மரபுத்தொடர்கள் - உடல் உறுப்புகள் பற்றிய மரபுத்தொடர்களும் பொருள்களும்
அடி பற்றிய மரபுத்தொடர்கள்
- அடியொற்றுதல் - பின்பற்றுதல்
- அடிநகர்தல் - இடம்பெயர்தல்
- அடிபணிதல் - கீழ்ப்படிதல்
- அடி விளக்குதல் - தன் மரபை புகழ்பெறச்செய்தல்
- அடியிடுதல் - ஆரம்பித்தல்
கண் பற்றிய மரபுத்தொடர்கள்
- கண் வைத்தல் - விருப்பம் கொள்ளுதல்
- கண்வளர்தல் - நித்திரை செய்தல்
- கண்ணெறிதல் - கடைக்கண்ணால் பார்த்தல்
- கண்கலத்தல் - ஒருவரை ஒருவர் விரும்புதல்
- கண்மூடுதல் - இறத்தல்
- கண் திறத்தல் - அறிவுண்டாதல்
கழுத்து பற்றிய மரபுத்தொடர்கள்
- கழுத்துக்கொடுத்தல் - பிறர் துன்பத்தில் உதவுதல்
- கழுத்தறுத்தல் - நம்பிக்கை துரோகம் செய்தல்
- கழுத்திற்கட்டுதல் - வலிந்து திணித்தல்
- கழுத்தைக்கட்டுதல் - விடாமல் நெருக்குதல்
காது பற்றிய மரபுத்தொடர்கள்
- காது கொடுத்தல் - அவதானித்தல்
- காது குத்துதல் - ஏமாற்றுதல்
- காதில் ஓதுதல் - கோள் சொல்லுதல்
- காதைக்கடித்தல் - இரகசியம் கூறல்
கால் பற்றிய மரபுத்தொடர்கள்
- கால் பின்னுதல் - தடைப்படல்
- கால் பிடித்தல் - காலைப் பற்றிக் கெஞ்சுதல்
- கால் கொள்ளுதல் - ஆரம்பித்தல்
- காலைச்சுற்றுதல் - பற்றித் தொடர்தல், தொடர்ந்து பற்றுதல்
- காலாறுதல் - ஓய்ந்திருத்தல்
- கால் ஊன்றுதல் - நிலை பெறுதல்
- காலில் விழுதல் - மன்னிப்பு கேட்டல்
வயிறு பற்றிய மரபுத் தொடர்கள்
- வயிற்றை கட்டுதல் - செலவைச் சுருக்குதல்
- வயிற்றிலடித்தல் - சீவனத்தை கெடுத்தல்
- வயிறு வளர்த்தல் - எவ்வாறோ பிழைத்து கொள்ளுதல்
- வயிறு கிள்ளுதல்,வயிறு கடித்தல் - பசியுண்டாகுதல்
- வயிறு குளிர்தல் - திருப்தி அடைதல்
- வயிறு எரிதல் - பொறாமை கொள்ளுதல்
வாய் பற்றிய மரபுத்தொடர்கள்
- வாய் விடுதல் - வெளிப்படையாக கேட்டல்
- வாய் புலம்பல் - பிதற்றுதல்
- வாய் திறத்தல் - பேசத்தொடங்குதல்
- வாய்ப்பூட்டுப் போடுதல் - பேசாது தடுத்தல்
- வாயில் மண் போடுதல் - கேடு விளைவித்தல்
கை பற்றிய மரபுத்தொடர்கள்
- கை கழுவுதல் - முற்றாய் விலகல்
- கை கூடல் - அனுகூலமாதல்
- கையிடல் - ஆரம்பித்தல்
- கை நீட்டுதல் - அடித்தல்
- கைபிசைதல் - செய்வதறியாது திகைத்தல்
- கை தளர்தல் - வறுமையாதல்
- கை கொடுத்தல் - உதவி செய்தல்
- கை மிகுதல் - அளவு கடத்தல்
- கைகலப்பு - சண்டை
- கையளித்தல் - ஒப்படைத்தல்
செவி பற்றிய மரபுத்தொடர்கள்
- செவி கொடுத்தல் - கவனித்து கேட்டல்
- செவிக்கேறுதல் - கேட்பதற்கு இனிமையாக இருத்தல்
தலை பற்றிய மரபுத்தொடர்கள்
- தலைகாட்டுதல் - வெளிவருதல்
- தலை கீழாய் நடத்தல் - முறை தவறி நடத்தல்
- தலைக்கொழுப்பு - தான் என்ற அகந்தை
- தலைப்பாரம் - தான் என்ற அகந்தை
- தலை வீக்கம் - தான் என்ற அகந்தை
- தலைக்கணம் - தான் என்ற அகந்தை
- தலைகீழாய் நிற்றல் - பிடிவாதம் பிடித்தல்
- தலைப்படுதல் - மேற்கொள்ளுதல்
- தலைமறைவு - ஒளிந்திருத்தல்
தோள் பற்றிய மரபுத்தொடர்கள்
- தோளிலிருந்து செவிகடித்தல் - ஆதரிப்பவரை வஞ்சித்தல்
- தோள் மாற்றுதல் - பிறர் சுமையை தான் சுமத்தல்
- தோள் கொடுத்தல் - உதவி செய்தல்
நா பற்றிய மரபுத்தொடர்கள்
- நாக்கு வளைத்தல் - பழித்தல்
- நாக்கு நீழுதல் - அடக்கமின்றி பேசுதல்
- நாக்கு விழுதல் - பேச நாவெழாமல் போதல்
- நாக்கடைத்தல் - பேச முடியாது இருத்தல்
- நாக்குத்தவறுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்
- நாக்குப் புரளுதல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்
- நாக்குத்தப்பல் - பேச்சுறுதி தவறுதல் / பொய் சொல்லுதல்
பல் பற்றிய மரபுத்தொடர்கள்
பகுதி : 01
This was fantastic
பதிலளிநீக்குகசக்கிபிழிதல்
பதிலளிநீக்குபேச்சில் மட்டும் வீரம் தொனிப்பது
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள்
பதிலளிநீக்கு