒரு வகை வண்டு
      குலவி - உறவாடி

09. கழி - கழித்தல், நீக்குதல்
      களி - மகிழ்ச்சி
      கலி - துன்பம்

10. தழை - இலை
      தளை - பிணைப்பு
      தலை - சிரம் , உடலின் ஒரு உறுப்பு

11  உழை - இடம், மான், உழைத்தால்
     உளை - சேறு , வருத்து
     உலை - கம்மாலன் உலை

12. சூழ் - சூழ்ந்து கொள் , சூழ்ச்சி, சுற்று
      சூள் - ஆணை, சபதம், தீவர்த்தி
      சூல் - கரு, பிடுங்கு

 ணகர,னகர,நகர ஒலி வேறுபாடு( ண,ன,ந)

01. அன்னம் - சோறு, ஒரு வகை பறவை
      அண்ணம் - மேல்வாய்

02. ஆன் - பசு
      ஆண் - ஆண்மகன்

03. ஆனி - மாதத்தின் பெயர்
      ஆணி - இரும்பாணி, எழுத்தாணி

04. என் - எனது
      எண் - இலக்கம்

05. கனி - பழம்
      கணி - கணக்கிடு

06. கான் - காடு, வாசனை, பூஸ
      காண் - பார்த்தல்

07. நான் - தன்மை ஒருமை
      நாண் - கயிறு

08. பானம் - பருகும் நீர்
       பாணம் - அம்பு

09. வன்னம் - நிறம் , எழுத்து , தங்கம்
      வண்ணம் - நிறம், அழகு , விதம்

10. வன்மை - திறமை
      வண்மை - கொடை

11. அனைத்து - எல்லாம்
     அணைத்து - தழுவி

12. பனி - குளிர்ந்து விழும் சிறிய நீர்த்துளி
      பணி - தொழில்

13. எந்நாள் - எந்த நாள்
      எண்ணாள் - எண்ணமாட்டாள்

14. மனம் - உள்ளம்
      மணம் - வாசனை

15. தன்மை - குணம்
      தண்மை - குளிர்ச்சி, சாந்தம்

16. தினை - தானியம்
      திணை - ஒழுக்கம்

17. வானி - காற்றாடி , ஒரு வகை பூ
      வாணி - சொல், கல்வி,சரஸ்வதி

18. மாணவன் - மாணாக்கன்
      மானவன் - அரசன்,வீரன், மனிதன்

19. பனை - தாலம்
      பணை - மூங்கில், பெருமை

20. பன் - பருத்தி
      பண் - இசை

21. அனல் - வெப்பம்
      அணல் - தாடி,கழுத்து

22. தனி - ஒற்றை
      தணி - குறை


ரகர,றகர ஒலி வேறுபாடு(ர,ற)


01. அரி - அறு, விஷ்ணு, அரித்தல் , சிங்கம், வண்டு
     அறி - தெரிந்து கொள்ளல்

02. அரம் - ஓர் கருவி
      அறம் - நீதி

03. மரம் - விருட்சம்
      மறம் - வீரம் , தீய நெறி

04. இரை - ஒலியெழுப்பு, பறவை, மிருகங்களின் உணவு
       இறை - வெளியேற்று, கடவுள், அரசன்

05. ஏரி - குளம்
      ஏறி - மேலே தொற்றுதல்

06. கரை - ஓரம்
      கறை - குற்றம்

07. மரித்தல் - இறத்தல்
      மறித்தல் - தடுத்தல்

08. விரல் - கைவிரல்
      விறல் - வலிமை

09. வரை - மலை, கீறு
      வறை - வறுவல்

10. சிரை - மொட்டையடித்தல்
      சிறை - மறியல்

11. அரை - அரைப்பங்கு, அரைத்தல்
     அறை - வீட்டின் ஒரு பகுதி, அறைதல் (அடித்தல் )

12. கிரி - மலை
      கிறி - பொய்

13. வருத்தல் - துன்புறுத்தல்
      வறுத்தல் -

14. பரவை - கடல்
      பறவை - பட்சி

15. பொரி - பொரித்தல், நெற்பொரி
      பொறி - இயந்திரம்

15. முருகு - அழகு, தேன், தெய்வம்
      முறுகு - திறமை

16. திரை - அலை, திரைச்சீலை
      திறை - கப்பம் , அளவினை

17. நரை - மூப்பு, வெளுத்த மயிர்
     நறை - தேன், கள், குற்றம், வாசனை

18. நிரை - ஒழுங்கு, பசுக்கூட்டம்
      நிறை - நிறைவு, நிறுத்தலளவு

19. துரு - களிம்பு, குற்றம், செம்மறியாடு
      துறு - நெருக்கம்

20. செரு - ஊடல், போர்
       செறு - வயல் ,கோபம்

21. தெரியல் - பூமாலை
      தெறியல் - சிதறல்

22. தேரல் - தெரிந்தெடுத்தல்
      தேறல் - தெளிவு, கள்


தமிழ் களஞ்சியம்360

4 கருத்துகள்: