header

அண்மையவை

கட்டுரை எழுதுதல் - தமிழ் களஞ்சியம் - கட்டுரை எழுதும் போது கவனிக்க வேண்டியவை / நியதிகள்


கட்டுரை எழுதுதல்

கட்டுரை எழுதுதல்



ஒரு விடயம் தொடர்பான கருத்துக்களை விரித்து,ஒழுங்கு முறையிலும் தெளிவாகவும் விளக்கமாகவும் உறுதியாகவும் கட்டுக்கோப்பாகவும் எழுதப்படுவதே கட்டுரை ஆகும்.

கட்டுரையின் வகைகள்

கட்டுரை பல்வேறு நோக்கங்களுக்காக பல வகைகளில் எழுதப்படுகின்றன.

01. விளக்க கட்டுரை

ஒரு பொருள் தொடர்பான விடயங்களை காரண காரிய தொடர்புகாட்டி, உதாரணங்களை குறிப்பிட்டு விளக்கி எழுதுவதாகும்.
(உ+ம்) சூழல் மாசடைதல்
             விஞ்ஞானத்தின் விந்தை

02. வர்ணனை கட்டுரை

இடங்கள்,காட்சிகள் முதலியவற்றை வர்ணித்து அலங்காரமாக எழுதப்படுவது ஆகும்.படிப்போரின் உள்ளத்தில் உண்மை காட்சிகளை புலப்படுத்துமாறு எழுதப்படல் வேண்டும்.
(உ+ம்) காலை நேரக் கடற்கரை காட்சி

03. கற்பனை கட்டுரை

புதிய விடயங்களை கற்பனையில் உருவாக்கி எழுதுதல் ஆகும். இக்கட்டுரையை முற்றுமுழுதாக கற்பனையாகவும் எழுதலாம். இருக்கின்ற விடயங்களை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் அதன் நிலையை கற்பனையில் ஊகித்தும் எழுதலாம்.
(உ+ம்) உடைந்த கணிணியின் சுயசரிதை

கட்டுரையின் பிரதான உறுப்புக்கள்
1.முகவுரை
2.உடல்
3.முடிவுரை

முகவுரை

எழுதப்போகும் விடயத்தை பற்றிய ஓர் அறிமுகம்

உடல்

இது கட்டுரையின் பெரும்பகுதியாகவும் உயிர்நாடியாகவும் அமையும். எடுத்துக்கொண்ட விடயத்தின் பல்வேறு அம்சங்களை வெவ்வேறாக விளக்கி, ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி, படிமுறை வளர்ச்சியில் கருத்துக்களை நிரற்படுத்தி, எழுதப்படும் பகுதி

முடிவுரை

எழுதப்பட்ட அம்சங்களின் ஒரு தொகுப்பாகும்.கட்டுரையின் பிரதான அம்சங்கள் முடிவுரையில் தொகுத்து வழங்கப்படும்.கட்டுரை ஒன்றின் முடிவிலேயே வாசகரின் அபிப்பிராயம் தீர்மானிக்கப்படுவதால் முடிவுரை பகுதி திட்டவட்டமானதாகவும் தெளிவானதாகவும் இருத்தல் சிறப்புடையது.

கட்டுரை எழுதும் முறை

1.திட்டமிடல்
2.வடிவமைத்தல்

திட்டமிடல்

நம்மால் எழுதப்படும் கட்டுரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிப்பது திட்டமிடல் ஆகும்.இதன் அடிப்படையிலேயே கட்டுரைக்கான சட்டகம் தீர்மானிக்கப்படுகிறது. 

அடங்கும் செயற்பாடுகள்
1. எழுதப்படும் விடயத்தை தெரிவு செய்தல்
2.குறித்த விடயத்தினுள் அடங்கும் அம்சங்களை இனங்காணல்
3.ஒழுங்குபடுத்தல்
4.அனைத்தையும் மனக்கண்ணில் நிறுத்தல்
5.சட்டகத்தை அமைத்தல்

வடிவமைத்தல்

சட்டகத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட அம்சங்களை எவ்வாறு எழுதுதல் வேண்டும் என்று அமைப்பது வடிவமைத்தல் ஆகும்.

உள்ளடங்கும் அம்சங்கள்

  • எளிமையாகவும், சகலருக்கும் விளங்கும் வண்ணம் தெளிவாகவும் அமைந்திருத்தல்
  • தெளிவான எழுத்தில் அமைதல்
  • குறியீடுகளை அனுசரித்து எழுதுதல்
  • ஒவ்வொரு அம்சங்களையும் தனித்தனி பந்தியாக பிரித்தெழுதுவதுடன் பந்திகளுக்கிடயே தொடர்பை பேணுதலும் வேண்டும்.
  • மொழிநடை பின்வருமாறு அமைதல் வேண்டும்.

மொழி  நடை பண்புகள் [*] 

இலக்கிய  நடை [1]

அறிவியல் நடை [2]


*உணர்ச்சி        1அதிகம்        2குறைவு
செறிவு

*சொல்                1அதிகம்        2இல்லை
அலங்காரம்

*கற்பனை          1அதிகம்        2இல்லை

*உட்பொருள்      1அதிகம்      2இல்லை
மறைபொருள்

*தர்க்க                  1குறைவு       2அதிகம்
முறைமை

*பகுப்பாய்வு      1இல்லை      2அதிகம்
 
*நேர்பொருள்    1குறைவு      2அதிகம்

*கலைச்சொல்   1குறைவு     2அதிகம்
பயன்பாடு

கட்டுரையில் அமைய வேண்டியவை

  • சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறுதல் வேண்டும்
  • வாசிப்பவர்களுக்கு இன்பம் தரல் வேண்டும்
  • பொருத்தமான சொற்களை கையாளல் வேண்டும்
  • ஆழ்ந்த கருத்துக்களை உடையதாக இருத்தல் வேண்டும்
  • பந்திகளை ஒழுங்குற அமைத்தல் வேண்டும்
  • எல்லோருக்கும் விளங்கக்கூடிய உதாரணங்களை சுட்டி விளக்குதல் வேண்டும்
  • பொருத்தமான குறியீடுகளை பயன்படுத்தல் வேண்டும்
  • சிறந்த பயன்தரக்கூடியதாக இருத்தல் வேண்டும்

கட்டுரையில் தவிர்க்கப்பட வேண்டியவை

  • பொருள் விளக்கமின்றி கூறுதல்
  • அளவுக்கதிகமான சொற்களில் கூறல்
  • விடயங்களை மீண்டும் மீண்டும் கூறல்
  • குற்றமுள்ள சொற்பிரயோகப் பயன்பாடு
  • சந்தேகம் ஏற்படக் கூறல்
  • முரண்படக் கூறல்
  • வெற்றுச் சொற்கள் இடம்பெறல்
  • கூறவந்த பொருளை விட்டு வேறொன்றை விளக்குதல்
  • சொல்,பொருள் என்பன நலிவடைந்து செல்லுதல்

கருத்துகள் இல்லை