header

அண்மையவை

எதிர்ப்பாற் சொற்கள்

எதிர்பாற் சொற்கள்


ஒரு பாலை(ஆண் / பெண்) குறிக்கும் சொல்லுக்கு எதிரான பால் பொருளைத் தரும் சொல் எதிர்பாற்சொல் எனப்படும். இது இரண்டு வகைப்படும்.

    1. உயர்திணைக்குரிய எதிர்ப்பால் சொற்கள்
    2. அஃறிணைக்குரிய எதிர்ப்பாற் சொற்கள்

இப்பகுதியில் உயர்திணைக்குரிய எதிர்ப்பாற் சொற்கள் வழங்கப்பட்டுள்ளன அஃறிணைக்குரிய எதிர்ப்பாற் சொற்களை மரபுச் சொற்கள் பகுதியில் காணலாம்


    1. அப்பா -அம்மா
    2. அரசன் -அரசி
    3. அழகன் -அழகி
    4. அடியார் -அடியாள்
    5. அண்ணன் -அக்கா
    6. அரக்கன் -அரக்கி
    7. அன்னை -தந்தை
    8. அவன்- அவள்
    9. ஆண்டான் -ஆண்டாள்
    10. ஆயன் -ஆய்ச்சி
    11. ஆசிரியர் -ஆசிரியை
    12. ஆடவர் -பெண்டிர்
    13. இளவரசன் -இளவரசி
    14. இளைஞர் -யுவதி
    15. இடையன் -இடைச்சி
    16. இந்திரன் -இந்திராணி
    17. இயக்கன்- இயக்கி
    18. இறைவன் -இறைவி
    19. இடும்பன் -இடும்பி
    20. ஈஸ்வரன் -ஈஸ்வரி
    21. உத்தமன் -உத்தமி
    22. உழவன்- உழத்தி
    23. எசமான்- எசமானி, எசமாட்டி
    24. எயினன் -எயிற்றி
    25. ஒருவன் -ஒருத்தி
    26. கணவன்- மனைவி
    27. கண்ணாளன் -கண்ணாட்டி
    28. கள்ளன் -கள்ளி
    29. காவற்காரன் -காவல்காரி
    30. காதலன் -காதலி
    31. காமுகன் -காமுகி
    32. கிழவன் -கிழவி
    33. குமரன் -குமரி
    34. குயவன் -குயத்தி
    35. குருடன் -குருடி
    36. குரு- குருபத்தினி
    37. குறவன் -குறத்தி
    38. கூலிக்காரன் -கூலிக்காரி
    39. கொழுநன் -மனைவி
    40. சங்கரன் -சங்கரி
    41. சகன்- சகி
    42. சகோதரன் -சகோதரி
    43. சிற்றப்பன் -சின்னம்மை
    44. சிறுவன் -சிறுமி
    45. சீமான்- சீமாட்டி
    46. சீலவான் -சீலவதி
    47. சுந்தரன்- சுந்தரி
    48. செல்வன் -செல்வி
    49. செம்படவன்- செம்படத்தி
    50. செட்டி- ரெட்டியபட்டி
    51. சேவகன் - சேவகி
    52. ஞானவான்- ஞானவதி
    53. தச்சன்- தச்சிச்சி
    54. தந்தை -தாய்
    55. தபுதாரன் -விதவை
    56. தம்பி -தங்கை
    57. தமிழன் -தமிழச்சி
    58. தலைவன் -தலைவி
    59. தனவான் -தனவதி
    60. தர்மவான்- தர்மவதி
    61. தனயன்- தனயை
    62. தட்டான்- தட்டாத்தி
    63. தாசன் -தாசி
    64. தாத்தா- பாட்டி
    65. திருடன் -திருடி
    66. திருவாளன் -திருவாட்டி
    67. தூயவர் -தூயவள்
    68. தேவராளன் -தேவராட்டி
    69. தேவன்- தேவி
    70. தோழன்- தோழி
    71. நடிகன்- நடிகை
    72. நம்பி -நங்கை
    73. நல்லவன்- நல்லவள்
    74. நாட்டியக்காரன் -நாட்டியக்காரி
    75. நாயகன் -நாயகி
    76. நிபுணன் -நிபுணை
    77. பணக்காரன் -பணக்காரி
    78. பாட்டன் -பாட்டி
    79. பாடகன் -பாடகி
    80. பாக்கியவான் -பாக்கியவதி
    81. பாங்கன் -பாங்கி
    82. பாணன் -பாடினி,விறலி
    83. பாதகன் -பாதகி
    84. பாலகன்- பாலகி
    85. பிரான் -பிராட்டி
    86. பிரியன்- பிரியை
    87. பிதா -மாதா
    88. பிக்கு -பிக்குனி
    89. புண்ணியவான் -புண்ணியவதி
    90. புத்திரன்- புத்திரி
    91. புதல்வன் -புதல்வி
    92. பூரணன் -பூரணி
    93. பெருமான் -பெருமாட்டி
    94. பேரன் -பேத்தி
    95. பைத்தியக்காரன் -பைத்தியக்காரி
    96. பொன்னன் -பொன்னி
    97. மகன் -மகள்
    98. மச்சான் -மச்சாள்
    99. மச்சினன் -மச்சினி
    100. மணவாளன் -மணவாட்டி
    101. மருமகன் -மருமகள்
    102. மருத்துவன் -மருத்துவிச்சி
    103. மாணவன் -மாணவி
    104. மாதவன் -மாதவி
    105. மாமன் -மாமி
    106. முடவன் -முடத்தி
    107. மூதாளன் -மூதாட்டி
    108. மைத்துனன் -மைத்துனி
    109. வலைஞன் -வலைச்சி
    110. வண்ணான் -வண்ணாத்தி
    111. வாலிபன் -வாலை
    112. வித்தகன்- வித்தகி
    113. வீரன்- வீராங்கனை
    114. வேலைக்காரன் -வேலைக்காரி
    115. வேடுவன் -வேடுவிச்சி 

தமக்கினமில்லாத ஆண்பால் சொற்கள்

    •  அண்ணல்
    •  ஏந்தல் 
    •  செம்மல் 
    •  அமைச்சர்
    •  மகழ்நன்

தமக்கினமில்லாத பெண்பால் சொற்கள்

    •  பேதை
    •  பெதும்பை
    •  மங்கை 
    •  மடந்தை 
    •  அரிவை 
    •  தெரிவை

மரபுச் சொற்கள் பகுதிக்கு செல்ல >>>>

எமது தமிழ் களஞ்சியம் தளத்தினை அப்ளிகேஷன் வடிவில் தரவிறக்கம் செய்து மேலும் தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

 தமிழ் களஞ்சியம் அப்ளிகேஷனை தரவிறக்க இங்கே அழுத்துங்கள்>>>>

7 கருத்துகள்: