header

அண்மையவை

மரபுப் பெயர்கள் 2 : தொனிகள், உள்ளீட்டு மரபுப்பெயர், கூட்டத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள், இலை மரபுச் சொற்கள்

 மரபுப் பெயர்கள் 2

மரபுப் பெயர்கள்


பகுதி ஒன்றின் ஊடாக ஆண் பெண் மரபுப் பெயர் ,இளமைப் பெயர்கள் என்பனவற்றை பார்த்தோம். இப்பகுதியின் ஊடாக ஒலி மரபு பெயர்கள் , பிஞ்சு மரபுப் பெயர்கள், வித்துக்களின் மரபுப்பெயர், உள்ளீட்டு மரபுப் பெயர்,  இலை மரபுப் பெயர், தொகுதி மரபுப்பெயர், கூட்டத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள் போன்ற பலவற்றை பார்க்கலாம்.


ஒலி மரபு பெயர்கள் | தொனிகள்

•  கரடியின் - உறுமும்
•  கழுதை - கத்தும்
•  நரி - ஊளையிடும்
•  சேவல் - கூவும்
•  காகம் - கரையும்
•  ஆடு - கத்தும்
•  புறா - குறுகுறுக்கும்
•  அணில் - கீச்சிடும்
•  பல்லி - சொல்லும்
•  பூனை - கத்தும்
•  பசு - கதறும்
•  சிங்கம் - கர்ஜிக்கும்
•  குரங்கு - அலப்பும்
•  குயில் - கூவும்
•  ஆந்தை - அலறும்
•  வானம்பாடி - பாடும்
•  எலி - கீச்சிடும்
•  யானை - பிளிறும்
•  தேனி - ரீங்காரமிடும்
•  பன்றி - உறுமும்
•  கோழி - கொக்கரிக்கும்
•  நாய் - குரைக்கும்
•  எருமை - எக்காளமிடும்
•  மயில் - அகவும்
•  குதிரை - கனைக்கும்
•  பாம்பு - சீறும்
•  தவளை - கத்தும்
•  ஓநாய் - ஊளையிடும்
•  புலி - உறுமும்
•  வண்டு - இரையும்
•  குருவி - கீச்சிடும்
•  கழுதை - கத்தும்
•  தேவாங்கு - அழும்
•  வாத்து - கத்தும்

பிஞ்சு மரபுப் பெயர்கள்

•  தென்னை - குரும்பை
•  மா - வடு
•  பலா - மூசு
•  கத்தரி - பிஞ்சு
•  வாழை - கச்சல்
•  பூசணி - பிஞ்சு
•  பனை - நுங்கு
•  வெண்டி - பிஞ்சு

வித்து மரபுப் பெயர்கள்

•  ஆமணக்கு - முத்து
•  மிளகாய் - வித்து
•  நெல் - மணி
•  தினை - மணி
•  கொய்யா - விதை
•  வேம்பு - விதை/கொட்டை
•  பலா,புளி - கொட்டை
•  கத்தரி - விதை
•  சோளம் - மணி
•  பாகல் /பூசணி - விதை
•  நிலக்கடலை - பருப்பு
•  பப்பாசி - விதை /கொட்டை 

உடல் உறுப்புக்கள் பற்றிய மரபுத் தொடர்களும் அதன் பொருள்களும்...

இலை மரபுப் பெயர்கள்

•  வாழை - இலை
•  மா - இலை
•  தென்னை - ஓலை
•  பனை - ஓலை
•  நெல் - தாள்
•  புல் - தாள்
•  கமுகு - ஓலை
•  ஈச்சை - ஓலை
•  தாளை - ஓலை
•  சோளம் - தாள் / தோகை
•  கரும்பு - தோகை

தொகுதி மரபுப் பெயர்கள்

•  பூ -கொத்து ,மஞ்சரி
•  வாழை - குலை
•  முந்திரி - குலை
•  ஈச்சை - குலை
•  பனை - குலை
•  தென்னை - குலை
•  மா - கொத்து
•  புளி - கொத்து
•  நெல் - கதிர்
•  சோளம் - கதிர்
•  திராட்சை - குலை

உள்ளீட்டு மரபு பெயர்கள்

•  நெல் - அரிசி
•  உளுந்து - பருப்பு
•  மா, வாழை - சதை
•  கற்றாளை - சோறு
•  வரகு, நெல் - அரிசி
•  கோதுமை - அரிசி
•  அவரை - பருப்பு
•  பலா, தோடை - சுளை
•  பயறு - பருப்பு
•  தினை - அரிசி

50 மரபுத் தொடர்களும் அதன் பொருள்களும்....


கூட்டத்தைக் குறிக்கும் மரபுச் சொற்கள்

•  அறிஞர் - அவை
•  நடிகர் - குழு
•  ஆசிரியர் - குழாம்
•  சனம் - கும்பல் / திரள்
•  மக்கள் - தொகுதி / கூட்டம்
•  மான் - கூட்டம்
•  எறும்பு - கூட்டம்
•  உடு - திரள்
•  ஆ, பசு - நிரை
•  மா - சோலை
•  திறப்பு / சாவி - கோர்வை
•  பூ - கொத்து / மஞ்சரி
•  தென்னை - தோப்பு
•  கல் - குவியல்
•  சேனை - திரள்
•  பாடகர் - குழு
•  தீவு - கூட்டம்
•  சுருட்டு - கட்டு
•  ஆடு - மந்தை
•  படை - அணி
•  ஆனை - பந்தி
•  நாடகம் - குழு /கோஷ்டி
•  புத்தகம் - அடுக்கு
•  மலை - தொடர்
•  கள்வர் - கூட்டம்
•  புல் - கற்றை
•  வைக்கோல் - கற்றை
•  நெல் - குவியல்
•  புகையிலை - சிப்பம் 
•  சலாகை - கட்டு
•  பல் - வரிசை
•  மாணவர் - குழாம்
•  தூண் - வரிசை

பிராணிகளின் மலங்களின் மரபுப் பெயர்கள்

•  பறவை - எச்சம்
•  யானை - இலத்தி / இலண்டம்
•  மாடு - சாணம்
•  எருது - சாணம்
•  குதிரை - இலத்தி / இலண்டம்
•  கழுதை - விட்டை
•  ஒட்டகம் - இலத்தி / இலண்டம்
•  ஆடு - புழுக்கை

பிராணிகள், தாவரங்களின் இளமைப் பெயர்கள் பற்றி அறிய.....

பிராணிகளின் ஆண், பெண் மரபுப் பெயர்களை அறிய....

1 கருத்து: