துண்டுபிரசுரம் எழுதுதல்
துண்டுப்பிரசுரம்
தகவல்கள் வெளியிடுவதையோ, வேண்டுகோள் விடுத்தலையோ, கொள்கைகளைப் பரப்புவதையோ நோக்கமாகக் கொண்டு சுருங்கிய வடிவில் எழுதியோ,அச்சிட்டோ நேரடியாக மக்களிடம் வினியோகிக்கப்படும் பிரசுரம் துண்டுப்பிரசுரம் எனப்படும்.
துண்டுபிரசுரங்களின் பிரதான இலக்கு பொதுமக்களுக்கு தகவல்களை பரப்புதல் ஆகும்.
துண்டுபிரசுரம் எழுதப்படுவதற்கான முக்கிய நோக்கங்கள்
01. அறிவுறுத்தல்களை விடுப்பதற்காக எழுதப்படுகின்றன_ சுகாதாரம், நோய்த்தடுப்பு, குடும்ப நலன், விவசாயம் முதலானவற்றில் மக்கள் அனுசரிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி எழுதப்படும் துண்டுபிரசுரங்கள் அறிவுறுத்தல் சார்ந்தவையாகும்
02.கொள்கைகளைப் பரப்புவதற்காக எழுதப்படுகின்றன
_ தேர்தல்களில் வாக்கு கோருதல்,தொழிற்சங்க ஆதரவு தேடல் என்பன பற்றி எழுதப்பட்டவை கொள்கை சார்ந்தவையாகும்
_ தேர்தல்களில் வாக்கு கோருதல்,தொழிற்சங்க ஆதரவு தேடல் என்பன பற்றி எழுதப்பட்டவை கொள்கை சார்ந்தவையாகும்
03. வேண்டுகோள்களை விடுப்பதற்காக எழுதப்படுகின்றன
_ சிகிச்சை போன்றவற்றிற்கு நிதி கோருதல், மக்களை ஒன்று கூடுமாறு வேண்டிக்கொள்ளுதல் முதலானவற்றை பற்றிய எழுதப்படுபவை வேண்டுகோள் சார்ந்தவையாகும்
_ சிகிச்சை போன்றவற்றிற்கு நிதி கோருதல், மக்களை ஒன்று கூடுமாறு வேண்டிக்கொள்ளுதல் முதலானவற்றை பற்றிய எழுதப்படுபவை வேண்டுகோள் சார்ந்தவையாகும்
துண்டுபிரசுரத்தில் அமைய வேண்டிய அம்சங்கள்
- நோக்கத்தை புலப்படுத்தும் விதத்திலான கவர்ச்சிகரமான தலைப்பு
- பொதுவான விளிப்பு
- விடய விபரிப்பு ( கவர்ச்சிகரமான மொழிநடை)
- வெளியிடுபவரின் பெயர்/ பதவி/ வெளியிடும் நிறுவனம்
- வெளியிடப்பட்ட திகதி
துண்டுபிரசுரத்தை எழுதும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள்
- குறித்த விடயம் சுருக்கமாகவும், தெளிவாகவும் எழுதுதல்
- வாசிப்போர் மனதை கவரும் வகையில் எழுதுதல்
- கவர்ச்சிகரமான சொற்கள்,சொற்றொடர்களில் எழுதுதல்
துண்டுபிரசுரத்தை எழுதுவதற்கான அணுகுமுறை
- சுருக்கமாகவும் அதேநேரத்தில் விளக்கமாகவும் எழுதுதல் வேண்டும்
- மக்கள் விரும்பி வாசிக்கத்தக்க தன்மையில் அமைதல் வேண்டும்
- எடுத்த நோக்கத்தை நியாயமானதென நிறுவி எழுதுதல் வேண்டும்
- மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும்
துண்டுபிரசுரத்தால் கிடைக்கும் நன்மைகள்
- இலவசமாக வினியோகிக்கப்படுவதால் தகவல்கள் விரைவாக மக்களிடம் சென்றடையும்
- குறுகிய காலத்தில் குறித்த தகவல்களை பரப்புவதால் எதிர்பார்க்கப்படும் பெறுபேற்றை விரைவில் பெற்றுக்கொள்ளலாம்
- பொதுத்தகவலுக்காக விநியோகிக்கப்படுபவை மக்கள் மனதில் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
Thundu pirasuram
பதிலளிநீக்கு