விளம்பரம் எழுதுதல்
விளம்பரம்
ஒருவரை / ஒரு பொருளை / நிகழ்வொன்றை மக்கள் மத்தியில் பத்திரிகைகளிலோ, இலத்திரனியல் ஊடகங்களிலோ வெளிப்படுத்தும் முறை விளம்பரம் எனப்படும்.
விளம்பரத்தின் வகைகள்
- உற்பத்தி பொருள் விளம்பரம்
- நிறுவனங்களின் விளம்பரம்
- மக்களுக்கு இன்றியமையாத சில செய்திகளை அறிவிப்பதற்காகச் செய்யப்படும் விளம்பரம்
- பொதுத்தகவல்களுக்காக செய்யப்படும் விளம்பரம்
- சொத்துத் தொடர்பாக உரிமையாளர்கள் சட்டப்படியாக வழக்கறிஞர் வாயிலாக வெளியிடும் விளம்பரம்
விளம்பரம் செய்வதற்கான நோக்கங்கள்
- விற்பனையை அதிகரித்தல்
- பாவனையை கூட்டுதல்
- பிரசித்தப்படுத்தல்
- நாட்டத்தை/ விருப்பத்தை ஏற்படுத்தல்
- தகவல்களை அளித்தல்/ வழங்குதல்
- பிரசாரப்படுத்தல்
- பொருட்களை அறிமுகம் செய்தல்
விளம்பரத்தின் பண்புகள்
- சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல்
- கவர்ச்சிகரமான வசனங்கள், சொற்றொடர்கள் கொண்டிருக்கும்
- கண்ணை கவரும் படங்கள் கொண்டிருக்கும்
- சுவையான தகவல்கள் அடங்கியிருக்கும்
- அழுத்தி சொல்லுதல்
- நுகர்வோர் நம்பிக்கையை வளர்க்கும் தன்மை
- அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருத்தல்
விளம்பரத்தில் இடம்பெற வேண்டிய அம்சங்கள்
- நுகர்வோரை ஈர்க்கும் கவர்ச்சிகரமான தலைப்பு
- பொருத்தமான விளிப்பு
- கவர்ச்சிகரமான மொழிநடை
- கவர்ச்சிகரமான படங்கள்,குறியீடுகள்,வர்ணங்கள்
- தனிச்சிறப்புக்களை குறிப்பிடல்
- நிகழ்வாயின் காலம்,இடம்,நேரம்,கட்டணம்
- வெளியிடுபவர்களின் பெயர்,நிறுவனம்,பதவி
Pdf முறை இருந்தால் இலகுவாக இருக்கும்
பதிலளிநீக்குOk
நீக்குIppoluthu
பதிலளிநீக்குIppathan
பதிலளிநீக்கு